புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2019

சிவாஜிலிங்கம் மற்றும் ஹிஸ்புல்லாவால் நம்பிக்கையடைந்திருக்கும் மஹிந்த அணி; காரணம் இதுதான்!

சிதமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைக்கும் வாக்குகளை சிவாஜிலிங்கமும் - ஹிஸ்புல்லாவும் சிதறடிப்பார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நம்பிக்கை

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்தரப்பு பிரதிநிதிகள் பொது இணக்கப்பாடு? ஞாயிறன்று உடன்படிக்கையில் கைச்சாத்து!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை ஒரே குரலில் வெளிப்படுத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சியின் பலனாக இன்று இடம்பெற்ற மூன்றாவது சந்திப்பில் பங்குபற்றிய 6 கட்சிகளும் பொது இணக்கப்பாடொன்றுக்கு

நெல்சன் மண்டேலாவை வெல்ல வைத்தவர்கள் கோத்தாவுடன் பேசுவதா?கஜேந்திரன்

தேர்தல் பூகோளப் போட்டியைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில், தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்க வேண்டுமென்பதே எங்கள் நிலைப்பாட்டுக் கோரிக்கை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயக போராளிகள் -சஜித்திடம் எம்பி சீற்:பேரம் படியாமையால் கோத்தா?

சஜித்துடனான பேரம் படியாத நிலையில் ஜனநாயக போராளிகள் கோத்தா பக்கம் பாய்ந்துள்ளனர். முன்னாள் போராளிகளை சிறியளவில் உள்ளடக்கிய கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவையும்; மிக இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மொனராகலையில் 15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது

மாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவனையும் நேற்று (11) கைது செய்துள்ளனர்.

வெளியாகியது தேர்தல் முடிவுகள்! பொதுஜன பெரமுன அபார வெற்றி

எல்பிட்டி பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

11 அக்., 2019

சென்னை  வந்த  சீனப்பிரதமருக்கு  முற்றுமுழுதான  தமிழ் வரவேற்பு தாரை  தாம்பத்திடம்  நாதஸ்வரம்  தவில் பரதநாட்டியம்  ஒயில் நடனம் மயிலாடடம் பொய்கால்  குதிரைஆடடம்  சாதம் சாம்பார்  வலினிதுகிலும் தமிழ் உடை களுடன்  மக்கள்  பெண்கள் ஆண்கள் ஒரே  வண்ண சீருடை 

பிரபல நகைக் கடை கொள்ளை வழக்கின் தலைவன் முருகன் பெங்களூரில் சரண்

அக்டோபர்- 1 ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் சுவற்றை துளையிட்டு ரூபாய் 13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். திருவாரூர் அருகே நகைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற சுரேஷ், மணிகண்டனை காவல்துறையினர் துரத்தி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர் tதென் ஆ

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

கிண்டி ஐடிசி ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

கிண்டி ஐடிசி ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங், கிண்டி சோழா ஓட்டலில் இருந்து மாமல்லபுரத்திற்கு புறப்பட்டார்.
புங்குடுதீவில் இன்று காலை  11 மணி முதல் மாலை  3 மணிவரை  நல்ல மழை   பெய்துள்ளது 

சுதந்திர கட்சியை அழிக்க இடமளிக்க வேண்டாம் சந்திரிகா தயாசிறிக்கு அவசர கடிதம்


பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி பெறுமதியான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்க இடமளிக்க வேண்டாம் என்று தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அந்த கட்சியின் பொதுச்

கூட்டமைப்பாளர்கள் உரிய முடிவை உரிய வேளையில் எடுப்பார்கள் என்றும், அது சரியான முடிவாக இருக்கும் மனோகணேசன்.



தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசின் புற ஆதரவு கட்சி. அது உள் பங்காளி கட்சி அல்ல.எனவே எடுத்த எடுப்பிலேயே வந்து ஆதரவு அளித்தே விடுங்கள் என்றும், எங்கள் மேடையில் ஏறி நின்று கை காட்டுங்கள் என்றும் அவர்களை நாம் அவசரப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார் அரச அமைச்சர் மனோகணேசன்.

காட்டுக்குள் இளம் குடும்பஸ்தர் உயிருடன் எரித்துக் கொலை

வவுனியாவில் நேற்று காணாமல் போன இளம் குடும்பத் தலைவர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஊழல் வாதிகளை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைக்க முயற்சி


தூய்மையான மக்கள் மயமான அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம் எனத் தெரிவித்த புதிய ஜனநாயக

10 அக்., 2019

தலைவன் வேண்டுமா? கொலையாளி வேண்டுமா?ரணில்

ஜனாதிபதி பொதுமக்களின் தலைவராக இருக்க வேண்டுமா அல்லது ஒரு கொலையாளியாக இருக்க வேண்டுமா என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

கோத்தாவை மிரள வைக்கும் மக்கள் படை சஜித்துடன்

காலி  முகத்திடலில்இலங்கை வரலாற்றில் கண்டிராத  மக்கள் வெள்ளம்    - கோத்தாவை  நடுங்க  வைத்த நிகழ்வு 
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது பிரச்சார கூட்டம் இன்று (10) கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பெருந் தொகை மக்கள் அலைகடலென திரணட்டிருந்தனர்.


சுமார் 5 இலட்சம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அருகில் உள்ள வீதிகள் மூடப்பட்டு இந்த கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பல கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

கோத்ததாபய ராஜபக்சவின் முதலாவது பிரச்சார கூட்டம் நேற்று அனுராதபுரத்தில் நடைபெற்றது. கோத்தாபயவின் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையிலும் சஜித்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையிலும் பாரியளவில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சஜித்திற்கான மக்கள் ஆதரவை கண்டு கோத்தபாய அணி கலக்கம் அடைத்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.




வரலாற்றில் முதல் தடவையாக காலி முகத்திடலில் ஒன்று கூடிய நாட்டுப் பற்றுள்ள மக்களை தான் கௌரவமான முறையில் தலைவணங்குகின்றேன். ரணில

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தும் தேசத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலும் நடாத்தப்பட்ட இன்றைய கூட்டத்துக்கு வருகை தந்த மக்களுக்கு

ஈழவிடுதலை போராட்டத்தில் பெரும் பிணைப்போடு இருந்த புலிகளின் கடலோடி சீதாராம்: ச.ச. முத்து

சீதா அண்ணா அல்லது சீதாராம் அண்ணா இயற்கை எய்திவிட்டார் என்ற சேதி தொலைபேசி வழியாக வந்து காது இறங்கியது.இந்த நேரம் சீதாராம் அண்ணாவின் உடல் தமிழ்நாட்டின் வேதாரண்யம் கோடிக்கரையில் தீயில் சாம்பலாகி இருக்கும்.

7 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்- அதிபர் கைது!

கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹெல்பொட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ad

ad