புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2020

என் நினைவுகளில் இருந்து ரூபன் சர்மா ----
---------------------------------------------------------------
இரு வருடங்களின் முன் என்னால்  முன்னெடுக்கப்பட மடத்துவெளி - ஊரதீவு கேரதீவு  வீதி மின்விளக்கு பொருத்தும் பணியை  நானும் என் நண்பர்களும்  கேட்டுக் கொண்டபடி   5  நாட்களாக   கடும் வெய்யில் காலத்திலும்  கஷடம் பாராது  பிரதேச சபை ஊழியர்களோடு  நின்று  உதவி  உபசரித்து  முழுமையாக  என்  திட் டத்தை நிறைவேற்றி தந்து வைத்த  நல்ல உள்ளம்,  85 மின்விளக்குகளை  பிரதேச சபை ஊழியர்களின்  நேர ஒழுங்கின்படி   அவர்கள்  வரும்போது ஓடிச்சென்று ஒத்துழைத்த உங்கள் சேவையை இக்கணம்  என் மனதில் நிறுத்தி பா ர்க்கிறேன்  .கடந்த வருடம் ஏப்ரலில் ஊரதீவு சனசமூக நிலையத்துக்கு  நான்  கட்டிக்  கொடுத்த  சுற்றுமதில் நுழைவாயில் திறப்பு விழாவின் போதும்  கெளரவ விருந்தினராக  வந்து என்னையம் கௌரவித்து சிறப்பித்தீர்கள் . புலம்பெயர் தேசத்தில் நாம் முன்னெடுத்து  செய்து கொண்டிருக்கும்  பாணாவிடையான் ராஜகோபுர மற்றும் ஆலய திருப்பணியில்  கூட பூசகர் என்ற நிலையில் நின்று விடாது  பல்வேறு  காலக்கட்டத்திலும் எம்மை உற்சாகப்படுத்தி  உறவுகளை ஊக்குவித்து  அடிக்கடி  அவர்களின்  ஆதரவை  வேண்டி  நீங்கள்  செய்து கொண்டிருந்த பிரசாரப்பலம்  90 வீதம்  நாம் முடித்திருக்கும்  திருப்பணிப் பாதைக்கு  உரமூட்டியது என்பதையும் நாம் மறவோம் . ஊரின் பசுவதை குற்றங்களை களைய வேண்டிய நீங்கள்  எடுத்த  துணிச்சலான  செயல்பாட் டையும்  தருணத்தில் நினைவு கூறுகின்றோம் . பானாவிடையான்  அருளோடு  உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் சாந்தி சாந்தி சாந்தி 

பிரான்சில் பாரிஸ் புறநகர் பகுதியில் சற்றுமுன் குடும்ப வன்முறை. 5 இலங்கையர்கள் பலி. மேலும் ஐவர் காயம்..

குடும்ப வன்முறை!. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் சாவு! - மேலும் ஐவர் உயிருக்கு போராட்டம்.
உறவுகளே நீதிக்காக காத்திருங்கள் .நீங்கள் நீதிபதியாக வேண்டாம் 
------------------------------------------------------------------------------------------------------------
புங்குடுதீவில் மதகுரு கொலையை அடுத்து நின்றவன் போனவன்   எல்லாம் நீதிபதியாகி  தீர்ப்பு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .ஊடகம் இணையம் சமூகத்தளம் என்று ஆளாளுக்கு  சமூகத்தில் பெரியவனாக முகவரி கொண்டவர்கள்  எல்லாம்  தமக்கிருக்கும்  பகையை வைத்துக்கொண்டு  வேண்டப்படாதவர்களை  இழுத்து வைத்து கற்பனை செய்திகளை  பதிவி டுகிறார்கள் .அதுவும் வெளிநாட்டில் இருந்து கொண்டு  நேரில் பார்த்தவர்கள் போலவே  எழுதுகிறார்கள் .. முடிந்தால்  இலங்கை நீதித்துறைக்கு  உதவி  செய்யுமுகமாக நேரில் சென்று  வாக்கு மூலம்  கொடுத்துவிட்டு வாருங்கள் .சட் டம் நீதித்துறை , காவல்துறை  இருக்கிறது அது தம் கடமையை ஒழுங்காகவே  செய்கிறது.  நீங்கள்  திசை திருப்ப வேண்டிய அவசியம் என்ன .நீதி தீர்ப்பை வழங்கும் . அங்கெ  இருக்கும் இந்த  அரச துறைகளை விட நீங்கள்  இங்கே  இருந்துகொண்டு  நீதி பேசுவதில்  நியாயம்  இருக்கிறதா . கொலை  சந்தேகத்தில்    கைதானவர்கள் கொலை செய்யபடடவர்  யாருமே  எமது ஊரை சேர்ந்தவர்கள் இல்லை .  எமது ஊரவரான நீங்கள் ஏன் எமது ஊரின் பெயரை   உலகம் அறிய  அசிங்கப்படுத்துகிறீர்கள்.  நீதி  தீர்ப்பு சொல்லும்காத்திருங்கள் இணையம் ,முகநூல் ,ஊடகத்தை பிரபலப்படுத்தவோ உங்கள் பெயரை பிரபலப்படுத்தவோ உங்கள் கற்பனை கதைகளை  கட்டி  எழுப்பாதீர்கள்  ஊரின் பெயரால் குளிர் காயாதீர்கள் 

2 அக்., 2020

தமிழரசு கட்சி பொதுச் செயலாளராக சத்தியலிங்கம் நியமனம்

Jaffna Editor
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

திலீபனை முன்னிறுத்தி சில கேள்விகள் திலீபனின் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்? யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்?

Jaffna Editor
அவர் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இரண்டு அரசுகளிடமும் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்தார். அதாவது திலீபனின் உண்ணாவிரதம் எனப்படுவது நாட்டுக்கு உட்பட்டது

கூட்டமைப்பு உறுப்பினர்கள் அறுவருக்கு இன்று (2) மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

Jaffna Editorமட்டக்களப்பு நீதிமன்றம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அறுவருக்கு இன்று (2) மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.

உண்ணாவிரதமிருந்து 1987 செப்.26இல் உயிர்

21 செப்., 2020

திலீபனின் நினைவேந்தல் விவகாரம்; நீதிமன்று விடுத்துள்ள அறிவிப்பு

Jaffna Editor

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளை வரும் 24ஆம் திகதி

கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டார் பிள்ளையான்

Jaffna Editor

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் நிவநேசதுரை சந்திரகாந்தன் நாளை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதியை

பகிரங்க விசாரணைக்கு தயார்! கஜேந்திரர்களும் விசாரிக்கப்பட வேண்டும் -மணி அதிரடி

Jaffna Editor
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்

தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல்-அஷாத் சாலி

Jaffna Editor
தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

11 செப்., 2020

பதவி விலகினார் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்

Jaffna Editor




தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அறிவித்துள்ளார்.

9 செப்., 2020

கூட்டமைப்பின் பேச்சளார் பதவி சம்பந்தனின் ஆசீர்வாதத்துடன் சாணக்கியனிற்கு வழங்கும் காய் நகர்த்தல்கள் ?

Jaffna Editor தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கூட்டமைப்பின் பேச்சளார் பதவி

8 செப்., 2020

மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தமிழ்,முஸ்லிம் அரசியல்வாதிகளை குறிவைக்கும் பஸில்

மாகாணசபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றுவதாக சபதமெடுத்து அதற்கான வியூகங்களை பஸில் ராஜபக்ஷ வகுப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

3 செப்., 2020

நாவிதன்வெளி பிரதேச சபையை இழந்தது கூட்டமைப்பு ஐ தே க கூட்டமைப்பின் காலை வாரியது

Jaffna Editor
அம்பாறை மாவட்டத்திலுள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினரான அமரதாஸ ஆனந்த தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2 செப்., 2020

20 ஆவது அரசமைப்பு திருத்தத்திற்கு அனுமதி அளித்தது அமைச்சரவை

Jaffna Editorஅரசமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தையால் உருவாக்கப்பட்டு தாயால் வலுப்படுத்தப்பட்ட ஸ்ரீ.சு.கட்சியின் நிலை கண்டு கவலையடைகின்றேன்-சந்திரிகா

Jaffna Editor
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலையை பார்த்து கவலையடைவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

30 ஆக., 2020

கோணமலை எந்தன் கோட்டை தள்ளாத வயதிலும் தனிஒருவன் என்கிறாரா சம்பந்தன் -கேவலமான விமர்சனங்களுக்கு ஆப்பு வைத்து விழித்தெழுந்தார்

Jaffna Editorசம்பந்தன்திருகோணமலையில் சர்வதேச நீதி கோரி போராட்டம்! களத்தில் சம்பந்தன்சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று

28 ஆக., 2020

சிங்கள அரசிடம் ஓய்வூதியம் பெறுபவர் தான் விக்கி! - வீரவன்ச கிண்டல்

Jaffna Editor

இனவாதம் பேசியவாறு சீ.வி விக்கினேஷ்வரன் சிங்கள அரசினூடாக தான் ஓய்வூதியம் பெறுகிறார் என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச

பிறந்தநாள் கொண்டாட பியருடன் தயாரான ஆவா வினோதன் அகப்பட்டார்

Jaffna Editor

ஆவா வினோதன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் தயாராகிய போதே இவர்கள் 6 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவா வினோதன் உட்பட 6 பேர் கைது செய்ய

ad

ad