விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் போகோ ஹராம் மற்றும் உக்ரேன் தீவரவாதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதோடு இது தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை நடத்தி வருவதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நடுக்கடலில் இடம்பெற்ற ஆயுத விற்பனை தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.