புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

எனது தந்தையார் விட்டுச்சென்ற பணியை முன்கொண்டு செல்வேன்

ஆக்ரோஷத்திலிருந்து என்னை விடுவித்தவர் ஜனாதிபதி 
எனது தந்தையார் மக்களுக்காக நிறைவேற்ற திட்டமிட்ட வேலைத் திட்டங்களை முன் கொண்டு செல்ல வேண் டும்.
இதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன்.
ஆக்ரோஷத்தில் இருந்து என்னை விடு வித்து, சரியான பாதையில் கொண்டு சென்றவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே, மத்திய கொழும்பு ஸ்ரீ. ல. சு. கட்சி இணை அமைப்பாளர் ஹிருனிகா பிரேமச்சந்திர இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட ஸ்ரீல. சு. கட்சி


ஆறுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நேபாள இராணுவத் தளபதி ஜெனரல் கெளராவ் ஷம்ஷெர் ஜுங் பஹதூர் ரனாவுக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. விமான நிலையத்திலுள்ள விசேட பிரமுகர்களுக்கான புத்தகத்தில் அவர் கையொப் பமிடுகிறார். அருகில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கவும் காணப்படுகிறார்.

அதிமுக, கம்யூ,வுடன் நிதிஷ் கூட்டணி?

மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸட் கட்சிகள் அதிமுகவடன் கூட்டணி அமைத்து வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

    தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் நேடியாக வெளியாகும் "கோச்சடையான்"

இந்தியாவில் முதல்முறையாக  சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்பட 10 மொழிகளில் நேரடியாக வெளியாகிறது.

2 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர் அருகே நடக்க இருந்த 2 சிறுமிகள் திருமணத்தை ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தனர்.

    இருபது ஓவர் தொடரும் ஆஸ்திரேலியா வசம்

சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3-வது இருபது ஓவர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி 20 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று

ஜூரிச் செஸ்: ஆனந்த் - கருணா ஆட்டம் டிரா

ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இத்தாலியின் ஃபேபியானோ கருணாவுடனான ஜூரிச் செஸ் போட்டியின் 3-வது சுற்றை டிரா செய்தார்.
சிரிய ராணுவம் வெறியாட்டம்: 83 பேர் பலி

சிரியாவின் வடக்கு அலெப்போ மாநிலத்தில் சிரிய ராணுவம் ஹெலிகாப்ட மூலம் பல்வேறு இடங்களில் இருந்து வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த தாக்குதலில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
 செந்தமிழ் திருமறை வட மாகாணத்திலேயே உயரமான சிவபெருமானின் 21 அடி உயர தியான திருச்சொரூபத்திற்கான திருக்குடமுழுக்கு
சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் சிவதொண்டர் அமைப்பால் அமைக்கப்பட்ட வட மாகாணத்திலேயே உயரமான சிவபெருமானின் 21 அடி உயர தியான திருச்சொரூபத்திற்கான திருக்குடமுழுக்கு இனறு ஞாயிற்றுக்கிழமை செந்தமிழ்

புத்தூரில் கார்–லாரி மோதல்: திருத்தணியை சேர்ந்த 4 பேர் பலி


ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா மல்லவரம் கிராமத்தை சேர்ந்த மணமகள் லீலாவதி குடும்பத்தினர். 25 பேர் நேற்று இரவு மினிலாரியில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இன்று நடைபெறும்

எம்.வி.சன்.சி கப்பலில் கனடா நாட்டிற்கு அகதியாக சென்ற தர்மரத்தினம் நாடு கடத்தப்படும் அபாயம்!

எம்.வி.சன்.சி கப்பலில் கனடா நாட்டிற்கு அகதியாக சென்ற அருமைத்துரை தர்மரத்தினம் என்பவர் பெப்ரவரி 11 அன்று இலங்கைக்கு நாடுகடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார்.
அடுத்த பிரதமர் யார் என்பதை இப்போது விவாதிப்பது அர்த்தமற்றது : ஜெயலலிதா பேட்டி
மக்களவை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து அதிமுக போட்டியிடுகிறது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை


 புலம்பெயர் ஈழத் தமிழ்வாழ் மக்களும் அந்த ஓட்டெடுப்பில் பங்கெடுக்க வேண்டுமெனில் அவர்கள் வன்னிக்கோ, மட்டக் களப்புக்கோ, யாழ்ப்பாணத்துக்கோ, வல்வெட்டித் துறைக்கோ, மன்னாருக்கோ அனைவரும் போய் வாக்களிக்க முடியாது. அந்தந்த நாடுகளிலேயே அவர்களுக்கு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு, ஓட்டுப்போட வேண்டும் என்ற நிலையை ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் வழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்ற கருத்தை உலக அரங்கத்தில் முதன் முதலாக பிரஸல்சில் வைத்தது இந்த வைகோ மட்டும் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது’’. வை கோ 

 வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன்  மகள் ஜீ.மணிமேகலை-பிரகதீஸ்வரன் திருமண வரவேற்பு இன்று 03.02.2014 திங்கட்கிழமை, சென்னை-எழும்பூரில்
அமைச்சர்கள் உட்பட 60 பேர் ஐ.தே.கட்சியில் இணையத் தீர்மானம்
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் உட்பட 60 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
நிஷா பிரித்தானிய அரச தரப்புடன் பேச்சு! ஜெனிவாவில் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாட ஏற்பாடு
இலங்கைக்கு மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய  விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் நேற்று இலங்கையிலிருந்தவாறு லண்டன் பயணமானார்.
வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக பத்திநாதர் நியமனம்! விஜயலட்சுமி இடமாற்றம்
வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக மொனராகலை மாவட்டத்தில் தற்போது அரச அதிபராக கடமையாற்றும் ஏ.பத்திநாதர் நியமிக்கப்படவுள்ளதாகவும், தற்போது பிரதம
செய­லா­ள­ராகக் கட­மை­யாற்றி வரு­கின்ற திரு­மதி விஜ­ய­லட்­சுமி ரமேஷ் நீக்­கப்­ப­ட­வுள்ளார் எனவும் அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.
வடக்கு மாகாண சபையில் மக்­களால் தெரி­வு­ செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்கள் கட­மையைப் பொறுப்­பேற்று நான்கு
ராஜபக்ச மீது சர்வதேச விசாரணை கோரி தமிழகமெங்கும் 20ம் திகதி ஆர்ப்பாட்டம்! நெடுமாறன்
ஈழத் தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்த ராஜபக்ச மீது விசாரணை நடத்த தற்சார்பு பன்னாட்டு புலனாய்வு ஆணையத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 20ம் தேதி தமிழக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என உலகத்
இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது: ஜெயலலிதா கண்டனம்
தமிழக சட்டப்பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மத்திய அரசு புறக்கணித்து வருவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார்தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு
கந்தசாமி கமலேந்திரன் ஈபிடிபி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து வட மாகாண சபை உறுப்பினரும் எதிர்கட்சித் தலைவருமாகிய கந்தசாமி கமலேந்திரன் நீக்கப்பட்டுள்ளார்.16.01.2014ம் திகதி கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில், ஏற்கனவே கட்சில் இருந்து இடைநிறுத்தப்பட்ட

பேரதிர்ச்சியில் சிறிலங்கா! கைவிட்டது இந்தியா – ஜெனிவாவில் உதவ மறுப்பு

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிக்க எந்த வகையிலும் உதவ முடியாது என்று இந்தியா கைவிரித்து விட்டதாக எக்கொனமிக் ரைம்ஸ்
யாழ்பாணத்தில் 21 அடி உயரமான சிவபெருமான் சிலை இன்று குடமுழுக்கு செய்யப்பட்டது.
Foto: சிறிலங்காவின் வடபகுதித் தலை நகரான யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக வீதி சமிக்ஞை விளக்குகள் ஒளிரத் தொடங்கியுள்ளன!
சிறிலங்காவின் வடபகுதித் தலை நகரான யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக வீதி சமிக்ஞை விளக்குகள் ஒளிரத் தொடங்கியுள்ளன!
கனடாவின் தலைநகரில் தைப்பொங்கல் விழாவும் தமிழ் மரபுத் திங்களும்-ஆக்கம்: அ.பகீரதன்
கனடாவின் தலைநகராகிய ”ஒட்டாவா(Ottawa)” நகரில் முத்தமிழ் கலாமன்றம் பொங்கல் விழாவை வருடா வருடம் மாபெரும் நிகழ்வாக கொண்டாடி வருகின்றது. புலம்பெயர்ந்த வாழ்விலும், தமிழரின் மொழி, கலை, கலாசாரம்,
கேள்வி: நீங்கள் நாத்திகர் என்பதை அறிவேன். நீங்களும், மற்றவர்களைப் போலவே இந்து மத நம்பிக்கைகளை மட்டும் விமர்சனம் செய்கிறீர்கள். 
மற்ற மதங்களில் உள்ள மூட நம்பிக்கையைச் சுட்டிக்காட்ட என்ன தயக்கம்? பதில்: என் அம்மா தீவிர கிறிஸ்டியன். காட் பிளஸ் யூ மை சைல்டுனு அவங்க சொல்லும்போது ஒரு சிஸ்டர் மாதிரியே இருக்கும். சமீபத்தில் எங்கள் தோட்டத்துக்கு வெள்ளை அங்கி போட்டுக்கொண்டு ஒரு ஃபாதர் வந்திருந்தார். எங்க அம்மா வாராவாரம் போகிற சர்ச் பாதர் அவர். என் தோட்டத்தில் இருக்கின்ற செடிகளை ஆசீர் வாதம் செய்வதற்காக வந்தி ருக்கேன் என்று சொன்னார். எல்லா செடிகள் மேலேயும் லேசா தண்ணியத் தெளிச்சுட்டு, கடவுள் உன் தோட்டத்தை
 தற்போதுள்ள சமாதானம் தொடர வேண்டும்; நேபாள இராணுவ அதிகாரி யாழில் தெரிவிப்பு 
யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாரிய அபிவிருத்தி நாட்டில் ஏற்பட்டுள்ளது எனவே மேலும் அபிவிருத்திகள் ஏற்பட தற்போதேய சமாதானம் தொடர்ந்தும் நிலைக்க வேண்டும் என நேபாள நாட்டு இராணுவ
இலங்கையை அடியோடு கைவிட்டது இந்திய அரசு; பீரிஸிடம் குர்த் நேரில் தெரிவிப்பு 
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க எந்த வகையிலும் உதவ முடியாது என்று இந்தியா கைவிரித்துள்ளது. 
கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் இடங்களை அடையாளம் கண்டு தோண்டுங்கள் - நல்லாட்சிக்கான மக்கள் கூட்டமைப்பு 
கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இடங்களை அடையாளங்கண்டு அவற்றைத் தோண்டுவதோடு கடத்தல், கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்க
 தற்போதுள்ள சமாதானம் தொடர வேண்டும்; நேபாள இராணுவ அதிகாரி யாழில் தெரிவிப்பு 
யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாரிய அபிவிருத்தி நாட்டில் ஏற்பட்டுள்ளது எனவே மேலும் அபிவிருத்திகள் ஏற்பட தற்போதேய சமாதானம் தொடர்ந்தும் நிலைக்க வேண்டும் என நேபாள நாட்டு இராணுவ உயரதிகாரி
 ஜேவிபியின் புதிய தலைவராக அநுர குமார திஸாநாயக்க தெரிவு 
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) புதிய தலைவராக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் ஏழாவது தேசிய மாநாடு இன்று சுகததாச

ஆம் ஆத்மி அரசுக்கு பின்னி 48 மணி நேர கெடு

தில்லி அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 48 மணி நேர கெடு விதித்து ஆம் ஆத்மி அதிருப்தி எம்.எல்.ஏ. கெடு விதித்துள்ளார். மேலும் அக்கட்சியைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களை திங்கள்கிழமை

    ஊழல் புகாரை நிரூபிக்காவிட்டால் பதவி விலக தயாரா .கேஜரிவாலுக்கு கபில் சிபல் சவால்

என் மீதான ஊழல் புகாரை 48 மணி நேரத்தில் நிரூபித்தால் அடுத்த கணமே பதவி விலகுகிறேன்; ஆனால், நிரூபிக்கத் தவறினால் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயாரா? என தன் மீது புகார் கூறிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு
மக்களுடன் கூட்டணி அமைத்து திமுக மகத்தான வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின் 
பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணத்தை மு.க.ஸ்டாலின் இன்று நடத்தி வைத்தார்.மணவிழாவில் அவர் பேசியபோது,   ‘’தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்று
சமரசம் ஏற்பட்டுவிட்டது : அழகிரி பேட்டி
மு.க.அழகிரி இன்று சென்னை வந்தார்.  கடந்த 30ம் தேதி மதுரையில் அவருடைய பிறந்த நாள் விழாவின்போது காயம் அடைந்த கருணாகரன் என்கிற தொண்டர் வீடு ஜாபர்கான்பேட்டையில் உள்ளது.   அங்கு சென்று கருணாகரனை பார்த்து
கூட்டணி கிடையாது - தனித்துதான் போட்டி :தொண்டர்கள் கருத்து - விஜயகாந்த் ஏற்பு
தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாடு இன்று மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெற்றது.  விழுப்புரம் மாவட்டம்  உளுந்தூர்பேட்டை எறஞ்சியில் நடைபெற்றது. 
பிப்ரவரி 4ல் மதிமுக பொதுக்குழு :முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
திண்டுக்கல்லில் ம.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,   ‘’வருகிற 8–ம் தேதி சென்னை வண்டலூரில் பாரதீய ஜனதா
ஜெனிவாவில் வெற்றி நிச்சயம்-மனித உரிமைகள் மையம் 
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி காலம் கடத்தினாலும், இன்று தொடர்ச்சியான இரண்டு கண்டனப் பிரேரணை, ஐ. நா. மனித உரிமை சபையில் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு எதிராக சட்ட நடவடிக்கை -சட்டத்தரணிகள் அமைப்பின் தேசிய ஒன்றியம் 
வடமாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் அமெரிக்கப் பிரேரணை பின்வாங்கப்படுமா?
இதோ அண்மித்துக் கொண்டிருக்கிறது ஜெனிவாவுக்கான நாட்கள்……….இலங்கை அரசாங்கத்திற்கு இது புதிதல்ல, எனினும் இம்முறை இலங்கை அச்சத்துடனேயே இருந்து வருகிறது.வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் தாம் மாட்டிக் கொள்வோம்
சனல்4 காணொளிக்கு எதிராக இலங்கை அரசின் காணொளி
பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான காணொளிக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள 20 நிமிடங்கள் ஓடக் கூடிய காணொளி ஒன்றை இலங்கை அரசாங்கம் தயாரித்துள்ளது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது
யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருட காலத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மிக அதிகமாக மீறப்பட்டுள்ளன என்ற அமெரிக்காவின் கருத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய
கனிமொழி திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

திமுக எம்.பி. கனிமொழி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட வர்த்தக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொம்பே பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் மிரிஹானை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், மெல் குணசேகரவின் கையடக்க தொலைபேசி சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

2 பிப்., 2014

மார்க்கெட் உச்சத்துக்குச் சென்றதால், தற்போது கை நிறையப் படங்கள் காத்திருக்கின்றன. நயன்தாராவுக்கு
தற்போது சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சிம்புவுடன் நடிக்க ஒப்புக் கொண்டு கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இருவரும் நடித்த காட்சிகள் சமீபத்தில்
கடலில் கப்பல்கள் செல்லும்போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் ரயில் பாலம்  பிப்ரவரி 24 ஆம் தேதியுடன் நூறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதனையொட்டி, ரயில்வே நிர்வாகம் நூற்றாண்டு விழாவை அதே நாளில் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது.
 ராமேசுவரம் தீவு ஒரு காலத்தி

ரஷியாவில் சோச்சி ஒலிம்பிக்ஸ்: பாதுகாப்புக்கு 2 அமெரிக்க போர்க்கப்பல்கள்

ரஷியாவின் சோச்சியில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு போர்க்கப்பல்கள் கருங்கடல் பகுதிக்கு அனுப்பப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியா ஜெனீவா பேச்சுவார்த்தை.   முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது 
சிரியா விவகாரத்தில் ஆக்கபூர்வமான முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது ஜெனீவா பேச்சுவார்த்தை. எனவே, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி பிப்ரவரியில் நடைபெறுமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் ரொனால்டினோ அந்நாட்டு கிளப் அணியான அட்லெடிகோ மினீரியாவுடனான ஒப்பந்தத்தை ஓராண்டு நீட்டிப்பு செய்துள்ளார்.
2002 உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வீரரான ரொனால்டினோவுடன், கடந்த டிசம்பரில் கிளப் உலகக்
ஜூரிச் செஸ் போட்டியின் 2-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவிடம் தோல்வியடைந்தார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப் 1 பிரிவில் சீன தைபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது.
வெள்ளிக்கிழமை போதிய வெளிச்சமின்மை காரணமாக சோம்தேவ் - தைபேயின் டி சென் மோதிய 2-வது ஒற்றையர் பிரிவு ஆட்டம் 6-7, 7-6, 1-6, 6-2, 7-7
திமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்தால், அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்வோம் 2021 தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
  திருச்சியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களின் இலக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்தான். 2016 தேர்தலில் போட்டியிடுவோம். அடுத்து 2021
ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட ஊழல் அரசியல் வாதிகள் பட்டியலில் நரேந்திர மோடி சோனியாகாந்தி
ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட ஊழல் அரசியல் வாதிகள் பட்டியலில் சனிக்கிழமை இன்று நரேந்திர மோடி மற்றும் சோனியாகாந்தியின் பெயரையும் சேர்த்துள்ளது.
இடிந்தகரை அறப்போராட்டம் நீதிக்கான போராட்டம் என்றும், அதற்கு மதிமுக முழு ஆதரவு அளிக்கும்-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழ்நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கூடங்குளம் அணுஉலை அகற்றப்பட வேண்டும். அப்பகுதியில் வாழுகின்ற இலட்சோப இலட்சம் மக்களின் உடல் நலனையும், உயிரையும்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற புதிய சாதனை படைத்த டோனி

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சிறப்பை இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் தொடர் தோல்வி: ஆண்டி பிளவர் பதவி விலகல்

சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, எல்லாப் போட்டிகளிலும் அவுஸ்திரேலியாவிடம் தோற்ற நிலையில் அந்த அணியின் பயிற்சியாளரான ஆண்டி பிளவர் தனது பதவியிலிருந்து விலகி உள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் வீரர்களுக்கு கிராக்கி

இந்திய அணியில் இதுவரையிலும் இடம்பெறாத ஆனால் உள்ளூர் தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.7வது ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வருகிற 12,13ம் திகதிகளில் நடைபெற உள்ளது.
33 ஆண்டுகளுக்கு பின் மிக மோசமான தோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்தியா மிக மோசமாக தோல்வி அடைந்தது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
 சிறிலங்காவில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகளின் விசேட அதிகாரி நியமனமா? 
சிறிலங்காவில் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க விசேட ஐக்கிய நாடுகளின் விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்ப் பொலிஸ் உத்தியோகஸ்தர் விபத்தில் பலி 
யாழ். தீவகம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்துள்ளார்.
இலங்கை மீதான சர்வதேச விசாரணையில் மாற்றம் எதுவுமேயில்லை - நிஷா தேசாய் பிஸ்வால் 
போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால்,
இராஜினாமா செய்த கிறிஸ் நோனிஸ்!- ஏற்க மறுத்த ஜனாதிபதி
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளித்ததாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவாவில் இலங்கைக்கு உதவ இந்தியா மறுப்பு - எக்கொனமிக் ரைம்ஸ்
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிக்க எந்த வகையிலும் உதவ முடியாது என்று இந்தியா கைவிரித்து விட்டதாக எக்கொனமிக் ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது
ஜெனிவாவில் கடுமையான பிரேரணை கொண்டு வர அமெரிக்கா முயற்சிக்கும்! கூட்டமைப்பிடம் நிஷா
போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்றல்லாமல் இம்முறை மிகக் கடுமையான
காணாமல்போனோரின் உறவுகளை நிசா சந்தித்தார்! அனந்தி சசிதரனுடனும் இரகசிய பேச்சு! - வலிவடக்கு பிரதேசசபை துணைத் தவிசாளர் சஜீவன் சந்திப்பு.
யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் போரின் நிறைவில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்
அதிமுக உள்ளிட்ட 10 கட்சிகள் ஆதரவு: பிரகாஷ் காரத்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் தங்கள் முயற்சிக்கு அதிமுக, சமாஜ்வாதி கட்சி, பீஜு ஜனதா தளம், மதசார்ப்பற்ற ஜனதா தளம்
ஊழல் தலைவர்கள் பட்டியல்! அரவிந்த கெஜ்ரிவாலுக்கு நிதின் கட்காரி நோட்டீஸ்!
டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் ஊழல் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளார். அவரது ஊழல் பட்டியலில் பாரதீய ஜனதா முன்னாள் தலைவர் நிதின் கட்காரி
உலக அழகிகளின் வரிசையில் ஐஸ்வர்யாவுக்கு 4வது இடம்
ஹாலிவுட்பஸ் என்ற இணையதளம் நடத்திய உலகில் வாழும் அழகான பெண்களின் பட்டியலில் இந்தியாவின் ஐஸ்வர்யா ராய் 4வது இடத்திலும், இந்தி நடிகை தீபிகா படுகோனே 29வது இடத்தையும்
மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை! ஆம் ஆத்மி அறிவிப்பு!
டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி செயற்குழு கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட்டார். இதில் காங்கிரஸ் துணைத்தலைவர்
மரண தண்டனை குறைப்பு: இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் பாராட்டு
கைதிகள் 15 பேரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ள இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவில் அழுத இந்திய தமிழ் குழந்தையை பணிப்பெண், தரையில் வீசி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (33) அவரது மனைவி தேன்மொழி (24). தமிழகத்தைச் சேர்ந்த இவர்களது 19 மாத குழந்தை ஆதியன்.
பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், கிஞ்ஜல் படேல் (27) என்ற பெண்ணை குழந்தையை

விஜய் ரீவி சுப்பர் சிங்கர் 4 வெற்றியாளர் திவாகர்

கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக விஜய் ரீவி இல் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் 4 பைனல் இன்று நிறைவுக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் பல நூற்றுக்கணக்கானோர் பங்குகொண்டு  ஆரம்பித்த இச் சுப்பூர் சிங்கர் யூனியர் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கடந்த

1 பிப்., 2014

தமிழன் வாழாத ஒரு நாடு இல்லை. ஆனால் இன்று தமிழர்க்கென்று ஒரு நாடில்லை!
உலகெங்கும் அகதியாக சென்ற தமிழர்களில் பெரும்பாலானோர் அந்தந்த நாடுகளில் அரசியல் தலைமைகள் ஏற்கும் அளவும் பல்வேறு வளர்ச்சியின் சிகரங்களை தொடுமளவும் முன்னேறி வந்துள்ளனர். அந்த தேசங்களின் நீரோட்டத்தில் கலந்து நல்ல பிரசைகளாக வாழ்ந்து அந்த

சதாபிரணவனின் "God Is Dead" குறும்படம் உங்களது வாக்களிப்புக்காக ...

பிரான்ஸ் இன்  பிரபலமிக்க வங்கியான "BNP Paribas "ஆதரவில் நடைபெறும்  Mobile film festival இல் 710 குறும்படங்கள் பங்குபற்றி  அதில் 50 குறும்படங்கள் தெரிவு
ஆவா குழுவைச் சேர்ந்தவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
யாழில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஆவா குழுவினர் தொடர்பான விசாரணை இன்று மீண்டும் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
சர்வதேச விசாரணையே தேவை நிஷாவிடம் கோரும் கூட்டமைப்பு; கொழும்பில் இன்று இரவு விசேட சந்திப்பு 
"இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே தேவை. இதுவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப்

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு புதிய அதிகார சபை

அதிவேக நெடுஞ்சாலை அதிகார சபை யொன்றை ஸ்தாபி ப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்பொழுது திறக்கப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள சகல அதிவேக நெடுஞ்சாலைகள் தொடர்பிலும் செயற்படும் வகையில் இந்த அதிகார சபை உருவாக்கப்படவுள்ளது.
கொழும்பு கட்டுநாயக்க மற்றும்

தென் சூடானுக்கான தற்காலிக தடை நீக்கம்

இன்று முதல் வேலைவாய்ப்புக்காக இலங்கையர் செல்லலாம்
திமுக அழிந்துவிடும்: சுப்ரமணிய சுவாமி

அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்துவிடும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக சீட் தர ரெடியானால் நான் போட்டியிட ரெடி: சரத்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சீட் தந்தால் போட்டியிடத் தயாராக இருப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
நிஷா தேசாய் - ஜீ.எல்.பீரிஸ் சந்திப்பு- இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சி நிரல் இல்லை என்கிறார் நிஷா
இலங்கை வந்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்ஸை அவரது அமைச்சில் சந்தித்தார்.இங்கு கருத்து வெளியிட்ட பிஸ்வால்,
வடக்கு கிழக்கு ஆயர்களை சந்திக்க விரும்பும் ஜனாதிபதி
யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆயர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றனவடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து ஆயர்களுடன் கலந்துரையாட ஜனாதிபதி விரும்புவதாகவும்,
அழகிரிக்கு அழைப்பு விடுத்துள்ள காங்கிரஸ்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரிக்கு காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.
திமுகவில் இருந்து தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி நீக்கப்பட்டதில் இருந்தே, ஆதரவாளர்கள் பயங்கர கோபத்துடன் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
லண்டனில் இடம்பெறும் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு எதிரான மாநாடு
தமிழர் தாயகத்தில் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு எதிரான மாநாடு பிரித்தானியப் பாராளுமன்றின் இலக்கம் 14 ஆம் அறையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
திமுக மாநில மாநாட்டில் 25 ஆயிரம் மாணவரணியினர் சீருடையுடன் பங்கேற்பு
திமுக மாநில, மாவட்ட மாணவரணி கலந்துரையாடல் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்தார். கோவை கணேஷ்குமார், குத்தாலம் அன்பழகன், மதுரை மகிழன்
சாமியார் அசராம் பாபுவுக்கு 10 ஆயிரம் கோடி சொத்து!
 டெல்லி, ராஜஸ்தான், குஜராத், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் வைத்துள்ள பிரபல சாமியார் அசராம் பாபு மீது உ.பி.யை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் புகார் கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில்
ஈழத்தின் விடியலுக்காக ஒன்றுகூடிக்குரல் எழுப்ப இருக்கும் நிகழ்வில் கட்சிக் கொடிகளைத் தவிர்க்க வேண்டுகிறேன் : வைகோ
இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு 26–ந்தேதி ஒன்று கூடி குரல் எழுப்புவோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: பரிசுப் பொருள்கள் குறித்த மனு மீது 3-இல் தீர்ப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சென்னை கிழக்கு அபிராமபுரத்தில் கைப்பற்றப்பட்ட 144 குறியிடப்படாத பரிசுப் பொருள்களை திரும்ப ஒப்படைக்கக்

    வேலைவாய்ப்புக்கு தனி இணையதளம்: பேரவையில் ஆளுநர் உரையில்அரசு அறிவிப்பு

வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும்

டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்

டீசல் விற்பனையால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்யும் வகையில், மாதந்தோறும் 50 காசுகள் வரை விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது அந்த

ஊழல்வாதிகள் பட்டியல்: கெஜ்ரிவாலுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல்வாதிகள் என்று பலரது பெயரை இன்று வெளியிட்டார். அதில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ad

ad