புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2014

கவிஞர் சு.வில்வரத்தினம்


கவிஞர் சு.வில்வரத்தினம்


சு. வில்வரத்தினம் (1950-2006) யாழ்ப்பாணம் புங்குடுதீவினைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1970 களிலே எழுத ஆரம்பித்து 1980 களில் முக்கியமான எழுத்தாளராகப் பரிணமித்தவர். 2 பிள்ளைகளின் தந்தை. 1991 ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்து, திருகோணமலையில் வாழ்ந்து வந்தார். இறக்கும் வரை திருகோணமலையிலே தொழிலாற்றினார்.

சு.வில்வரத்தினம் எழுதி வெளிவந்த கவிதைகளின் தொகுப்புக்கள்:
(1)அகங்களும் முகங்களும் (கவிதைத் தொகுதி, 1985)
(2)காற்றுவழிக் கிராமம் (கவிதைத் தொகுதி, 1995)
(3)காலத்துயர் (கவிதைத் தொகுதி)
(4)நெற்றிமண் (கவிதைத் தொகுதி, 2000)
(5) உயிர்த்தெழும் காலத்துக்காக - இவரது மொத்தக் கவிதைகளும் ஒரே தொகுப்பாக(கவிதைத் தொகுதி, 2001)

மரணத்துள் வாழ்வோம்(சில கவிதைகள்) தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிதைகளையும் பாடல்களையும் சிறப்பாகப் பாடும் வல்லமை பொருந்தியவரும் கூட. ‘Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka’ தொகுதியிலே இவரது கவிதை ஒன்று ஆங்கில வடிவிலே வெளி வந்துள்ளது.

சு . வில்வரத்தினம்


தேசியக் கவி வில்வரை உரசும் வாகரைக் காற்று

vilvarajan-kavithaikal2
காற்று வெளிக் கிராமத்தில் கால்நடையாகச் சென்ற கவிஞன் இறந்து விட்டான்.
இருப்பினும், வில்வரத்தினம் என்கிற படைப்பாளியின் மரணம், காலவெளியில் விதைக்கப்பட்ட இலக்கியப் பதிவுகளுடன் முற்றுப் பெறாது.  அவன் மரணத்தின் பின்னாலும், அவனது படைப்பிலக்கியம் வாழும் செழுமை கொண்டது.
vilvarajan-kavithaikal
பின் நவீனத்துவ இலக்கியப் பரப்பில்
படைப்பாளிகள் மரணிக்கலாம்.
வில்வரின் மண் சுமக்கும் மானுடக் கவிகள்,
விடுதலை உணர்வு விரவிய மனவெளிகளில்,
வாழும் தத்துவம் கொண்டது.
மொழிக் களத்தில் பாமரப் புரிதலைப் புகுத்திய புதுக்கவிஞன்.  அவனது அனுபவத்திரட்சியில் பல்வேறு முகங்கள்,
பன்முக அர்த்தங்களுடன் இறுக்கப்பட்டிருந்தது.
இவனது விடுதலை வேட்கையும், தேசிய உணர்வும், சத்தியத்தின் சாட்சிகளாகின்றன.
துரத்தியடிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த வெட்ட வெளிதனில், தனியனாக நடக்கும் போது சுயத்தின் அர்த்தம் புரியும்.
அவ்வெளியில், வாழ்வின் அர்த்தங்களும், பண்பாட்டு விழுமியங்களும், உயிர் நிலைத் தத்துவங்களும், சூனியமாகிப் போகும்.
மூது}ர் கிழக்கிலிருந்து ஈச்சிலம்பற்றையை நோக்கி நகரும் மக்கள், எறிகணைகளாய் துரத்தப்பட்டு, வாகரையை நோக்கி ஓடும்போது கவிஞனின் கவிவரிகள் மறுபடியும் உயிர்ப்பிக்கும்.
பின்தொடரும் எறிகணை வீச்சுக்களால்
இடம் மாறி வாழும் மனிதர்களின்
மனச் சிதைவுகளைப் பதிவு செய்ய
வில்வன் இன்று இல்லை.
குண்டு வீச்சினால் அழிந்த,
மரக்கிளைகளைத் தேடி காற்று அலைகிறது.
கவிஞனின் கவிதையுள் கரைந்திருந்த காற்று,
வாகரையில் வீழ்த்தப்பட்ட
மனிதர்களின் உடலங்கள் மீது
சோகத்துடன் தலைகுனிந்து உரசிச் செல்கிறது.
படைப்பாளி இறந்தாலும்,
படைப்புக்கள் வாகரையில் வாழ்கிறது.
தலைகுனிந்து மண்பதித்த கால்களைத்
தரிசிக்கும் பொழுதே
தன்னிலை துலங்கும்.
நீள நடக்கின்றேன்…. என்கிற வில்வனின் கவிதையில் குறியீடாகத் தெரிவதும் இதுவே.
துயிலும் இல்ல விளக்கொளியின் முன்னால்,
தலைகுனியும் தத்துவமும் அதுவே.
இத்தலைகுனிவு வீர வணக்கம் மட்டுமல்ல.
புற உலகப் பார்வைதனை ஒரு கணம் நிறுத்தி,
சுயதரிசனம் கொள்வதே அதன் உள்ளார்ந்த வெளிப்பாடு.
குனிந்த பார்வையில் தென்பட்ட மண்ணில்தான்
தலைசிதறிய பிஞ்சுகளின்
உடலங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.
கொலைக் களமாகிய வாகரையில்
மரண ஓலங்கள் காற்றோடு கலக்கின்றன.
பூக்களை உரசும் காற்றின் சுகந்தங்கள்,
காலத்தோடு கரைந்து விட்டது.
நிகழ்கால வாழ்வில் வீசும் காற்றும்
ஒட்டாத உறவுதான்.
மறுபடியும் உயிர்த்தெழும் மகரந்தங்கள்
பூக்காமல் கருகுகின்றன.
கவிஞருக்கென்ன…. பழையதை மீட்டி,
உதிரத்தை சிலிக்க வைத்துப் போய் விட்டான்.
சிதைவுகளுள் ஒளிந்து கொண்ட
வாழ்வினைத் தேடி
மனிதர்கள் வீறு கொண்டெழத் தொடங்கி விட்டனர்.
ஒரு கையில் துப்பாக்கி ஏந்தியபடி,
உச்சத்தின் கட்டளைக்காய் காத்திருந்து,
உறவுகள் கொன்றொழிவதை
பல்லை நறுமியபடி பார்த்துக் கொண்டிருக்கிறான்
ஒரு இளைஞன்.
தற்போது…..
இடமாறுதல்களும், ஓட்டப் பந்தயமும் அந்நியனால்
வரையப்பட்ட எல்லைக்குள்தான்.
தற்காலிக எல்லைக்குள் கட்டுண்டு இருக்கும்
காற்றின் அழுத்தம் விரிவடைந்து,
கனம் பெருகி, இன எல்லை வரை நீளும்.
சுதந்திரக் காற்றினை
எல்லை வரை அழைத்துச் செல்ல
போராட்டச் சக்திகளுடன் மக்களும் தயாராவெனக்
கவிஞன் எழுப்பும் கனதியான செய்தி காதில் விழுகின்றது.
விழி மூடும் போதும் கண்ணால் காற்றுக்குத் து}து விட்டான்.
காற்றானது,
அந்த மகரந்த மணிச் செய்தியினை
தேசியத்தின் ஆன்மாவிடம் சேர்த்து விட்டது.
இனி என்ன….
பூக்கும், காய்க்கும், பழுக்கும், விதை விழும்.
மண்ணில் புதுத் தளிர் துளிர் விடும்.
காற்று வரையும் காட்சிப் படிமங்கள்,
அழகுணர்வைப் புள்ளியாக்கும்.
அதுவரை….
தொலைத்த வாழ்வினை இவன் கவிதைக்குள் தேடுங்கள்.
உயிர்த்தெழும் காலம் வரும்.
விழிப்பென்பது
இரு விழிகளையும்
சேரத் திறந்து வைத்திருத்தல் அல்ல.
எதிரியைக் குறித்த கவனக் குவிப்பு
மட்டும் அல்ல்
தன்னுள் மையமிட்டெழும் உயிர்ப்பு…
வில்வரின் இக்கவிதையே, அவன்
வாழ்ந்ததற்கான சான்று.
சி. இதயச்சந்திரன்


சென்னையில் நடைபெற இருந்த 4 ஐ.பி.எல். போட்டிகள் ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று பி.சி.சி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில்  18ம் மற்றும் 22ம் தேதி சென்னை அணி விளையாடும் போட்டி நடைபெற இருந்தது. இந்த போட்டிகள்

இலங்கை, இந்திய மீனவர் பேச்சுவார்த்தை இந்திய பிரதிநிதிகள் நாளை கொழும்பு வருகை

* திங்களன்று முக்கிய விடயங்கள் ஆராய்வு,
* இலங்கை தரப்பில் 20 பிரதிநிதிகள்; 10 அதிகாரிகள்
போராட்டங்களை சமாதானமாக செய்யுங்கள்; பொலிஸார் தெரிவிப்பு 
news
சமாதானமாக செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு நாம் தடை விதிக்க மாட்டோம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் எக்கநாயக்க தெரிவித்துள்ளார். 
பஞ்சாப் அணி வெற்றி 
ஐ.பி.எல். சீசன் 7இல் இன்று இரவு இடம்பெற்ற போட்டியில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. 

பஞ்சாப்  அணி பெங்களூரையும் வென்றது 

Punjab T20 198/8 (20/20 ov)
Bangalore T20 166/9 (20.0/20 ov)
Punjab T20 won by 32 runs

9 மே, 2014

பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் நீக்கம்: ஐ.நா. சபை கூட்டத்தில் அறிக்கை 
news
பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் சிறுமிகளை மீட்க புறப்படும் அமெரிக்கா
நைஜீரியாவில் போகோ ஹராம் முஸ்லிம் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள 200க்கும் அதிகமான சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் விசேட குழு ஆரம்பிக்கவுள்ளதாக
ந்திரசிறியை பதவிலியிருந்து விலக்குவதற்கு சூழ்ச்சி- தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணி 
வடக்கு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை பதவிலியிருந்து விலக்குவதற்கு சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாக தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணியின் தலைவர் பெங்கமுவே நாலக தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலக இளைஞர் மாநாட்டில் இன்று ஆர்ப்பாட்டம் 
news
உலக இளைஞர் மாநாடு நடைபெறும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ஊடகவியலாள​ர் மண்டபத்துக்கு முன்பாக மாநாட்டில் பங்கேற்க வருகைதந்துள்ள பிரதிநிதிகள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

 யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மௌன எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முற்பகல் 11 மணி
தொடக்கம் 12 மணிவரை முன்னெடுக்கப்பட்டது


பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான துண்டுபிரசுரங்கள் 


மே -12 மாலைக்கு பிறகு தேர்தலுக்கு பிந்தைய
 கருத்து கணிப்புக்களை வெளியிடலாம் !
 


 16-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி தொடங்கி வரும் 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது. இதில் 8 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. கடைசி கட்ட தேர்தல் 41 தொகுதிகளுக்கு 12-ந்தேதி நடைபெற உள்ளது.
ஈழத்தமிழர் பிரிட்டன் பிரதமர் கமறுனின்  கட்சியில் கவுன்சில் தேர்தலில் போட்டி 
திரு. கனகசபாபதி குககுமரன் அவர்கள், மே மாதம் 2014ம் ஆண்டு நடைபெறவிருக்கும் “WEST HARROW COUNCIL Ward in Harrow” தேர்தலில் கன்சர்வேடிவ் வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரியான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் அம்மையார் இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் 
இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை விடயங்களைக் கையாளும் மூத்த அதிகாரியான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் அம்மையார் இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு விசேட ஹெலிக்கெப்டர் மூலம் விஜயம் செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பில் இருந்து பளை வரையும், பளையில் இருந்து கொழும்பு வரையிலான புகையிரத சேவைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
பளையில் இருந்து காங்கேசன்துறை வரையான புகை
எ பி எல் கிரிக்கெட் -தற்போதைய அட்டவணை


ஆங்கில  படத்தில் தமிழ்பாட்டு ரகுமான் இசையில் 
லகத்தின் எல்லைகளை தன் இசையால் இணைத்த தமிழன். மேலே... உயரே... உச்சியிலே இருந்தாலும், 'நான், எனக்கு’ என்ற வார்த்தைகளை இவரின் பேச்சில் தேட வேண்டியிருக்கும். கோடம் பாக்கத்துக்

மின்னேரியா காட்டில் துப்பாக்கிகள் சகிதம் 4 பேர் கைதாகியுள்ளார்கள் 
மின்னேரியா காட்டில் உள்ள ஹிரிதலே வனத்தில் துப்பாக்கியுடன் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. இக்கைது நேற்றைய தினம்(08) இடம்பெற்றுள்ளது என மேலும் தெரியவருகிறது. துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் போன்ற

திரையரங்கில் தனியாக திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த மாணவியை வல்லுறவு
கேகாலை பிரதேசத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனியாக திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த 14 வயது பாடசாலை சிறுமி ஒருவரை திரையரங்க முகாமையாளர் பாலியல்
இலங்கையின் முதுகெலும்பாக வடமாகாணம் மாறியுள்ளது; மத்திய வங்கி ஆளுநர் 
வடமாகணத்தின் அபிவிருத்திக்காக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊகுவித்தல் என்னும் தொனிப்பொருளில் வடமாகாண மத்திய வங்கி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுமக்கள் கலந்துரையாடல் ஒன்று
மன்னார் புதைகுழி வழக்கு யூன் 9 வரை ஒத்திவைப்பு 
மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் யூன் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலையில் மௌனப் போராட்டம் 
 யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மௌன எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முற்பகல் 11 மணி 
சுழல் காற்றினால் தூக்கி வீசப்பட்ட பிரதேச செயலகத்தின் கூரைகள் 
 வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் குடத்தனை அலுவலகத்தில் வீசிய சுழல் காற்றினால்  அலுவலக கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன்  ஆவணங்கள் சிலதும் சேதமடைந்துள்ளது.
புலிகளை ஒருபோதும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க முடியாது 
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கோ, ஆலயங்களில் வழிபாடுகள் நடத்துவதற்கோ எந்தத் தடையுமில்லை.இராணுவப் பேச்சாளர் 
 என்று தெரிவித்துள்ள இராணுவப்  பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தமிழீழ விடுதலைப் புலிகளை ஒருபோதும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க

1989ம் ஆண்டு கிளர்ச்சியாளர்களை நினைவுகூறும் அமைச்சர் விமல் வீரவன்ச, முள்ளிவாய்க்கால் நினைவு கூறலை விமர்சிப்பது எங்ஙனம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மனோ மேலும் கூறியதாவது,
விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சி,

உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழர்களுக்கு உரிமையில்லையா?: பா உ .சிறீதரன் 
போர்க்காலத்தில் உயிரிழந்த சொந்தங்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த தமிழ் மக்களுக்கு உரிமை கிடையாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வி
ஆந்திர முன்னாள் முதல்வர் காலமானார்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி ஐதராபாத்தில் இன்று அதிகாலை காலமானார். 80 வயதாகும் இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

சோனியாகாந்தி சென்ற விமானம் அவசரமாக தரையிறங்கியது
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று கோராக்பூரில் தேர்தல் பிரசாரம் செய்ய தனியார் விமான நிலையம் மூலம் புறப்பட்டார்.


திருமணம் செய்வதாக கூறி கல்லூரி மாணவியுடன் உல்லாசம்; மாணவருக்கு பரிசோதனை நடத்த போலீசார் முடிவு
கோவை நகரிலுள்ள சின்னியம்பாளையம், “டீச்சர்ஸ்” காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில்

தமிழ் பாடத்தில் முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் விபரம்
+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி

காதலித்து ஏமாற்றியதால் திருமண மேடையில் மணமகள் சுட்டுக்கொலை: வாலிபர் கைது
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் அருகே லால்காதி என்ற இடத்தைச் சேர்ந்த டாக்டர் ரோகித் என்பவருக்கும், டாக்டர் ஜெய்ஸ்ரீ நம்தேவ் என்பவருக்கும்

+2 தேர்வு முடிவு: 1193 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்த ஊத்தங்கரை மாணவி சுஷாந்தி
 

+2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியாகின. 
கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுஷாந்தி, 1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தார். 


தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் நாளை மறுநாள் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் வீர பாண்டிய கட்டபொம்மன் குல தெய்வமான வீர சக்கதேவி கோயில் திருவிழா இன்று துவங்குகிறது.

வன்னியர் சங்கம் நடத்தும் சித்திரை திருவிழாவிற்கு தடை
வன்னியர் சங்கம் சார்பில் ஆண்டு தோறும்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில், சித்திரை முழுநிலவு திருவிழா கொண்டாடப்படும். கடந்த ஆண்டு நடைபெற்ற சித்திரை திருவிழாவில் வன்முறை

50 லட்சம் மோசடி :
தலைமைச்செயலக ஐஏஎஸ் அதிகாரி மீது பரபரப்பு புகார்
சென்னை தலைமைச்செயலகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி மீது மருத்துவர் பரபரப்பு புகார் கூறியுள் ளார்.  தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி ரூபாய் 50 லட்சம் மோசடி செய்துள்ளார்.  பணத்தை திருப்பு கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் காவல்துறை ஆணையரிடம் புகார் கூறப்பட்டுள்ளது

ஹைதராபாத் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியை 32 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.  முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 102 ரன்களூக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.


சி.பி.ஐ. பணியில் சேர்ந்த சில மணிநேரங்களிலேயே
அர்ச்சனா ராமசுந்தரம் சஸ்பெண்ட் : தமிழக அரசின் அதிரடியால்
காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!
 


தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றிய அர்ச்சனா ராமசுந்தரம், மத்திய புலனாய்வு துறையின் (சி.பி.ஐ.)
புதிய பட்டதாரிகளுக்கு நியமனம் - சுகாதார அமைச்சு 
மருத்துவ துறைசார்ந்த 354 பட்டதாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி நியமனம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 
ஆங்கில விவாதப் போட்டியில் வேம்படி 1. 
வடமாகாண ஆளுநர் கிண்ணத்துக்கான  ஆங்கில விவாதப் போட்டி இன்று பி.ப 3மணியளவில் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பில் 450 மில்லியன் ரூபாய் செலவில் புற்று நோய் வைத்தியசாலை 
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 450 மில்லியன் ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் 4 மாடிகளை கொண்ட தனியான புற்று நோய் வைத்தியசாலை சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு வருகின்றது.
யாழ். அரியாலையில் விபத்து -இளைஞன் சாவு 
A - 9 வீதி அரியாலை மாம்பழம் சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் சாவடைந்துள்ளதுடன் மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் .போதனா
அதிகார துஷ்பிரயோகத்தால் பதவி இழந்தார் தாய்லாந்து பிரதமர் 
தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா மற்றும் கேபினட் அமைச்சர்கள் 9 பேரை பதவி விலகுமாறு அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

8 மே, 2014


மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி வெற்றி

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின்

அதிர்ச்சி சம்பவம் :சிவபெருமானுக்கு நாக்கை பிளேடால் அறுத்து காணிக்கை செலுத்திய வாலிபர்
நாக்கை பிளேடால் அறுத்து சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்திய அதிர்ச்சி சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்து உள்ளது.

பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி முதல் மார்ச் 25-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிந்த உடன் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழ்நாடு

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விவகாரம் தொடர்பான மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த 15 கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்த தவறிவிட்டதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு
மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி மன்னாரில்
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 10 ஆம், 11 ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.
ஆண் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் பெண் பயிற்சியாளர்
பிரான்ஸிலுள்ள  உதைபந்து விளையாட்டு கழகமொன்று  ஒரு பெண்மணியை தமது அணியின் பயிற்சியாளராக நியமித்துள்ளது.
கிளி.மாவட்டத்தில் 3,504 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு 
இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில்  8,350 வீடுகள் அமைக்கும் நடவடிக்கையில் 3,504 வீடுகள்  பூர்த்தியாக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் 
ஆசிய நாட்டிலேயே மாசடைந்த காற்றை சுவாசிப்பவர்கள் அதிகம்; உலக சுகாதார நிறுவனம் 
உலக நாடுகள் பலவற்றின் நகரங்களில் மக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
யாழ். பேருந்து விபத்தில் முதியவர் சாவு 
சாவககச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து சைக்கிளொன்றுடன் மோதியதில் அதில் பயணித்தவர் படுகாயமடைந்ததுடன்குறித்த
மினி பஸ் உரிமையாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு 
யாழ்ப்பாணம்- புன்னாளைக்கட்டுவான் 764 வழித்தட போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
மினி பஸ் உரிமையாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு 
யாழ்ப்பாணம்- புன்னாளைக்கட்டுவான் 764 வழித்தட போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
யாழ்.பல்கலைகழகத்தில் இரத்ததானம் 
 யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த பணிப்பெண் மோனிகா லெவன்ஸ்கி முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுடன் கொண்டிருந்த உறவினை பற்றி பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ”வேனிட்டி ஃபேர்” என்ற பிரபல பத்திரிக்கையில் மோனிகா, கிளிண்டன் தன்னுடன்



 
 
நாட்டில் பல பிரதேசங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது

டுவிட்டரில் வியாழன் அன்று  ஜனாதிபதி


சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று பதிலளிக்கவுள்ளார். கொழும்பில் நடைபெற்றுவரும் உலக இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் இளைஞர்கள்

2ம் நாள் நிகழ்வு: பாலின சமத்துவம் உள்ளிட்ட ஏழு தலைப்புக்களில் நேற்று கலந்துரையாடல்

உலக இளைஞர் மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றன. 110 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய வட்டமேசை மாநாட்டில் பாலினசமத்துவம் உள்ளிட்ட ஏழு தலைப்புக்களில் கலந்து ரையாடல்கள் இடம்பெற்றன.

ஒருசிலரின் ஒழுக்க மீறல்களால் பிக்கு சமூகத்திற்கே இழிவு


காவியுடை தரித்த ஒரு சிலரது ஒழுக்க மீறல் செயல்கள் காரணமாக ஒட்டுமொத்த பிக்கு சமூகத்திற்கும் இழிவு ஏற்பட்டிருப்பதைத் தான் ஏற்பதாக பெளத்த சாசன, மத அலுவல்கள் பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன தெரிவித்தார்.
படை ஆட்சேர்ப்பு பற்றி முறைப்பாடு எதுவுமில்லை 
news
 அரச வேலை வாய்ப்பு என்ற போர்வையில் மோசடி நடப்பதாக இதுவரை எமக்கு எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்று அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். அண்மைக்காலமாக அரச வேலைவாய்ப்பு என்று துண்டுபிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்தி படையினர் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு
வரலாற்றில் அதிக வாக்கு பதிவுகளை உள்வாங்கிய தென்னாபிரிக்கா 
தென்னாபிரிக்காவில் (20) வருடங்களுக்கு முன்னர் வழக்கத்தில் இருந்த  நிறவெறிக்கொள்கை முடிவுக்கு வந்தபின்னர் நடைபெற்ற ஜந்தாவது ஜனநாயக தேர்தலில்

யாழ். பல்கலைக்கழகத்துள் இராணுவ தலையீடு வேண்டாம்.மாவை சேனாதி அறிக்கை 
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தியும், கொலைமிரட்டல் விடுத்தும் மர்மமான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஓட்டப் பட்டுள்ளதாகவும், துண்டு பிரசுரங்கள் வெளியிடப் பட்டுள்ளதாகவும்

Punjab T20 231/4 (20/20 ov)
Chennai T20 187/6 (20.0/20 ov)
Punjab T20 won by 44 runs
மீண்டும் பஞ்சாபிடம் சென்னை அதிர்ச்சித் தோல்வி 
சென்னை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 44ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் 29வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ம் திகதி தொடக்கம் 21 ம் திகதி வரையிலும் மூடப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளமைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் கே.வி.குகேந்திரன் மேற்படி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த வெற்றியை தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஜெயலலிதா
 ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்ததில் வெற்றி; நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்ததில் வெற்றி

ad

ad