புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2019

திருக்கேதீஸ்வர வழக்கில் முன்னிலையான சுமந்திரன் - கூட்டமைப்பை எச்சரிக்கும் மறைமாவட்டம்

மன்னார் திருக்கேதீச்சர வளைவு தொடர்பான வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் ஒரு தரப்பினர் சார்பாக ஆஜராகியுள்ளமையானது பக்கச்சார்பானது என்று குற்றம்சாட்டியுள்ள, மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குநர், இவ்வாறு தமிழ் தேசியக்

கூட்டமைப்பின் பொது அறிவிப்பு இன்று

ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் முடிவுகள் தொடர்பாக இன்று பொது அறிக்கை வெளியிடப்படும் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

சமஷ்டி வேறு ஐக்கியம் வேறு! - மகிந்தவுக்கு சஜித் பதிலடி

ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர்ந்து நாட்டின் சுயாதீனத்தை, நாட்டின் ஐக்கியத்தை பாதுகாப்பதே தனது பொறுப்பு என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடும் துவேசத்தை கிளப்பி வாக்கு பெறும் நோக்கம் தமிழர்களுக்கு ஒருபோதும் சமஷ்டி ஆட்சி வழங்கப்படாது, நாடு பிளவுபட அனுமதிக்க மாட்டோம்: மஹிந்த இறுமாப்பு

தமிழ் மக்களுக்கு ஒருபோதும் சமஷ்டி வழங்கப்படாது என இறுக்கமாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாடு பிளவுபடுவதை அனுமதிக்க முடியாது எனவும் கடும்தொனியில் கூறினார்.

சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான பிரச்சாரத்தில் தமிழ்த் தேசிய முன்னணி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் தேசியகட்சிகள் தமிழர்பிரதேசத்தில் ஆக்கிரமித்துள்ள நிலையில் தமிழ்த் தேசிய முன்னணியும் தமது பிரச்சாரத்தை தொடக்கியுள்ளனர்,
கருத்துக்கணிப்பு .ஜனாதிபதி தேர்தல் -இரு பெரும் வேட்ப்பாளர்களுக்கும்  பலத்த போட்டி  நிலவுகிறது .காலம்  போக  மாற்றமடையலாம் 

கோத்தாவுக்கு ததேகூ எம்பிகள் ஆதரவு?

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறைமுகமான ஆதரவினை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த மூத்த ஊடகவியலாளர் பெருமாளின் உடல் யாழ்மருத்துவ பீடத்திடம் கையளிப்பு


நேற்று (05) தனது 86வது வயதில் மறைந்த மூத்த ஊடகவியலாளர் பிஎஸ்.பெருமாளின் விருப்பத்தின் பேரில் அவரது உடல் யாழ்ப்பாணம் மருத்துவப் பீட மாணவர்களின் ஆய்வுக்காக மருத்துவ பீடத்திற்கு கையளிப்பட்டுள்ளது

5 நவ., 2019

சஜித்தை ஆதரிக்க முடிவு செய்தது ஏன்? - மன்னாரில் சுமந்திரன் விளக்கம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, மன்னார் மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் குறித்த

mo.we.sa சென்னையாழ்10.35.12,00. யாழ்சென்னை 12,45-14.10 விமான சேவை- நேர அட்டவணையை வெளியிட்டது அலையன்ஸ் எயர்

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான அலையன்ஸ் விமான சேவைகள் நவம்பர் 11ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது. திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானங்கள் சேவைகளில் ஈடுபடவுள்ளன.

கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு

முல்லைத்தீவு- கேப்பாபுலவு மக்களின் காணிப் பிரச்சினை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுப்பேன் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு- கேப்பாபுலவு மக்களின்

பிரான்ஸ் பேருந்து விபத்தில் இலங்கையர்களும் சிக்கினர்

பிரான்சில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து நேற்று விபத்துக்குள்ளானதில் இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர்.
பிரான்சில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து நேற்று விபத்துக்குள்ளானதில் இலங்கையர்கள்

4 நவ., 2019

பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் தாமதம் - இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு

கேட்டார்ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதத்துக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார்.

நவம்பர் 15 அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை நாளாக கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலைக் குடித்து விட்டு அன்னம் தமிழர்களை கைவிட்டு விடும்!- சிவாஜிலிங்கம

தமிழரசு கட்சி, ஐந்து கட்சிகள் மற்றம் யாழ். பல்கலைக்கழகத்திற்கு மாத்திரமல்ல தமிழ் மக்களிற்கும் பச்சைத் துரோகத்தினை செய்துள்ளது என ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரெலோ, புளொட் நாளை முடிவு அறிவிப்பு! - ரணிலுடன் பேச்சு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவும், புளொட்டும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளை தமது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவும், புளொட்டும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளை தமது முடிவை

யார் வென்றாலும் ஜெனிவாவில் நெருக்கடி

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் யாராக இருந்தாலும், இலங்கை விவகாரம், அடுத்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நெருக்கடியாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது. இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை

ஜனாதிபதி தேர்தல் -முடிவெடுக்கும் அதிகாரம் சம்பந்தனிடம்

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ள அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தி
கூட்டமைப்பினர்  மீது செருப்பு வீச்சு என்ற  பொய் பிரசார  அலை
வவுனியாவில்  நடைபெற்ற  தமிழரசுக்கட்சி கூடத்தின் முடிவில்  உறுப்பினர்கலள்  மீது  செருப்பு  வீசப்படடதாகவும் செருப்பால் அவர்களை  அடித்ததாகவும்  பல இணையங்கள் உண்மைக்கு புறம்பான  போய்  செய்திகளை கடடடவிழ்த்து விட்டுள்ளதாக  விமர்சகர்கள் குமுறுகிறார்கள் காணாமல் போனோர்  சங்க  பெண்  ஒருவர்  செருப்புடன்  நிற்கும் படத்தி னை  போட்டு   பல விசமத்தனமான கற்பனை  கதைகளை கட்டி  செய்தி  இட்டு இணையங்கள்  பரபரப்பை  உண்டுபண்ணுவதாகவும் வெளியே   ஆர்ப்பாடுடம் செயதோர்  பொலிஸாரினால் தடுக்கப்பட்டு இருந்ததே  உண்மை எனவும் செய்திகள் கூறுகின்றன .சுதந்திர நாடொன்றில் எங்கும் யாருக்கு  முன்பாகவும் இது üபோன்ற ஆர்ப்பாட்ட்ங்களை  செய்ய முடியுமெனவும்  வெறுமனே    வெளியே  இப்படி   குவிந்து நின்ற பின்னர்  படங்களை  எடுத்து   எதோ பாரிய  அசம்பாவிதம் நடந்தது போல  பொ ய் பிரசாரங்களில் ஈடுபடுவது இயல்பு என்றும்   கூறப்படுகிறது உண்மையில்  எந்த உறுப்பினர் மீதும் செருப்பு  வீசப்படவோ  அல்லது செருப்பினால்  தாக்கப்படவோ  இல்லை என்பதே  உண்மை 

இறுதி முடிவு எப்போது? சுமந்திரன் விளக்கம்


ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்படும் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ad

ad