புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2014


திமுக தனியார் நிறுவனமாக ஆகிவிட்டது: தூத்துக்குடி பிரசாரத்தில் ஜெயலலிதா குற்றச்சாட்டு
கழகமே குடும்பம் என்று அண்ணா காலத்தில் இருந்த திமுக, தற்போது குடும்பமே கழகமாக மாறிவிட்டதாகவும்,  ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் தனியார் நிறுவனமாக திமுக ஆகிவிட்டதாக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டி உள்ளார்.

 காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்ததால் காங்கிரசுக்கு சப்போர்ட்டாகத்தான் பேச முடியும் என்று மு.க. அழகிரி கூறினார்.
டெல்லி, சென்னை என பரபரப்புப் பயணங்களை முடித்துவிட்டு இன்று மதியம் மதுரை வந்தார் முன்னாள் மத்திய அமைச்சர்ர் மு.க.அழகிரி. அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் கணிசமாக
மோடி பிரதமராக பெரும்பான்மையோர் ஆதரவு: அதிமுக -29, திமுக-5, தேமுதிகவுக்கு 2 இடங்கள்
தேசிய அளவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு 37.7 சதவீத பேரும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு
காங்கிரசுக்கு 100 இடங்கள் என்பது வேடிக்கையானது: ராகுல் காந்தி
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 100 இடங்கள் தான் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: 2 பேரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை!
புதுடெல்லி: ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில்,  2 பேரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.கடந்த 2012 டிசம்பர் 16 ஆம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த மாணவி 2012 டிசம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார்.

வாரணாசியில் போட்டியிடுகிறார் நரேந்திர மோடி

பாஜகவின் 4வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இதன்படி, பாஜகவில் தொண்டர்கள் பலரும் எதிர்பார்த்தபடி, உத்திரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி

தேர்தலில் ஆதரவு தருமாறு கேட்டேன்! மு.க.அழகிரியை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. பேட்டி!
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சனிக்கிழமை மதியம் சென்னையில் இருந்து மதுரை திரும்பினார். மு.க.அழகிரியை, தேனி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜெ.எம்.ஆரூண் சந்தித்தார். மு.க.அழகிரி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

15 மார்., 2014


ஜெயலலிதா பா.ஜ.க.வோடு சேரும் முயற்சியில் உள்ளார்: தா.பாண்டியன்
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

பாஜக, அத்வானி பற்றி ஏன் பேசவில்லை? ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
திமுக, காங்கிரஸ் கட்சியை பற்றி விமர்சிக்கும் ஜெயலலிதா, பாஜகவைப் பற்றி குறிப்பாக அத்வானி பற்றி ஏன் பேசவில்லை என திமுக பொருளாளள்

காலி - மாத்தறை கடுகதி நெடுஞ்சாலை  ஜனாதிபதியினால் திறப்பு
தென் கடுகதி நெடுஞ்சாலை பாதையின் காலி முதல் மாத்தறை வரையான பாதை ஜனாதிபதி மகிந்த
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமைய சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில் நவநீதம்பிள்ளையுடன் இணைந்து அமெரிக்க அதிகாரிகள்

ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் 26 ம் திகதி அமெரிக்கா சமர்ப்பிக்க உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமைய சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள்,

இந்த செய்தியை  எமது இணையம் சுமார் 36 மணித்தியாலங்களுக்கு முதலே  வெளியிட்டிருநதது வாசகர்கள் அறிந்ததே .எந்த இணையைததிலும் வராத செய்தியாக அது அப்போது இருந்தமை பெருமைக்குரியது .
239 பயணிகளுடன் சென்ற விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்: மலேசிய நஜிப் ரஸாக் பேட்டி
விமானம் காணாமல் போனது குறித்து மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
வரலாறு காணாத அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ஐயாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாம். அதிசயமான வளர்ச்சி இது.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் இல்லை ஆனால் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது,

Game Over - ஜெயக்குமாரி பூசாமுகாமில் - விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு - 
14 மார்ச் 2014

Game Over - ஜெயக்குமாரி பூசாமுகாமில் - விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு -

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண் ஜெயக்குமாரி 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அவரது 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13.03.14) பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பெரும் எடுப்பிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற பெண்ணும், அவருடைய 14 வயதுடைய மகளும் இன்று வெள்ளியிரவு (14.03.14) கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

தாயாராகிய ஜெயக்குமாரிக்கு 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மேல் விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரம், அவருடைய 14 வயது மகளாகிய விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்திய தேவைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி ஒருவரைத் தேடிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது அந்த நபர் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததையடுத்து, அந்த உத்தியோகத்தர் காயமடைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரால் தேடப்பட்டுவரும் குற்றவாளி ஒருவரைத் தமது வீட்டில் தங்க வைத்திருந்தார் என்பதற்காகவே, விஜயக்குமாரி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு கவலை

இதேவேளை, வியாழன் பிற்பகல் முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் வரையில் இராணுவத்தினர் மற்றும் பொலிசாரினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த விஜயக்குமாரியின் வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டிருப்பதாகவும், சுற்றிவளைப்பு காரணத்தினாலும் பெண்களான தாயும் மகளும் கைது செய்யப்பட்டு எங்கு வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற விபரம் தெரியாத நிலை நீடித்திருந்ததாலும், அந்தப் பகுதியில் பதட்டம் நிலவியதாக, அங்கு சென்று திரும்பிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற சம்பவத்திற்கும், இந்தப் பெண்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் குற்றமற்ற அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரியுள்ளார்
 ஜெயக்குமாரி பூசாமுகாமில் - விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு 
Game Over - ஜெயக்குமாரி பூசாமுகாமில் - விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு -
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண் ஜெயக்குமாரி 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அவரது 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13.03.14) பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பெரும் எடுப்பிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்ட பாலேந்திரன்
பயெர்ன் மியூனிச் (முன்சென் ) தலைவர் வரி ஏய்ப்புக்காக மூன்றரை வருடங்கள் சிறை 
ஜெர்மனியின் பிரபலமானா உலக புகழ் மிக்க கழகமான பயெர்ன் முன்செனின் தலைவரும் பழம்பெரும் வீரருமான உளி ஹோனேஷ் கறுப்புப் பணமாக வருமானம் பெற்றதாக வும்  வரி கணக்கில் அதனை சேர்க்காமல் மறைத்தமைக்காகவும் மூன்றரை வருடங்கள் சிறை செல்ல வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது .இவரது சட்டத்தரணி இந்த தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செய்ய விரும்பிய போதும் தனது குற்றத்தை ஏற்று சிறை செல்வதாகவும்  கழகத்தின் சகல பொறுப்புகளில் இருந்தும் இராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார்.1972 இல் ஐரோப்பிய சமபியனாகவும்  1974 உலக சாம்பியனாகவும் வந்த போது ஜெர்மனி வீரராக விளையாடிய இவர் இந்த கழகத்த்தின் தலைவராக இருந்து சிறப்பாக வழிநடத்தி வந்தவர் .

images-4கிளிநொச்சி இரணைமடுக்குளத்திலிருந்து நிரம்பி வடியும் நீரை நன்னீராக்கி யாழ் குடாநாட்டிற்கு வழங்குவதை நாமும் சரி கிளிநொச்சி விவசாயிகளும் சரி எதிர்க்கவில்லை. என வடமாகாண கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.-நன்றி அதிரடி 
நேற்று காலை 11மணியளவில் இடம்பெற்ற உலக உணவு திட்டம் தொடர்பிலான ஆய்வொன்று யாழ். கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

hirunika_1

என்னைப்பற்றி மோசமான செய்திகள் இணையத்தளங்களில் வெளிவருகின்றன

என்னுடைய தந்தையின் கொலை வழக்கில் தமக்கு சாதகமான தீர்ப்பு கிட்டுமேயானால் இந்த நாட்டில் சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்பட்டிருப்பதற்கு
1
தலைப்பைச் சேருங்கள்

சிறப்பாக இடம்பெற்ற சுவிஸ் திசினோ மாநில தமிழ் கலைமாலை 2014 

சுவிட்சர்லாந்தில் இத்தாலி மொழி பேசும் மாநிலமான திசினோவில் வாழும் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட திசினோ தமிழ் கலைமாலை நேற்று மாலை சான் அன்ரொனினோ நகரில் உள்ள sala Multiuso மண்டபத்தில் நடைபெற்றது.

பாரிசில் பொதுப் போக்குவரத்து முற்றிலும் இலவசம்

பரீஸ் மற்றும் அதன் புறநகரங்களில் வளி மண்டலம் மிகவும் மாசடைந்துள்ளது. இதன் காரணமாக அந்த நகரம் மாசுபடுதலின் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஃப்ரான்சில்

சுவிஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரருக்கு மீண்டும் இரட்டை குழந்தைகள்

சுவிஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரருக்கு மீண்டும் இரட்டை குழந்தைகள் பிறக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் பி.என்.பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சானியா மிர்சா- செக் குடியரசின் காரா பிளாக் ஜோடி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 
மகளிர் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் சானியா-காரா பிளாக் ஜோடி, செக் குடியரசின் லூசி ஹரடெக்கா-


சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து, காஷ்யப் காலிறுதிக்கு தகுதி
சுவிஸ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி.சிந்து, காஷ்யப் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர். 

4 மார்., 2014

7 பேர் விடுதலை: மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு வாதம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மூங்கிலாற்றில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகள் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டவையாம் : தெரிவிக்கிறார் பொலிஸ் பேச்சாளர்

முல்லைத்தீவு மூங்கிலாற்று பகுதியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் புதைக்கப்பட்டவை என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை உறுப்பினர்கள்லிங்கநாதன்,ரவிகரன்  மாமடு , பழம்பாசி மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மாமடு, பழம்பாசி கிராமங்களுக்கு விஜயம் செய்த வடமாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன் மற்றும் லிங்கநாதன் ஆகியோர் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.
பளையை வந்தடைந்தது யாழ்தேவி
கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி சொகுசு ரயில் இன்று காலை பளை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
சர்வதேச விசாரணை கோரி ஐ.நாவில் குவியும் அழுத்தம்; ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் தீவிரம்
 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமான நிலையில் இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்து ஆரம்பத்திலேயே கண்டனங்களும், கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
மீளமைப்பு விடயங்களை சரிவர செய்யாமையால்   சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்போம்!- கனடா
மறுசீரமைப்பு மற்றும் மனித உரிமை விடயங்களில் இலங்கை அரசாங்கம் தோல்வி அடைந்திருப்பதாக, கனடாவின் இராஜாங்க (வெளிவிவகாரம்) அமைச்சர் லின்னெ யலீச் தெரிவித்துள்ளார்.
மியன்மாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இரு நாடுகளின் தலைவர்களும் இரு நாடுகளுக்கிடையலான பல முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இருதரப்பு போர்க்குற்றம் தொடர்பாக ஜெனீவாவில் நவிபிள்ளையின் வரைபு விநியோகம் (அறிக்கை இணைப்பு) வரைபை அமெரிக்கா, பிரித்தானியா, மொன்டேனேக்ரோ, மொரிசியஸ் போன்ற நாடுகள் ஏனைய நாட்டு பிரதிநிதிகளுக்கு விநியோகித்தனர்.
இலங்கையில் படையினரும் விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பிரேரணை
குமரியில் காங். எம்.எல்.ஏக்கள் 2 பேர் கைது

குமரி மாவட்டம் திருவட்டாரில் நாம் தமிழர் கட்சி சார்பில்  இரு தினங்கலுக்கு முன்பு பொதுக்கூட்டம் நடத்துவதற்காக திருவட்டார் அருகே ராஜீவ்காந்தி சிலை அருகே பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.   
ராஜீவ் சிலை உடைப்பு: நாம் தமிழர் கட்சியினர் 3 பேர் கைது
கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் பஜாரில் உள்ள ராஜீவ்காந்தி சிலையை சிலர் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவம் நேற்று அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
மீனம்பாக்கத்தில் ஜெயலலிதா பிரச்சாரம் : 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா முதல்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று காஞ்சீபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்
இனப்படுகொலைக்குப் பன்னாட்டு விசாரணை- ஐநா மனித உரிமைக் கவுன்சிலை வலியுறுத்த இந்திய அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!
விடுதலை சிறுத்தைகள் கட்டித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில்,  ’’அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நேற்று (3-3-2014) தொடங்கியுள்ள நிலையில் இலங்கையின் இனப்படுகொலைக்கு
இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்: ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 32 பேர் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது

கூட்டணி கட்சிகளுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது.  முதலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது
மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை கற்பழித்த கணேசமூர்த்தி: கிளிநொச்சியில் பரபரப்பு 
மன உளைச்சலுக்குள்ளான தாயொருவர் அங்கு அமைந்துள்ள கிளிநொச்சி
பொது மருத்துவ மனையில் உளவளத்துறை தொடர்பான வைத்திய உதவிகளைப் பெற்று வந்துள்ளார். கடந்த 15.02.2014 அன்று
சர்வதேச விசாரணை நடத்தக் கோரி 205 கிறிஸ்தவ மதகுருமார் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கு கடிதம்
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி மன்னார் ஆயர் வண.ராயப்பு ஜோசப்

ஜெனிவாவிபிரேரணை வலுவானதாக அமையும். இந்தியாவும் ஆதரவு வழங்கும்  மாவை 
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜெனிவா அமர்வு தொடர்பாக எழுப்பப்பட்ட
எச்சரிக்கை கனடா டொரோண்டோ நகர மோசமான காலநிலை அடுத்த 24 மணி நேரத்தில் 
இந்த வருடம் வழக்கத்திற்கும் மாறாக ஆட்டிப் படைத்து வரும் குளிருக்குப் பின்னர் டொரோண்டோ வாசிகளுக்கு மீண்டும் தீவிர குளிர்காற்று
1553125_470595186402769_470835597_o


கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு மார்ச் மாதம் முதலாம் நாள் அனைத்துலக மகளிர் நாள்  மாநாடு 
கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு மார்ச் மாதம் முதலாம் நாள் அனைத்துலக மகளிர் நாள் நிகழ்வையும் மாநாட்டையும் காலை 9:30 முதல் மாலை 5:00மணி வரை 2035 Kennedy வீதியில் அமைந்துள்ள Delta Hotel இல் வெகு சிறப்பாக நடாத்தியது
சிறிலங்கா மீதான அமெரிக்காவின் 56 பக்க குற்றப்பட்டியலின் சுருக்கம்
சிறிலங்கா படைகளால் உரிமைமீறல்களில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் காத்திரமான கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாகவும், அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. 
சிறிலங்காவின் தவறுகளுக்கு அனைத்துலக விசாரணைக்குழு அமைப்பதே ஒரே வழி' - மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர்

சிறிலங்கா அரசாங்கம் தனது வரலாற்றுத் தவறிலிருந்து தப்பிக்காது விடுவதற்கு அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படுவது மாத்திரமே வழியாகக் காணப்படும். 
சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில், உரையாற்றிய பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகார இணை அமைச்சர் ஹியூகோ சுவைர், 

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு 83 இனக்கலவரமே பிரதான காரணம்

ஐ.தே.க செய்த தவறின் பிரதிபலனை ஜெனீவாவில் நாடு இன்று முகம் கொடுக்கிறது
ஐ.ம.சு.மு தலைவர்கள் தெரிவிப்பு
* ஐ.தே.க - புலி ஒப்பந்தமே சர்வதேச தலையீட்டுக்கு வழிவகுத்தது

கிளிநொச்சியிலிருந்து பளை வரை ரயில் சேவை நாளை ஆரம்பம்

23 வருடங்களின் பின்னர் கிளிநொச்சியில் இருந்து பளை வரையான ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப் படுகிறது. இந்திய இர்கொன் நிறுவனத்தினால் கிளிநொச்சியில்

ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்பு; சர்வமதத் தலைவர்கள்’ தலைமையில் கொழும்பில் செவ்வாய் ஆர்ப்பாட்டப் பேரணி 

மனித உரிமைகள் என்ற போர்வையில் அரசியல் தேவைகளை நிறைவேற்ற ஏகாதிபத்திய நாடுகள் முயற்சி
சர்வமதத் தலைவர்கள் குற்றச்சாட்டு
மனித உரிமை என்ற போர்வையில் அரசியல் மற்றும் வர்த்தகத் தேவைகளை
சமதா கட்சியின் தமிழ்நாட்டிற்கான
முதல் வேட்பாளர்கள் பட்டியல்
 


2014 நாடாளுமன்றத் தேர்தலில் சமதா கட்சியின் தமிழ்நாட்டிற்கான வேட்பாளர்களின் முதல் பட்டியல் 3.3.2014 சென்னையில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் 5 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநில வேட்பாளருமா அறிவிக்கப்படுடுள்ளனர்.
தமிழகத்தில் புதிய கட்சி உதயம்
தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி கோயம்பத்தூரில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சித் தலைவராக ராஜ்குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த புதிய கட்சியை தொடங்கி வைத்தார். 
ராமதாஸ் பேசுகையில், தெலுங்கு பேசும் மக்களின் சமூக, பொருளாதார ரீதியாக கட்சி செயல்படும். சமூக ஜனநாயக கூட்டணியில் இணைந்து புதிய கட்சி செயல்படும் என்றார்

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது: விஜயகாந்த்


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றிருந்தார். சிங்கப்பூர் சென்றிருந்த அவர் திங்கள்கிழமை இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அ.தி.மு.க. வேட்பாளர்கள் ப்ளஸ்.. மைனஸ்!
வேட்பாளராகிவிட்டோம் என்ற சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும், தேர்தல் வரை அது நிலைக்க வேண்டுமே என்ற பயத்தில் திகிலடித்துப் போயிருக்கிறார்கள். இவர்களில் பலர் அறிமுகமே இல்லாத புதுமுகங்கள். எது எப்படியோ... அடுத்த அறிவிப்பு
நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தமிழகத்தில், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யாத
தே.மு.தி.க., பா.ம.க.வுக்கு 2 நாள் கெடு விதித்தது பாஜனதா!
)













 

'' 'திருச்சி மாநாட்டைப் பத்தி என்னய்யா நினைக்கிறீங்க?,  தொண்டர்களின் எழுச்சி எப்படி இருந்துச்சு?, 'மா.செ.’-க்கள்லாம் என்ன சொல்றாங்க? எல்லாரும் உற்சாகமா இருப்பாங்கள்ல...’னு திரும்பத் திரும்ப திருச்சி மாநாட்டைப் பத்தியே கேட்டுட்டு இருக்கார் தலைவர்!'' - கருணாநிதியின் சந்தோஷத்தை அதே உணர்வோடு பகிர்ந்துகொண்டார் துரைமுருகன்.

3 மார்., 2014



 ஜெனீவா அமர்வின்போதுநடவடிக்கைகள் தொடர்பில் கோரிக்கையைஜனாதிபதி புறக்கணித்து விட்டதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார 
இலங்கையின் முக்கிய ஆறு அமைச்சர்கள் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வடக்கு, கிழக்கு சொந்தங்கள் தமக்கு கிடைத்த வாக்குரிமை என்ற ஆயுதத்தை சரிவரப்பயன்படுத்தி, தமிழர் பலத்தை முழு உலகுக்கும் காட்டினர்.ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர் ராஜேந்தி 
தலைநகரில் வாழும் தமிழ் வாக்காளர்கள் ஓரணியில் திரண்டுவந்து, தமிழினத்தின் எழுச்சிப் பயணத்துக்கு புதியதொரு உந்துசக்தியை வழங்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய
யாழ் விடுதி சுற்றி வளைப்பின் எதிரொலி -அனந்தி சசிதரனுக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.
ஜெனிவாவில் இன்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 25 வது கூட்டத் தொடரில் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை 129 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி.ஸ்கோர் விபரம் 
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 129 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மிர்புரில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட் செய்த
கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடம் இருப்பதாக தெரியவில்லை: கலைஞர் பேட்டி
திமுக கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடம் இருப்பதாக தெரியவில்லை என்று கலைஞர் கூறியுள்ளார்.திமுக தலைவர் கலைஞர் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.

மத்திய காங்கிரஸ் அரசை தூக்கியெறிய வேண்டும்! காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா பேச்சு!
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை தொடங்கினார். காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேலை
ராஜிவ்காந்தி மரணம் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி
             
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க வந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில துணை தலைவர் கந்தவேல்

கொத்தடிமைகளாக இருந்த 16 பேர் மீட்பு
ராணிபேட்டை அருகே 13 ஆண்டுகளாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த கொத்தடிமைகள் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாசிலாமணி என்ற ஏஜெண்டிடம் வேலை பார்த்துவந்தனர். குறைந்த


ஜெயங்கொண்டான்: 23 கிராம மக்கள் சாகும் வரை உண்னாவிரதம்
ஜெயங்கொண்டான் பகுதியில் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்துக்கு 11ஆயிரத்து 489 நில உரிமையாளரிடம் இருந்து  8 ஆயிரத்து 136 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 

1 மார்., 2014

புங்குடுதீவு தல்லையபற்று முருகமூர்த்தி ஆலயத் திருவிழா காட்சிகள் 2014


26 பிப்., 2014

எழுவர் விடுதலையை தடுத்தால் தமிழ் நாடே யுத்த பூமியாகும்! திரையுலகம் எச்சரிக்கை

திரை அமைப்புகளின் சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் (இடமிருந்து) பாடலாசிரியர் தாமரை, தயாரிப்பாளர் டி.சிவா, பெப்ஸி தலைவர் அமீர், இயக்குநர்கள் ஆர்.கே.

    "யார்க்கர்' மலிங்காவிடம் பாகிஸ்தான் பணிந்தது

நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தொடக்க வீரர் திரிமன்னே சதம் அடித்து பேட்டிங்கில் கைகொடுக்க, பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை
நைஜீரியா நாட்டில் பள்ளி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 29 பேர் பலியாகியுள்ளனர்.
யோப் மாகாணம் புனி யாடி என்னுமிடத்தில் உள்ள அரசுப் பள்ளி விடுதியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதிகாலை 2 மணி அளவில் விடுதியில் மாணவர்கள் தூங்கிக்

உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட வருமான வரிகட்டினால் மக்களுக்கு  பலன் கிடைக்கும்: நடிகர் கமல்
வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், தேசிய கலை விழா, சென்னையில், இரண்டு நாட்கள் நடக்கிறது. நேற்று, முதல் நாள் விழாவை, தமிழக புதுச்சேரி மாநில வருமான வரித்

அட்டாக் பாண்டி சொத்துக்கள் முடக்கம்:போலீஸ் அதிரடி நடவடிக்கை

மதுரை பொட்டு சுரேஷ் கொலையில், ஓராண்டிற்கும் மேலாக தலைமறைவாக உள்ள அட்டாக் பாண்டியின் சொத்துக்களை போலீசார் முடக்கியுள்ளனர். 'பினாமி' பெயர்களில் உள்ள சொத்துக்களையும்

ஐடி இளம்பெண் கொலையில் துப்பு கிடைத்தது எப்படி? கொலையாளிகள் பிடிபட்டது எப்படி?
சி.பி.சி.ஐ,டி. ‘ஐ.ஜி’ மகேஷ்குமார் அகர்வால் நேற்று இரவு 10 மணி அளவில், நிருபர்களுக்கு பேட்டி அளீத்தார்.
அப்போது அவர்,   ‘’பெண் என்ஜினீயர்

அம்மா உணவகங்களுக்கு சப்பாத்தி செய்யும் மிஷின் ஒப்பந்தம் ரத்து

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து மேயர் சைதை துரைசாமி பேசியபோது, ’’அம்மா உணவகங்களில் விரைவில் சப்பாத்தி வினியோகம் தொடங்க வேண்டியதின்
கோபிராஜின் சாவில் சந்தேகம்; உடல் இன்று யாழ்ப்பாணத்துக்கு
மகஸின் சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான கோபிராஜின் உடல் யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை எடுத்து வரப்படவுள்ளது.
ரூ.80 லட்சம் செலவில் ஐஸ் தொழிற்சாலை; யூ.என்.எச்.சி.ஆர் நிதி ;உதவியுடன் கண்டாவளை, புன்னைநீராவியில்
கிளிநொச்சி மாவட்டத்.தில் மீனவர்களின்  நலன்கருதி முதன் முதலாக யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தின் நிதியுதவியுடன் சுமார் 80 லட்சம் ரூபா செலவில் ஐஸ் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது
 இலங்கை அரசு கடந்த காலங்களில் சர்வதேச மனித உரிமைகளை மீறியமை மற்றும் மனிதாபிமான 
சட்டங்களை மீறியமை தொடர்பாக சுதந்திரமானதும் நேர்மையுமான விசாரணைகளை நடத்துவதற்குத் 
தவறிவிட்டதாக நவனீதம்பிள்ளை அறிக்கை
உள்நாட்டு விசாரணைகள் கண்டறியத் தவறிய உண்மைகளை கண்டறியும் வகையில், சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவேண்டும். அதற்குத்

 கொழும்பு - யாழ்ப்பாணம் அதிவேக நெடுஞ்சாலை ; நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
தலைநகர் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை
4ஆம் திகதி பளை வரை யாழ் தேவி வரும்-ஏப்ரலில் யாழ்ப்பாணம்,ஜூனில் காங்கேசன்துறைக்கும் வரவுள்ளது 
கிளிநொச்சியில் இருந்து பளை வரையான ரயில் சேவை 23 வருடங்களுக்கு பின்னர் எதிர்வரும் 4ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக
தமிழர் கலாசார நாடகங்களை மேடையேற்ற பொலிஸார் தடை; தம்பாட்டியில் பிரதிகளையும் பறித்தெடுத்தனர் 
 தமிழரின் பண்பாட்டுக் கலாசார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் நாடகங்களை மேடை ஏற்ற அனுமதிக்க முடியாது என்று கூறி நாடகக் கலைஞர்களை கடுமையாக  எச்சரிக்கை செய்த ஊர்காவற்றுறைப் பொலிஸார் நாடகப் பிரதிகளையும் பறித்துச்
ஐரோப்பிய சம்பியன் லீக்முதல்  போட்டியில் மன்செஸ்டர் யுனைடெட் கிரீசின் ஒலிம்பிக்கொசிடம் 0-2 என்ற ரீதியில் அதிர்ச்சி தோல்வியைக் கண்டுள்ளது 
மாலிங்கா 5 விக்கெடுக்களை  சாய்த்தார்  296 ஓட்டங்கள்

ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை அபார வெற்றி -

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 296 ஓட்டங்களை எடுத்தது.
பதுல்லாஹ்வில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

நிறைய பக்கங்கள், நிறைய விஷயங்கள்! பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஜெயலலிதா பேட்டி!
பாராளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை 25.02.2014 செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்சிசியில் தேர்தல் அறிக்கையின் தமிழ் பிரதியை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். ஆங்கிப் பிரதியை விசாலாட்சி நெடுஞ்செழியன் பெற்றுக்கொண்டார். 

ad

ad