புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2015

தமிழின அழிப்பை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - ஜெனிவாவில் ஊடாக மாநாடு
 
 
67 வருடங்களாக இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்பை ஐக்கிய நாடுகள் சபையானது அனைத்துலக சுயாதீன விசாரணை ஊடாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜெனீவா நகரில் ஊடக மாநாடு நடைபெற்றது.
 நடிகர் அஜித்துக்கு திடீர் அறுவை சிகிச்சை 
நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தை கௌதம்மேனன் இயக்கியிருந்தார். 
சுவிட்ஸர்லாந்து- இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் (Didier Burkhalter)
எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது: வடக்கு முதல்வர் காட்டம்
தமிழ் மக்களுக்கு வீடுகளையும், வீதிகளையும், குடிநீர் வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக உங்களை சந்திக்க முயற்சித்த மலேசிய பிரதமரின் விசேட பிரதிநிதியை

17 மார்., 2015

வவுனியா அரச அதிபருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்; வடக்கு அவையில் பிரேரணை
                     
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை அவமதித்தமை தொடர்பில் வவுனியா மாவட்ட  அரச அதிபருக்கு எதிராக பிரேரணை ஒன்று
அழகால் கவர்ந்த சீமா...இந்திய பெண்ணின் முதல் ஓரினச் சேர்க்கை திருமணம் (வீடியோ இணைப்பு)
இந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு திகதி நாளை அறிவிப்பு? அரசியல் உலகில் பரபரப்பு
ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா உட்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு
தலைமைப் பதவியை வழங்கினால் அதனை செய்ய அனுமதிக்க வேண்டும்: ஜனாதிபதி
 தலைமைப் பதவியை வழங்கினால் அதனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
 
பிரித்தானியா பேர்மிங்கம் நகரில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட குப்பிழான் இளைஞன்.
குப்பிழான் கேணியடியை பிறப்பிடமாக கொண்ட திரு நடராஜா சிவரூபன் அவர்கள் பிரித்தானியா பேர்மிங்கம் நகரில் உள்ள வாகன
நேற்று மாலை சுவிஸ் நாட்டில் சிவலப்பிட்டி சனசமூக நிலையத்தினால் நடைபெற்ற ஒன்றுகூடலில் பல அங்கத்தவர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதோடு சிவலைப்பிட்டி சனசமூக நிலைய சுவிஸ் நாட்டுக்கான கிளை நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது
திருக்கேதீஸ்வரம் புதைகுழியை மீண்டும் தோண்ட நீதிமன்றம் உத்தரவு
                     
மன்னார்  திருக்கேதீஸ்வரம் மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளை மீண்டும் அகழ்வுப்பணிகளை மேற்கொள்ளுமாறு மன்னார்  நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
படகுகளை மீட்க இலங்கைவரும் குழு முதற்கட்டமாக 34 படகுகளை எடுத்துச் செல்வர்
                     
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களின்
காணாமல் போனவர் தொடர்பான இடைக்கால அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு
                     
காணாமல் போனவர்களை கண்டறியும்  ஜனாதிபதி  ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. 

கிரானைட் விசாரணை: அலுவலகத்தை காலி செய்ய சகாயத்துக்கு உத்தரவு!


கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட அரசு அலுவலகத்தை காலி செய்யுமாறு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது மதுரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வோம்: ரனில் மீண்டும் மிரட்டல்!

 எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை  சுட்டுக் கொல்லும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு உள்ளது

நான் உனக்கு பாய் பிரண்ட்தான்...பெண் காவலரிடம் `வழிந்த` உதவி கமிஷனர்

!

 சென்னை போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், பெண் காவலர் ஒருவரிடம் செல்போனில் பேசிய கிளுகிளுப்பான பேச்சு

பட்மிண்டன் சுவிஸ் ஓபன் ஐ இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வென்றார்

சுவி பாசலில் நடைபெற்ற இந்த சுற்றின் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார் .முன்ன்டதாக மற்றுமொரு இந்திவீரர் ஜெயராமை அரை இறுதியில் வென்றுள்ளார்

மீண்டும் ஒரு முறை ஐரோப்பிய தமிழரால் குலுங்கியது ஜெனீவா மாநகரம்

 
 
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா

16 மார்., 2015

19 க்கு அமைச்சரவை அங்கீகாரம்
                     
ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தல் உட்பட 8 சரத்துக்கள் அடங்கிய அரசமைப்பின்  19ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் விசேட வர்த்தமானியும் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது. 
 
இந்த திருத்தங்கள் அடங்கிய திருத்தச்சட்டமூலம் விசேட சட்டமூலமாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளது.
 
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பில் நேற்று கூடிய விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே 19ஆவது சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது.
 
 
தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சரவைக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் சட்டத் திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
  
1. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அகற்றப்பட்டு, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றமும் சேர்ந்து நிர்வகிக்கும் ஆட்சி முறையாக மாறும்,
   
2. இலங்கையில் அனைத்து தேர்தலிலும் விகிதாசார முறை நீக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றிபெற்றவர் என்ற முறை கடைப்பிடிக்கப்படும்.
   
3. ஒருவர் அதிகபட்சமாக இரண்டு ஆட்சிக்காலத்துக்கு மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற நிபந்தனை மீண்டும் கொண்டுவரப்படுகிறது.
   
4. ஜனாதிபதியின் ஓர் ஆட்சிக்காலம் என்பது ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படும்.
   
5. நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட பின்னர், அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்காது. ஒரு நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர்தான் அதனைக் கலைக்கும் உரிமை மறுபடியும் ஜனாதிபதிக்கு வரும்.
   
6. ஒருவர் ஜனாதிபதியாக இருக்கும்போது அவர் உத்தியோகபூர்வமாக செய்யும் காரியங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு இருந்துவருகின்ற சட்டத் தடை அகற்றப்படும்.
   
7. இலங்கையில் அதிகபட்சமாக 30 பேரே அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாகவும், அதிகபட்சமாக 40 பேரே துணை அமைச்சர்களாகவும் என ஆக மொத்தம் 70 பேரே அமைச்சர்களாக இருக்க முடியும் என்ற வரம்பு ஏற்படுத்தப்படுகிறது.
   
8. 17ஆம் அரசியல் சட்டத் திருத்தம் மீண்டும் நடைமுறைப்படும்.
   
9. நாட்டின் ஆணைக்குழுக்கள் ஜனாதிபதியால் அல்லாமல் சுயாதீனமான முறையில் மீண்டும் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும் இந்தத் திருத்தம் அமையும்.  ஆனாலும், அமைச்சரவையின் தலைவராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் தொடர்ந்தும் ஜனாதிபதியே விளங்குவார்.
   
10. பிரதமரையும் அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு இருக்கும். என்பதாகும். அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி  செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

15 மார்., 2015

தற்போது சுவிஸ் நாட்டில் சிவலப்பிட்டி சனசமூக நிலையத்தினால் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கிராம வளர்ச்சிக்கான ஒன்றுகூடல்...




ad

ad