புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2019

நாடு கடத்தக் கோரும் ஆவணத்தில் ஜனாதிபதி கைச்சாத்து

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துமாறு கோருவது தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு அனுப்பப்படவுள்ள ஆவணங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று கையெழுத்திட்டுள்ளார்.

சிங்களை மக்களை ஏமாற்றும் போலி தேசியவாதிகள்

தேசிய தலைவர்கள் எனக் கூறி கொள்வோர், தென்னிலங்கை சிங்கள மக்களைத் தவறாக வழி நடத்தி வருவதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்மக்களுக்கு துரோகமிழைத்துள்ளது கூட்டமைப்பு

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கிடையாது என்று, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிக்கான குரல் அமைப்பின் மாநாடு இன்று பத்தரமுல்லையில் உள்ள 'அபே கம' கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுகாதார தொண்டர்களுக்கு மீண்டும் நேர்முகத் தேர்வு

வடக்கில் உள்ள சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனம் குறித்து மீண்டும் 3 வாரங்களுக்குள் நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே

முதல் படத்திலேயே விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் லொஸ்லியா

தற்போது நடைபெற்றுவரும் பிக்பாஸ் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை பெண்மணி லொஸ்லியா திரைத்துறையில் காலடி எடுத்துவைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தரில் அசைய மறுத்தது மஞ்சம்

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் திருமஞ்சம் இன்று இரவு (05) நடைபெற்றபோது மஞ்சத்தின் சில்லு அசையாமல் மஞ்சம் இடை நடுவே நின்றமையால் பக்கதர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

திகார் சிறைக்கு செல்லும் சிதம்பரம்” ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கான சிபிஐ காவல் முடிந்த நிலையில் 6-வது முறையாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்

ஒன்றுக்கு பிணை, இன்னொன்றுக்கு திகார் சிறை


ஐ.என்.எக்ஸ் வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில், திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது ரோஸ் அவென்யூ சிறப்பு நீதின்றம்.

5 செப்., 2019

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் அரையிறுதிக்கு தகுதி- பென்சிக், பினாக்கா முன்னேற்றம்

யூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸில் நடால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் அரையிறுதிக்கு தகுதி- பென்சிக், பினாக்கா முன்னேற்றம்
நடால்

சஜித்துக்கு 50 எம்.பிக்கள் ஆதரவு

சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாளை கையளிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.

4 செப்., 2019

வடக்கு மாகாண சுகாதார தொண்டர் நியமனத்தில் முறைகேடு: - எச்சரிக்கை விடுத்த சுகாதார தொண்டர்கள்

வடக்கு மாகாணத்தில் உள்ள ஜந்து மாவட்டங்களிலும் கடந்த பல வருடகாலமாக சுகாதார தொண்டர்களாக கடையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நாளைய தினம் ஆளுனர் தலமையில் நடைபெற உள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள ஜந்து

பலாலி துப்பாக்கிச் சூட்டில் சிப்பாய் படுகாயம்

பலாலி இராணுவ முகாமுக்குள், இன்று அதிகாலை புகுந்த மர்மநபர்கள், பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்

புதிய அரசு போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும்

இலங்கையில் ஆட்சியமைக்க போகும் புதிய அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை நடத்த வேண்டும் என இந்திய அமைதிப்படையின் முன்னாள் தளபதியும், பாதுகாப்பு ஆய்வாளருமான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்கள் கோத்தாவுக்கு வாக்களிக்கமாட்டார்கள்

வடபகுதி தமிழர்கள் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நியுஸ் இன் ஏசியாவிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
  பிக்போஸ் வீட்டுக்குள் வரவிருக்கும் தர்சனின் தாயார் , குடும்பத்தவர் 
முன்னைய  பிக் பாஸ்  நிகழ்வுகள் போல  இந்த தொடரிலும் பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்ப அங்கத்தவர்கள்  விரைவி ல்  பிக்போஸ் வீ ட்டுக்குள்  விருந்தாளிகளாகளாக வரவிருக்கிறார்கள்  இலங்கையில் இருந்தும் தர்சனின் குடும்பத்தவர்  வருவது உறுதியாகி உள்ளது தர்சனின் தாயார் சகோதரியுடன் வரவிருக்கிறார் என  நம்பத்தகுந்த  செய்திகள் கூறுகின்றன 

3 செப்., 2019

பாஜக தலைவர் பதவியை ஏற்கச் சொல்லி ரஜினிக்கு அழுத்தம்

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதினால் அவர் பாஜக கட்சியல் இருந்து விலகி தனது பொறுப்பை ஏற்க தயாராகிவிட்டார்.இந்நிலையில் தமிழக பாஜகவின் தலைமை பொறுப்பை ஏற்பதற்கு தலைவர்கள் பின்னடித்து வருவதாக தமிழக புலனாய்வு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

மைத்திரி- மஹிந்த சதியே காரணம்

புதிய அரசியல் அமைப்பு தடைப்பட்டுப் போனதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம் – கொக்குவில் பிடாரி அம்மன் ஆலயம் அருகே உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று, வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி தளபாடங்கள் மற்றும் உடமைகளை அடித்து நொருக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த இச் சம்பவத்தின் போது

கோத்தா வந்தால் கொடூரங்கள் தலைவிரித்தாடும்

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றால், நாட்டில் மீண்டும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் உட்பட கொடூரங்கள் தலைவிரித்தாடும் என அமைச்சர் ரவீந்திர சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக

ad

ad