புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2014


ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகினார் எழுத்தாளர் ஞானி!
ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட எழுத்தாளர் ஞானி, அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார். கட்சியின் உடல் நிலையும், தனது உடல் நிலையும் சரியில்லாததாலேயே தாம் இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.  
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம்: ஜெயலலிதா ஆய்வு!
ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு கூட்டம் நடத்தி்னார்.
 
 இந்தியாவை மீண்டும் சீண்டுகிறது சீனா: அருணாச்சல் பிரதேசத்தை சேர்த்து புதிய வரைபடம் வெளியீடு
இந்தியாவை மீண்டும் சீண்டும்விதமாக அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என குறிப்பிட்டு சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. 

இந்தியாவின் ஒருபகுதியான அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி சீனா அத்துமீறுவது சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சீனா தனது அதிகாரப்பூர்வ


தேர்தல் பணியில் சுணக்கம்: பூங்கோதை, அனிதா உள்பட 15 பேருக்கு தி.மு.க நோட்டீஸ்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியதாக கூறி முன்னாள் அமைச்சர் பூங்கோதை, வீரபாண்டி ராஜா, கம்பம் செல்வேந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேரிடம் விளக்கம் கேட்டு தி.மு.க தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரை தமிழ்ச்சங்கத்துக்கு வலைதளம்: ஜெ., தொடங்கி வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கென தனி அலுவலர் அலுவலகம் தோற்றுவிக்கப்பட்டதோடு, துணை விதிகள் உருவாக்கப்பட்டு,
பொதுபல சேனா உறுப்பினர்களின் பேஸ்புக் முடக்கம் 
பொது பல சேனா அமைப்பின் அங்கத்தவர்களின் பேஸ்புக் தளம் முடக்கப்பட்டுள்ளாக அந்த அமைப்பின் அங்கத்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
பாகிஸ்தானுக்கெதிராக போர்: ஆறு தொடரில் களமிறங்கும் இந்தியா 
 இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடுத்த 8 ஆண்டுகளில் 6 போட்டி தொடர் கொண்ட கிரிக்கெட் போட்டி ஒப்பந்தமாகியுள்ளது.
 

ஜெனிவாவில் ஐநா முன்பாக புலம்பெயர் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்-பி பி சி 
இலங்கையின் தென்பகுதியில் அளுத்கம உள்ளிட்ட நகரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்குமுகமாக சுவிஸ் நாட்டின்

உலகிலேயே முதல் தர பதவி ஒன்றை வகித்த சிறப்புமிகு தமிழச்சி நவநீதம்பிள்ளைக்கு பிரியாவிடை .பாண் கீ மூன் பாராட்டு 
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நேற்று புகழாரம் சூட்டி பிரிவுபசாரம் வழங்கியது.

ரமழான் நோன்பு இன்று முதல் ஆரம்பம்
இலங்கையில் ரமழான் நோன்பு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

28 ஜூன், 2014


சென்னை அடுக்குமாடி விபத்து :ஜெயலலிதா அவசர உத்தரவு
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி புதிய கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.  


சென்னையில் 12  மாடி புதிய கட்டிடம் இடிந்து தரைமட்டம் - மீட்பு பணி தீவிரம்
 

சென்னை போரூர் அருகே முகலிவாக்கத்தில் 12 மாடி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு, முழுமை பெறாத நிலையில் இருந்தது.  இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தனர்.  

 ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து 15 பேர் பலி: ரோசய்யா இரங்கல்

ஆந்திராவில் ஏற்பட்ட கியாஸ் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக கவர்னர் கே.ரோசய்யா வெளியிட்ட அறிக்கையில்,

மதிமுக ஆய்வுக் களம்’ -புறப்படுகிறார் வைகோ 
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளும் இடம் பெற்றிருந்தன.
யினையில் இன்று கொடி 
 நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று சனிக்கிழமை பகல் 12 மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
 
தொடர்ந்து 16 தினங்கள்  திருவிழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் யூலை மாதம் 11 ம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத்திருவிழாவும், யூலை 13 ம் திகதி தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.
அவுஸ்திரேலியா சென்ற ஈழத்தமிழர்களின் படகு நடுக்கடலில் பழுது 
தமிழ் நாடு புதுச்சேரியில் இருந்து ஆவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக அடைக்கலம் கோரி படகில் சென்ற 153 ஈழத் தமிழர்கள் படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர். 

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிற்சர்லாந்து
“புதிய நிர்வாகத்துடன் கருத்துப் பரிமாறல்”
அன்புடையீர், வணக்கம்.
எதிர்வரும் 29.06.2014. ஞாயிறு மாலை மூன்று மணிக்கு புதிய நிர்வாகத்துடன் கருத்துப் பரிமாறல் நடைபெற விருப்பதால் “ஒல்ரன் மற்றும் ஒல்றனுக்கு அண்மையில் வாழும்” புங்குடுதீவு மக்களாகிய உங்கள் அனைவரையும் குடும்ப சகிதமாக வந்து பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

PON SUNTHARALINGAM






“சங்கீத பூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின், “இறுவெட்டு” வெளியீட்டு விழா!
புங்குடுதீவு நலன்புரி சங்கம் (லண்டன்)
அன்புடன் அழைக்கின்றோம்…
எமது மதிப்பிற்குரிய இசைப் பிரியர்களே!
வித்துவான் ஆறுமுகம் அவர்களின் ஞாபகார்த்தத்தை முன்னிட்டு
“சங்கீத பூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் பக்திப் பாடல் “இறுவெட்டு” வெளியீட்டு விழா.
இன்னிசை வேந்தர், சங்கீதபூஷணம், இளம் கலைஞர் மன்ற ஸ்தாபகர் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் பாடல் தொகுப்பான இறுவெட்டு வெளியீட்டு விழாவிற்கு தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
இடம் : Ealing Town Hall, New Broadway, Ealing, London W5 2BY
திகதி : FRIDAY 27.06.2014 மாலை 6.30 மணி
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து தங்கள் ஆதரவினை நல்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.
புங்குடுதீவு நலன்புரி சங்கம் (லண்டன்)
கருணை – 07958083456
கங்கா – 07766442273

)

 முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் வாகனம் நிறுத்துமிடப்பணி அமைப்பது பற்றி அறிக்கை தர கேரளா அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக  கேரள அரசுக்கு, தமிழக அரசு இன்று எழுதியுள்ள கடிதத்தில், வாகன நிறுத்துமிடப் பகுதிக்கு ஆண்டு தோறும் குத்தகை வரி செலுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

27 ஜூன், 2014

ஸ்டாலினை வீழ்த்த நினைக்கிறார்கள்: கருணாநிதி காட்டம்
தி.மு.க.வை தரைமட்டமாக்கி விடுவோம் என்று மனப்பால் குடிப்பவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர் கருணாநிதி,

ad

ad