புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2019

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: வைகோவின் மனு ஏற்கப்பட்டது மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வைகோவின் மனு ஏற்கப்பட்டது.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் வில்சன் சண்முகம், என்.ஆர். இளங்கோ ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா பதவி

விலகிய எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசை காப்பாற்றும் வகையில், பதவி விலகிய எம்.எல்.ஏ.க் களுக்கு மந்திரி பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மந்திரிகள் அனைவரும்

7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் - சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

7 பேர் விடுதலை விவகாரத்தில் எங்கள் வேலையை சரியாக செய்தோம், இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
சட்டப்பேரவையில் 7 பேர் விடுதலை தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

யாழ்.கொக்குவிலில் வாள்வெட்டு குழு அட்டகாசம்! -3 வீடுகள் சேதம்-

யாழ்.கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.

கூட்டமைப்பின் ஆதரவைக் கோரிய ரணில்! - அலரி மாளிகையில் நடந்த 2 மணிநேர சந்திப்பு

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நாளையும், மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று மாலை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சுமார் இரண்டு மணி நேரம்

பிரபாகரனின் படத்துடன் வாரஇதழ்- விநியோகித்தவர் கைது செய்யப்பட்டு விடுதலை

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் அச்சிடப்பட்ட வாராந்த இதழை கடைகளுக்கு விநியோகிக்க சென்றவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைகளுக்குப் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: 16 கட்சிகள் எதிர்ப்பு,5 கட்சிகள் ஆதரவு

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: 16 கட்சிகள் எதிர்ப்பு,5 கட்சிகள் ஆதரவ முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட

8 ஜூலை, 2019

சுதந்திரக்கட்சிக்கு புத்துயிர்:ஆளுநர் கைகொடுத்தார்!

தெற்கில் சுதந்திரக்கட்சியா அல்லது பொதுஜனபெரமுனவா என ஆளாளுக்கு ஆட்பிடியிலிருக்க வடமாகாணத்தின் பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்தித்துள்ளார்.

சிங்கள இராஜ்ஜியத்தை உருவாக்க பொது பலசேனா மாநாட்டில் தீர்மானம்!

பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும் என பொதுபல சேனா கண்டியில் நேற்று

விக்கி - கஜன் கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி! - இன்று நடக்கவிருந்த பேச்சு ரத்து

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையில், கூட்டணி அமைப்பது குறித்து இன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுக்கள் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

5ஜி கோபுரம் அமைக்கும் பணிகளை இடைநிறுத்த ஆளுநர் உத்தரவு

யாழ்ப்பாணம்- மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்ளார்.

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பிரச்சினை குறித்து விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு

- சென்னை ஐகோர்ட்நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதி மறுத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

சுற்றுலாத்துறையை காப்பாற்றும் புலம்பெயர் தமிழர்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளமையினால் இலங்கை வருமான ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துள்ளது.அதிலும் பத்து வரையிலான அதிக சொகுசு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை விடுதி சங்கம் தெரிவித்துள்ளது.

டக்ளசுக்கு வந்த ஆசை கூடடமபியிற்கு வீழ்த்த எந்த பேயுடன் கூட்டு சேர தயார் போல சுரேஷ் உடன் வந்தாலே எதிர்ப்பு இதிலே வேற டக்ளஸுமா

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீா்க்ககூடிய நம்பிக்கை வெளிப்படுத்தப்படுமாக இருந் தால் வடக்கில் பொது கூட்டணி ஒன்றை உருவாக்க தாம் தயாா் என நாடாளுமன்ற உறுப்பினா் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளாா்.

விக்கி-கஜன் கூட்டணி பேச்சுக்கள் தோல்வி

வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை இணைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

வடமராட்சியில் 70 பவுண் நகைகள், 10 இலட்சம் ரூபா கொள்ளை

வட­ம­ராட்­சி­ - துன்னாலைப் பகுதியில் ­சுமார் 70 பவுண் நகை­க­ளும், 10 லட்­சம் ரூபா­ பணமும், கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளதாக பொலி­ஸார் தெரி­வித்­த­னர். வெளி­நாட்­டில் இருந்த புலம்­பெ­யர் உற­வி­னர்­கள், துன்­னா­லை­யில் உள்ள உற­வி­னர்­கள் வீட்­டுக்கு வந்­தி­ருந்த போது சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

அதிநவீன கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்கவில்!

அதிநவீன தொழில்நுட்ப வலசதிகளைக் கொண்ட ZS-ASN ரக The Basler BT-67 விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த விமானம் 1000 மீற்றர் உயரத்தில் இருந்து நிலத்தை துல்லியமாகவும்

7 ஜூலை, 2019

வைகோ-அன்புமணி உள்பட 6 பேரும் போட்டியின்றி தெரிவு

டெல்லி மேல்சபை தேர்தலில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஜனாதிபதி மைத்திரியின் அழைப்பை நிராகரித்தார் கனேடியப் பிரதமர்!

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை கனேடிய பிரதமர் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸ்  லீக்  சுற்று போட்டி   கிண்ணத்தை மீண்டும்  கைப்பற்றிய  யங்ஸ்டார் லீஸ் அணி 
  சுவிஸ் தமிழர் உதைபந்தாடட சம்மேளனத்தினால்  அறிமுகப்படுத்தப்படட  லீக்  முறையிலான  சுற்று போட்டிகளின்  இந்த  வருட சாம்பியனாக  மீண்டும் கடந்த வருடத்தை போலவே  லீஸ்  யங்ஸ்டார்  கழகம்   வெற்றி பெற்றுள்ளது இன்று  சூரிச் அவ்வோல்டனில்  நடைபெற்ற இறுதியாடடத்தில்  தமிழ்  யுனைடெட் கழகத்தை 5-2  என்ற ரீதியில்  வென்று  இந்த  லீக்  சாம்பியன் விருதை  தொடர்ந்து இரண்டாவது தடவையும்  கைப்பற்றி உள்ளது  லீஸ்  யங்ஸ்டார் கழகம் 

6 ஜூலை, 2019

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி - ரோகித் சர்மா 5வது சதம் அடித்து சாதனை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

வரலாறு தெரியாத வடக்கு ஆளுநர்! - மாவை சீற்றம்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தடையாக இருப்பதாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியிருக்கும் கருத்து பொய்யான

ஐஎஸ் உறுப்பினரை திருமணம் செய்த ஜெர்மன் பெண்ணுக்கு 5ஆண்டு சிறை!

ஜெர்மனைச் சேர்ந்த சலைன் எஸ் எனும் பெண் சிரியாவிற்கும், ஈராக்கிற்கும் சென்று இஸ்லாம் மதத்தை தழுவி இஸ்லாமிய அரசு (IS) குழு உறுப்பினர் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்துள்ளார்.

தவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி; வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்!

சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு , ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில். ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்கள் பற்றி வைகோ அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்த மனுக்களின்

நீராவியடிப் பிள்ளையார் ஆலய உற்சவம் ஆரம்பம்


முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று சனிக்கிழமை அதிகாலை
  கரும்புலி நாள்
புங்குடுதீவு  மண்ணுக்கு பெருமை  சேர்த்த     சாந்தா - இந்த தேவதையை எம்  இதயத்தில்  வைத்து  பூசிப்போம்

5 ஜூலை, 2019

காணிகள் விடுவிப்பதன்மூலம் தான் சமாதானத்தை பாதுகாப்பை ஏற்படுத்த முடியும்-மாவை!

காணிகள் விடுவிப்பதன்மூலம் தான் சமாதானத்தை பாதுகாப்பை ஏற்படுத்த முடியும்!
தமிழ்மக்களின் காணிகளை சுவீகரிப்பதன் மூலம் சமாதானத்தையே பாதுகாப்பையே ஏற்படுத்தாது காணிகள் விடுவிப்பதன்மூலம்

வைகோவுக்கு ஓராண்டு சிறை! தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்!

தமிழக அரசு தொடர்ந்த தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு! -அமைச்சர் தலமையில் ஆரம்பம்-

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகளின் ஆரம்ப விழா இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மாத்தறை- ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம்!

டைநிறுத்தப்பட்டிருந்த மாத்தறை- ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளை, மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு அரச ஊழியர்களுக்கு ஆளுநர் கடும் எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்கள், அலுவலக நேரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால், உடனடியாக அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண

சுன்னாகம் பொலிஸ் நிலைய கொலை - பொலிசாருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு மனு

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரான சுமணனை தடுப்புகாவலில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்தனர் என்று, முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு

4 ஜூலை, 2019

உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டம்: நியூசிலாந்து, பாகிஸ்தான் யாருக்கு வாய்ப்பு?

t உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்திற்கான வாய்ப்பு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளில் யாருக்கு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார்களா புலிகள்? ஆதாரத்தை கோரும் முன்னாள் முதல்வர்

விடுதலைப் புலிகளின் பிரதான வருமானம் போதைப்பொருள் விற்பனைதான் என்ற ஜனாதிபதியின் கூற்று முற்றிலும் பொய்யானது. அவர்களின் காலத்தில் இவ்வாறு போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டமை

நீராவியடியில் குழப்பம் - பிக்கு அடாவடி

முல்­லைத்­தீவு – செம்­மலை நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யார் ஆல­யத்­தில் நாளை­ம­று­தி­னம் சனிக்­கி­ழமை பொங்­கல் நிகழ்­வுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிலை­யில், அங்கு அத்­து­மீறி பல்­வேறு நிகழ்­வு­களை

வித்தியா கொலை வழக்கு - தலைமறைவான பொலிஸ் அதிகாரி தொடர்பில் விசாரணை

ங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப்

யாழ் - இந்தியா விமான சேவை: -ஆகஸ்ட் முதல் ஆரம்பம்-


சர்வதேச பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படும் பலாலி

குனிந்து, கும்பிட்டு பதவி : செந்தில் பாலாஜி பேச்சால் சட்டசபையில் கூச்சல்

குனிந்து, கும்பிட்டு பதவி : செந்தில் பாலாஜி பேச்சால் சட்டசபையில் கூச்சல் குனிந்து கும்பிட்டு பதவி என சட்டசபையில் செந்தில் பாலாஜி பேசியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

3 ஜூலை, 2019

தினகரன்  ஆதரவு எம் எல் ஏ கலைச்செல்வனும் அதிமுக இல்  இணைந்தார் 
அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இந்தியாவைப் சேர்ந்த கமலா ஹாரிஸ் 2-ம் இடம் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் 2-ம் இடத்தில் உள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கை சுப்ரீம் கோர்ட் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

கால்பந்து பயிற்சிக்கு ஸ்பெயின் செல்லும் இளவாலை மாணவன்



யாழ்.இளவாலை சென் ஹென்றியரசா் கல்லுாாி மாணவன் பாக்கிய நாதா் டேவிட்டாலிங்சன் என்ற 12 வயது மாணவன் கால் பந்தாட்டி பயிற்சிக்காக ஸ்பெயின் நாட்டுக்கு செல்லவுள்ளான்.

இரவில் பெண்களுக்கு தொல்லை கொடுத்தவர் மடக்கிப் பிடிப்பு!

வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்களின் தங்ககம் ஒன்றிற்கு சென்று தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆயுதப்போராட்டத்துக்கு அழைப்பு விடுகிறாரா சம்பந்தன்?

தற்போதைய அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தமிழ் தலைவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த ஏமாற்றம் காரணமாகவே ஆயுதம் ஏந்தினாலா இனப்பிரச்சினைக்கு தீர்வு

தினகரனின் அமமுக முற்றுப்புள்ளியா இசக்கி ரத்தினசபாபதி சசிரேகா அதிமுகவில் தலைமைஅலுவலகம் கூட இல்லை விரைவில் இருவரும் வருவார்கள்: ரத்தினசபாபதி

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி இன்று (ஜூலை 2) முதல்வரை சந்தித்த பிறகு, “அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
நியூசீலாந்து 11  இங்கிலாந்து 10 பாகிஸ்தான் 9  ஸ்ரீலங்கா 8  யார்  உள்ளே யார்  வெளியே
எல்லா நாடுகளுக்கு  ஒரு  போட்டி மீதமுள்ள  நிலை இப்போது  இனிவரும் போட்டியில் பாகிஸ்தான்  பங்களாதேஷை  வேனல்  பட்ஷத்தில் இங்கிலாந்து நியோசீலாந்திடம் தோற்றால் இங்கிலாந்து வெளியே  பாகிஸ்தான் உள்ளே.  பாகிஸ்தான் வெல்லும் பட்ஷத்தில் நியூசீலாந்து  இங்கிலாந்திடம் தோற்றால் பாகிஸ்தான்  உள்ளே  சமபுள்ளிகள்  ஆனால்  தமக்குள்ளே  நடந்த போட்டியில் பாகிஸ்தான்  வெற்றி பெற்றுள்ளதால்  இது  சாத்தியம் இலங்கை இந்தியாவை  வென்றால் அதேசமயம் இங்கிலாந்தும்  தோற்று பாகிஸ்தானும் தோற்றால் இலங்கையும் இங்கிலாந்தும் சமபுள்ளி  ஆனால்  இங்கிலாந்து இலங்கையை வென் றுள்ளதால் இனி இலங்கை  வர முடியாத நிலை 

அப்பா என அழைத்த லொஸ்லியாவையே வெளியேற்ற நினைத்த சேரன்ஆனால் மற்றவர்கள் செர்னாஸியே விளக்க சிபாரிசு செய்து உள்ளார்கள!

பிக்பாஸ் வீட்டில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சென்ற வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் சண்டை-மோதல் என இருந்தாலும்,

இராணுவத்தின் ஆயுதங்களினாலேயே பிரபாகரன் போர் செய்தார்! - சிறிதரன் எம்.பி

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை உலகமே வியந்து பார்க்குமளவுக்கு கொள்கை ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் உயர்ந்த அமைப்பாக கொண்டு நடாத்திய தலைவர் பிரபாகரனுக்கு போதைப்பொருள் விற்று

இறுதிப் போரில் புலிகள் யாரும் சரணடையவில்லை! - இராணுவம்

இறுதிப்போரின் போது, விடுதலை புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தகவ​ல் உரிமைச் சட்டத்தின் கீழ், 2019.04.04 அன்று அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு, 2019 ஜூன் 25ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதிலிலேயே

கீரிமலையில் 62 ஏக்கர் காணிகளை விடுவிக்க கடற்படை இணக்கம்

வலி.வடக்கு கீரிமலையில் கடற்படை முகாம் மற்றும் சொகுசு மாளிகை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து காணி உரிமையாளர்களிடம் வழங்கப்படும் என உத்தரவாதம் வழங்கியிருக்கும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், சொகுசு மாளிகை அமைந்துள்ள காணி உரிமை கோரப்படும்

1 இலட்சம் தமிழர்களை திரட்ட முடியுமா? - சம்பந்தன், சுமந்திரனுக்கு சவால் விட்ட முஸ்லிம் எம்.பி

அமெரிக்காவுக்கு எதிராக 1 இலட்சம் முஸ்லிம்களை தன்னால் திரட்ட முடியும் என கூறியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், அவ்வாறு சுமந்திரன் மற்றும் சம்பந்தனால்,

அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி முதலமைச்சருடன் திடீர் சந்திப்ப

தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட ரத்தினசபாபதி முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.

உலக கோப்பை கிரிக்கெட்: 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காள தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில், 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

2 ஜூலை, 2019

கிரிக்கெட்  உலகக்கிண்ண போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும்  அணிகள்  எவை அவுஸ்திரேலியாவும்  இந்தியாவும்  முதலிரண்டு இடங்களை பிடிக்கும்   சாத்தியம்  உண்டு 
இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும்  இரண்டு  போட்டிகள்   இருக்கிறது மற்ற  நாடுகளுக்கு  தலா ஒரு  போட்டி மட்டுமே  இந்திய 

200க்கும் அதிகமான ஈழ ஏதிலிகள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பம்

தமிழகம் - மதுரை மாவட்டத்தில் வசிக்கின்ற 200க்கும் அதிகமான ஈழ ஏதிலிகள், இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 29 வருடங்களுக்கு மேலாக அங்கு தங்கியுள்ள அவர்கள், தங்களை இந்திய
 வை கோவும்  அன்புமணி ராமதாசும் இனி  மாநிலங்களவையில்  முழங்குவார்கள் 

அமமுக கூடாரம் காலி தலைமைகூடாரமும் காலி அ.தி.மு.கவில் இணைய இருப்பதாக அமமுகவின் இசக்கி சுப்பையா அறிவிப்பு


அ.தி.மு.கவில் இணைய இருப்பஆயிரம் தொண்டர்களுடன் அ.தி.மு.கவில் இணைய இருப்பதாக அமமுகவின் இசக்கி சுப்பையா அறிவித்து உள்ளார்.

கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­க­வேண்டுமாம்!

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக மக்கள் விடு­தலை முன் ­னணி முன்­வைத்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் முழு ஆத­ர­வையும் வழங்­க­வேண்டும். வாக்­கெ­டுப்பில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக கூட்­ட­மைப்பு வாக்­க­ளிக்கும் என

வீனஸ் வில்லியம்சை வீழ்த்திய 15 வயது வீராங்கனை


ஐந்து முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்சை
    அமெரிக்க  பிரசையாக இருக்கும் போது  கோத்தபாயவுக்கு எதிராகதாக்கல்  செய்த வழக்குகளுக்கு  அமெரிக்க சடடப்படி விசாரனைப்படுத்தப்படவேண்டும்  

ஜனாதிபதி தேர்தலில் முதலில் மக்களே முடிவு

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மக்களின் முடிவின் பின்னரே எமது முடிவு என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தரவை கைது செய்ய உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தகவல்கள் அறிந்திருந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரைக்

போதைப்பொருள் வியாபாரம் செய்யும் தேவை பிரபாகரனுக்கு இருக்கவில்லை!- ஜனாதிபதிக்கு சுமந்திரன் பதிலடி

போதைப்பொருள் வியாபாரம் நடத்த வேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருக்கவில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்த் தேசியக்
பெரிய மனிதன்  குறுகிய   எண்ணம்  சேரனின் துவேஷக்குணம்
பிக்போஸ்  நிகழ்ச்சியில்  அடுத்த கட்டிட  விலகல்  முறைக்கு  வேட்பளராய்  சிபாரிசு  செய்யும்  நிகழ்வில்  யாருமே   நினைத்து பார்க்காத இலங்கை தமிழர்  இருவரையும்  சேரன்  நேரடியாக  நீக்க  விரும்புவதாக  சிபாரிசு செய்து தனது  துவேஷ குணத்தை   காறி   உமிழ்ந்துள்ளார்  உண்மையில்  அவர்களை  நீக்க  கூடிய  காரங்கள் கூட  இல்லை  வேறு எவரும் கூட  அவர்களை  சிபாரிசு  செய்யவில்லை  எல்லோரும்  எதோ பிரச்சினை காரணமாக  மற்றவர்களை  நீக்க  சொல்கிறார்கள்  உண்மையில்  இந்த  இருவரையும்   நீக்க கூடியகாரண ங்களே இல்லாத பொது என்  இப்படி   கீழிறங்கி   வந்தார்  சேரன் என்னும் பெரும்புள்ளி 

உலக கோப்பை கிரிக்கெட்: 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி



உலக கோப்பை கிரிக்கெட்: 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

1 ஜூலை, 2019

இலங்கை  மேற்கிந்திய தீவுகளை  23  ஓட்டங்களினால்  வெற்றி பெற்றுள்ளதுLive

Current Run Rate

6.3

Last 5 Ov (Run Rate)

23/2 (4.60) 

கல்வி அமைச்சர் காரியவசமிடம் 03 மணித்தியாலங்கள் விசாரணை

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 03 மணித்தியாலங்களின் பின்னர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். பாடசாலை புத்தக அச்சீட்டின் போது கல்வி அமைச்சர்

இயக்குநர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா திடீர் ராஜினாமா!

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்துக்கான தலைவராக மூத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல் கைதி முத்தையா சகாதேவன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்

சிறீலங்கா அரசு, சிறைச்சாலை அதிகாரிகளும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு உரியமுறையில் சிகிச்சை
அவிஸ்கா பெர்னாண்டோ102  பந்துகளில் 104 ஓட்டங்களை எடுத்து  ஆடிக்கொண்டிருக்கிறார் இலங்கையின்  துடுப்பாட் டம்  அபாரம்   மேட்ற்கிந்திய தீவுகளின்  பந்து வீச்சை  விளாசி  தள்ளுகிறார்கள்  

நாம் தமிழர் கட்சிக்கு பணம் எங்கிருந்து வருகிறது? சீமான் பதில்!

நாம் தமிழர் கட்சிக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நேர்காணில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், கட்சிக்கு பணம்

சுவிஸ் வங்கிகளில் பணம் வைப்பு சிறீலங்கா 141 -ஆவது இடம்

சுவிஸ் வங்களில் அதிக அளவில் பணம் வைத்திருப்போர் பட்டியலில் இந்தியா 74-ஆவது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து ஸ்விட்சர்லாந்து நாட்டின் மத்திய வங்கி வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்கள்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸ், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 7 அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளுக்கு விடுதலை - அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு!


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலைச் செய்வதற்கான, அமைச்சரவைப் பத்திரமொன்றை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு

ஜூலை 11இல் கவிழுமா ஐதேக அரசு?

அரசாங்கத்துக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் ஜேவிபியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம், வரும் 10, 11ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக, ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சி மாநாட்டில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன!


யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாட்டில், 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது யார்-யாருக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது யார்-யாருக்கு வாய்ப்பு?

மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியில் இணைந்தார்.

டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அ.தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தபோது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட
     தினகரனின் வலது கை   தங்க  தமிழ்ச்செல்வன்  திமுகவில் இணைந்தார் 

ண்டியில் 10 ஆயிரம் பிக்குகள் கலந்து கொள்ளும்-பொதுபல சேனா!

கண்டி - தலதா மாளிகை திடலில் எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி பௌத்த பிக்குகள் மாநாடு ஒன்றை பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. சுமார் ஒரு இலட்சம் பொது மக்கள் மற்றும் 10 ஆயிரம்

உலக கோப்பை கிரிக்கெட்: 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிரோகித் சர்மா சதம் விளாசல்


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

30 ஜூன், 2019

இங்கிலாந்து 35 runs 5.5 over 0 w உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு

இங்கிலாந்து 35 runs 5.5 over 0 w
உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு

அனுராதபுர விபத்தில் மூன்று பெண்கள் பலி

அனுராதபுர- தம்புத்தேகம வீதியில், மொரகொட சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். லொறி ஒன்றுடன் வான் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட திட்டம்!

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக எதிர்வரும் ஜுலை 3ஆம் திகதி பாரிய கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில் கோட்டை

இராட்சத மீனைப்பிடித்த மீனவர்கள் கைது!

கிளிநொச்சி - நாச்சிக்குடா கடல் பகுதியில் நேற்றுக்காலை மீனவர் ஒருவரின் வலையில் சுமார் 2000 கிலோ எடையுள்ள அரிய வகை மீன் ஒன்று சிக்கியது. இந்த அரியவகை மீனை பிடி
த்தமைக்காக முழங்காவில்

பெண்களின் கழிப்பறையில் வீடியோ எடுத்த கடற்படை அதிகாரி கைது!

காலியில் அமைந்துள்ள பிரபல ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் ஊழியர்கள் பயன்படுத்தும் பெண்களின் கழிப்பறைக்குள் வீடியோ எடுத்த கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கழிப்பறையில் இந்த சம்பவம்

தூக்குத்தண்டனை கைதிகள் விபரம் வெளியாகியது - 08 பேர் தமிழர்

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணி அடுத்த வாரம் ஆரம்பம்!- 3 மாதங்களுக்குள் முடிக்க திட்டம்

பலாலி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக நவீனமயப்படுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரிதி அமைச்சர் அசோக் அபேசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழரசு கட்சி தலைவராக மாவை தெரிவு!

தமிழரசு கட்சி தலைவராக மாவை தெரிவு!
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் மாதர் முன்னணி மாநாடு, வாலிப முன்னணி மாநாடு ஆகியன இன்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றன.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக நா

28 ஜூன், 2019

அபிவிருத்தி என்ற பெயரில் உரிமைகளை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை - சம்பந்தன்

அபிவிருத்தி என்ற பெயரில் உரிமைகளை விட்டுக்கொடுக்க நாம் ஒருபோதும் தயாராக இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தினகரனின் வலது கரம் தங்க தமிழ்ச்செல்வன் திமுக வில் சங்கமம் அமுக வீழ்ச்சியா

தலமை அதிர்ப்தியாலும் கருத்து மாறுபாடு காரணத்தாலும் தினகரனின் அமமுக கட்சியிலிருந்து விலகிய தங்க.தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்ப்பட்ட நிலையில் இன்று திமுகவில் ஐக்கியமாகி விட்டார்.

தினகரனின் வலதுகரம் இனி திமுகவின் தேனிக்கரம்

தலமை அதிர்ப்தியாலும் கருத்து மாறுபாடு காரணத்தாலும் தினகரனின் அமமுக கட்சியிலிருந்து விலகிய தங்க.தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்ப்பட்ட நிலையில் இன்று

27 ஜூன், 2019

கூட்டமைப்புக்கு மாற்றான அணி சாத்தியமில்லை! -சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக மாற்று அணியைக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் இன்றைய நிலையில் காணவில்லை. ஏனெனில் கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கக் கூடிய கட்சிகள்

உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது,

உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது,லக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது

26 ஜூன், 2019

யாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்

யாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்படுவதற்கான தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் குறித்த அச்சமும் மிகவேகமாக பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவை விட திறமையாக செயல்படுகிறதா ஓபிஎஸ் ஏபிஎஸ் கூடடணி தங்க தமிழ்ச்செல்வனை வீழ்த்தியது அதிமுக தங்க தமிழ்ச்செல்வன்ஞாயிற்றுக்கிழமை முதல் தினகரன் தரப்புடனான தொடர்புகளை முற்றிலும் துண்டித்துள்ளார்

தினகரன் அணியிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் உயர்த்திய போர்க்கொடியைத் தொடர்ந்து, அடுத்த அதிரடிகளை அந்த கட்சிக்குள் ஏற்படுத்த, ஆளும் கட்சி தீவரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த வாரம்

தூக்கில் போடுவதை நிறுத்தக் கோருகிறது சர்வதேச மன்னிப்புச் சபை!

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

தெரிவுக்குழுவுக்கு வராவிடின் ஜனாதிபதி மீது சட்ட நடவடிக்கை!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஜனாதிபதியை அழைத்தால், அவர் நிச்சயமாக முன்னிலையாக வேண்டும் என்று தெரிவுக்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

மூடிய அறைக்குள் சஹ்ரானின் மனைவி சாட்சியம்;

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

ad

ad