புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2015

19 க்கு அமைச்சரவை அங்கீகாரம்
                     
ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தல் உட்பட 8 சரத்துக்கள் அடங்கிய அரசமைப்பின்  19ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் விசேட வர்த்தமானியும் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது. 
 
இந்த திருத்தங்கள் அடங்கிய திருத்தச்சட்டமூலம் விசேட சட்டமூலமாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளது.
 
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பில் நேற்று கூடிய விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே 19ஆவது சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது.
 
 
தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சரவைக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் சட்டத் திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
  
1. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அகற்றப்பட்டு, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றமும் சேர்ந்து நிர்வகிக்கும் ஆட்சி முறையாக மாறும்,
   
2. இலங்கையில் அனைத்து தேர்தலிலும் விகிதாசார முறை நீக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றிபெற்றவர் என்ற முறை கடைப்பிடிக்கப்படும்.
   
3. ஒருவர் அதிகபட்சமாக இரண்டு ஆட்சிக்காலத்துக்கு மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற நிபந்தனை மீண்டும் கொண்டுவரப்படுகிறது.
   
4. ஜனாதிபதியின் ஓர் ஆட்சிக்காலம் என்பது ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படும்.
   
5. நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட பின்னர், அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்காது. ஒரு நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர்தான் அதனைக் கலைக்கும் உரிமை மறுபடியும் ஜனாதிபதிக்கு வரும்.
   
6. ஒருவர் ஜனாதிபதியாக இருக்கும்போது அவர் உத்தியோகபூர்வமாக செய்யும் காரியங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு இருந்துவருகின்ற சட்டத் தடை அகற்றப்படும்.
   
7. இலங்கையில் அதிகபட்சமாக 30 பேரே அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாகவும், அதிகபட்சமாக 40 பேரே துணை அமைச்சர்களாகவும் என ஆக மொத்தம் 70 பேரே அமைச்சர்களாக இருக்க முடியும் என்ற வரம்பு ஏற்படுத்தப்படுகிறது.
   
8. 17ஆம் அரசியல் சட்டத் திருத்தம் மீண்டும் நடைமுறைப்படும்.
   
9. நாட்டின் ஆணைக்குழுக்கள் ஜனாதிபதியால் அல்லாமல் சுயாதீனமான முறையில் மீண்டும் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும் இந்தத் திருத்தம் அமையும்.  ஆனாலும், அமைச்சரவையின் தலைவராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் தொடர்ந்தும் ஜனாதிபதியே விளங்குவார்.
   
10. பிரதமரையும் அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு இருக்கும். என்பதாகும். அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி  செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

15 மார்., 2015

தற்போது சுவிஸ் நாட்டில் சிவலப்பிட்டி சனசமூக நிலையத்தினால் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கிராம வளர்ச்சிக்கான ஒன்றுகூடல்...











வடக்கு மாகாண மக்கள் தங்களுடைய தனித்துவத்தை உலகறியச்செய்ய வேண்டும்; வடக்கு முதல்வர்


வடக்கு மாகாண மக்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற நன்மைகளை நல்ல முறையில் பராமரித்து சேவையினை ஆற்றுவார்கள் என்ற செய்தியை

வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவோம்; விஜயகலா

  
வடக்கு மாகாண முதலமைச்சரின் வழியிலேயே நாங்களும்  பின்தொடர்கின்றோமே தவிர எங்களுக்கு தரப்பட்ட அதிகாரங்களை தனிப்பட்ட

கின்னஸ் சாதனை படைத்தது அதிமுக மகளிர் அணி!


மகளிர் தினத்தையொட்டி, அதிமுக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில், 2 ஆயிரத்து 37 பேருக்கு ஒரே

விவசாயிகளின் நண்பன் நானா, கருணாநிதியா?: கேட்கும் ஜெயலலிதா


காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை, மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த நான், விவசாயிகளின் நண்பனா?

அரசியல் கைதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும்; தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஜனாதிபதி உத்தரவு


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான அறிக்கையை தனக்கு

தாயும் மகளும் ஒரு வருடத்தின் பின் இணைவு

                                                                                  
                     
பிரித்தெடுக்கப்பட்ட ஜெயக்குமாரியும் மகள்  விபூசிகாவும் நேற்று இணைந்து கொண்டர்.

தமிழர்களின் மரபை மீறிய மோடியின் யாழ்பாண பயணம்; ஈழத்தமிழர்கள் வேதனை

 

இரண்டு நாள் பயணமாக கடந்த 13, 14ஆம் தேதிகளில் இலங்கை சென்றார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அனுராதபுரம், தலைமன்னார், தமிழர்களின் தலைநகரான

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை விரட்டியடித்தது மேற்கிந்திய தீவுகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்

நான் சிறந்த சுதந்திரக் கட்சிக்காரன்! தவறு செய்திருந்தால் என்னை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுங்கள்: மகிந்த

அரசியலில் இருந்து சில நாட்களாக தான் ஒதுங்கி இருப்பதாகவும் தான் சிறந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரன் எனவும்

'யாழ் நிகழ்வுகள் நெகிழ்வைத் தந்தன' - நகுலேஸ்வரம் கோவிலில் வழிபாடு நடத்தியதன் பின்னர் கொழும்புக்குப் பயணமானார்.பி.பி.சி

 
இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தின்போது இடம்பெற்ற நிகழ்வுகளில் யாழ்ப்பாணத்தில் இளவாலையில் இடம்பெற்ற

14 மார்., 2015

வடக்கு முதல்வர் சி.வி - இந்திய பிரதமர் மோடி சந்திப்பு


இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை  சந்தித்துக் கலந்துரையாடினா

மியான்மரில் படகு விபத்தில் 50 பேர் பலி?

மியான்மரில் கடற்கரை நகரமான டவுங்காக்கில் இருந்து ராகினே மாநில தலைநகரமான சிட்வே நோக்கி நேற்று

கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் நரேந்திர மோடி

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிறகு வட மாகாண

India Will Help to Make Trinco a Regional Petroleum Hub – Prime Minister Modi

Prime Minister Narendra Modi said India stands ready to help Tricomalee become a regional petroleum hub. He said this while addressing the media

ஜனாதிபதி மைத்திரிபால அவர்களின் முகநூலில் இருந்து கிடைத்த அரிய படங்கள்




ஜனாதிபதி மைத்திரிபால  அவர்களின் முகநூலில் இருந்து கிடைத்த அரிய படங்கள்

இனப் பிரச்னைக்கு தீர்வு: மோடியிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்!




இணைந்த வட, கிழக்கு தமிழரின் தாயகம் என்றும், இணைந்த வடக்கு கிழக்கிலேயே இனப் பிரச்னைக்குத் தீர்வு காண

மோடியின் கவனத்தை ஈர்க்க உறவுகளை இழந்த தமிழர்கள் போராட்டம்! (படங்கள்)



யாழ்ப்பாணம் செல்ல உள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் போரின் போது காணாமல்

ad

ad