புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2020

ரிஷாத்துக்கு எதிர்வரும் 27 வரை விளக்கமறியல்தி

colombo Editor
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சுவிட்சர்லாந்து -கடந்த வார இறுதியில்  8737    தொற்றுக்கள் . இது  சுவிஸ் கொரோனா காலத்தில் ஒருபெரிய  நம்பமுடியாத     தொகையாகும் 

விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது??

முரளி  செல்லப்பிள்ளையின் பினாமியாக முரளியால் தயாரிக்கப்படும் 800  பற்றியே  பேச்சு . ஓகோ  என்று புகழின் உச்சத்தில் இருந்த  விஜய் சேதுபதிக்கு  சனியன் முரளி வடிவத்தில் பிடித்திருக்கிறதோ என பேசப்படுகிறது  விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.     

ரிஷாட் தெகிவளையில் கைது

Jaffna Editor
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். எபினேசன் பிளேசில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாவை- விக்கி திடீர் சந்திப்பு

Jaffna Editor
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனை நல்லூரிலுள்ள வீட்டில் நேற்றிரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்
புங்குடுதீவு இன்று திங்கள் 19.10.2020 பகல்    ஒரு மணி  முதல்    முடக்கத்தில்  இருந்து  விடுவிக்கப்படுகிறது.மக்கள்  வெளியே  செல்லவும்  உள்ளே  போகவும்  அனுமதிக்கப்படும் 

18 அக்., 2020

விரைவில் புங்குடுதீவு விடுவிப்பு-யாழ்அரசாங்க அதிபர் மகேசன்

Jaffna Editor
கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, முடக்கப்பட்ட நிலையில் உள்ள புங்குடுதீவு பிரதேசம் விரைவில் விடுவிக்கப்படும் என்று, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்
கொரோனா இரண்டாம் அலையில் உலகத்தமிழர் அவலம் 
உலகெங்கும் தமிழர் செந்தளிப்பாக  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்  ஆனால்  இன்று  அந்த நாடுகள்  எங்கும் கொரோனா  இரண்டாம் அலை   ஆட்டிப்படைக்கிறது  எம் தமிழ் உறவுகள்  இந்த பேரிடரை இலகுவாக  நினைத்து  சாதாரண வாழ்வுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள் . பிரான்ஸ் பிரித்தானியா  ஜெர்மனி  கனடா அமேரிக்கா  சுவிஸ்  பெல்சியம் இத்தாலி ஆஸ்திரியா டென்மார்க் மத்திய கிழக்கு  இந்தியா எங்கும் இரண்டாம் அலை  வெகுவான பாதிப்புக்களை  உண்டாக்கி வருகிறது  எச்சரிக்கையாக  நடந்து கொள்ளுங்கள் 
தமிழ் உறவுகளே நீங்கள் வாழும் நாடுகளில் கொரோனா  விதிகளை கடைபிடியுங்கள் ,தயவு செய்து  கொண்டாட்டங்களை  தவிர்த்து கொள்ளுங்கள்  உயிரோடு  இருந்தால் எப்போதும் செய்ய  முடியும் 
புதிய நடவடிக்கைகள் குறித்து கூட்டாட்சி கவுன்சிலர்கள் - பெர்செட்: "இரண்டாவது அலை இங்கே உள்ளது - எதிர்பார்த்ததை விட முந்தையது"

சுவிட்சர்லாந்து - புதிய கொரோனா சட் ட விதி முறைகள் அமுலுக்கு வருகின்றன .மீறுவோர் 10,000 பிராங் வரை தண்டம் செலுத்த வேண்டும்

பெடரல் கவுன்சில் இதை மீண்டும் பரிந்துரைக்கிறது
இன்று, பிற்பகல் 3:23கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசு சுவிட்சர்லாந்து முழுவதும் செல்லுபடியாகும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவை நாளை, அக்டோபர் 19 திங்கள் முதல் பொருந்தும்,

கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை வெளியில் சொல்ல மாட்டேன்-சுமந்திரன்!

Jaffna Editor
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை வெளியில் சொல்ல மாட்டேன் என தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் பேச்சாளர் பதவி குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்தில் இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!


இலங்கைப் பெண்ணான வனுஷி வால்டர்ஸ் (Vanushi Walters) முதன்முறையாக நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

இணைந்து செயற்பட விருப்பம்-மாவை சேனாதிராஜா

Jaffna Editor
தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் நிறுவன ரீதியாக இணைந்து செயற்படுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நவம் அறிவுக்கூடம் கொரோனா வைத்தியசாலையாகின்றது?

Jaffna Editor தமிழீழ விடுதலைப் புலிகளின் நவம் அறிவுக் கூடம் இயக்கிய கட்டிடத்தில் கொரோனா தடுப்பு வைத்தியசாலை அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளது.

ஒரே நிரலில் நின்று இரண்டு பேருந்து தரப்புகளும் சேவையில் ஈடுபடுமாறு தெரிவிப்பு

Vavuniya Editor
வவுனியா புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது முதல் தனியார் பேருந்து மற்றும் அரச பேருந்து தரப்பினர்களிற்கிடையில் முரண்பாடான நிலமை ஏற்பட்டு வருகின்றது.

17 அக்., 2020

விலகுகிறார் சேதுபதி! வருந்துகிறாராம் முரளி!

Jaffna Editor
இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் 800 திரைப்படத்தில்,அவரது கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்

வவுனியாவில் இரட்டைக் கொலை

Jaffna Editor
வவுனியா ஓமந்தை காவலவ் துறை பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியின் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

16 அக்., 2020

Jaffna Editor
புங்குடுதீவு. இப்போதைய செய்தி
ஆதாரபூர்வமானது
............................................................................
கொரொனா தொடர்பாக புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய பங்குத்தந்தை அவர்கள் வழங்கிய தகவல் .
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் புங்குடுதீவைச் சேர்ந்த சில பெண்பிள்ளைகள் வேலை செய்து வருகின்றார்கள். அவர்களில் ஒருவர் கடந்த மாதம் ( புரட்டாசி) 30ஆம் திகதி புங்குடுதீவில் இருக்கும் தன் இல்லத்திற்கு வந்திருந்தார். மற்றும் ஒருவர் இந்த மாதம் (ஐப்பசி) 4ஆம் திகதி தன் இல்லம் வந்திருந்தார். இன்நிலையில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் மத்தியில் கொரோண தொற்று இருப்பதை அறிந்ததும் அங்கிருந்து வேலைசெய்து புங்குடுதீவிற்கு வந்திருந்த இவ் இருவருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் 30ஆம் திகதி வந்த யுவதிக்கு Negative என்றும், 4ஆம் திகதி வந்த யுவதிக்கு positive என்றும் முடிவுகள் வந்தன. எனவே positive. என்று அடையாளம் காணப்பட்ட யுவதியை வைத்திய சாலைக்கும், Negative என்று அடையாளம் காணப்பட்ட யுவதியை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இவர்களது பெற்றோர், சகோதர சகோதரிகள், அவர்களோடு உரையாடி உறவாடியவர்கள், அவர்களோடு வாகனங்களில் பயணித்தவர்கள், என இவர்களும் அவர்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் positive என்று இனங்காணப்பட்ட யுவதியின் பெற்றோர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்றைய 15/10/2020 நிலவரத்தின் படி 105 குடும்பங்களைச் சேர்ந்த 292 பேர் 59 வீடுகளில் தனிமைப்படுத்தப்படிருக்கிறார்கள். இவர்களில் 15 பேரிற்கு PCR பரிசோதனை எடுக்கப்பட்டது அதனுடைய முடிவுகளாக எடுக்கப்பட்ட அனைவரிற்கும் Negative என்றுதான் கிடைக்கப்பெற்றது. அதற்காக இறைவனிற்கு நன்றி கூறுகின்றோம்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடைய அன்றாட தேவைகளை நிறைவேற்ற பலர் தங்களை அர்ப்பணித்து சேவை செய்கிறார்கள். அந்தவகையில் எமது புங்குடுதீவு பிரதேசத்தின் PHI திரு.அபராஜ் மற்றும் J/22, J/23, J/26, J/35, J/36, ஆகிய கிராம பிரிவுகளில் பணியாற்றும் கிராம உத்தியோகத்தர்கள், மேலும் நலன்புரிசங்க உறுப்பினர்கள் இவர்களோடு இணைந்து கடற்படையினர் , பொலிசார் இவர்கள்தான் தங்களை அர்ப்பணித்து இரவு பகல் என்று பாராமல் பயம் நோக்காமல் பணிகளை செய்கின்றார்கள்.
தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கான மதிய உணவினை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்தினரும் (130 பாசல்கள்), புங்குடுதீவு சர்வோதயம் (55 பாசல்கள்) மிகுதி உணவினை ஊர் மக்களும்,புங்குடுதீவு நலன்புரி சங்கமும் இணைந்து கொடுக்கின்றனர்.
காலை மற்றும் இரவு உணவினை புங்குடுதீவு நலன்புரி சங்கத்தினர் தங்களுக்கு கிடைத்த, கிடைக்கப்பெறுகின்ற நிதிகளில் இருந்து உணவினை தயார்செய்து கொடுக்கின்றார்கள்.
மேலும் இரு நாளின் இரவு உணவினை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரும், மற்றும் ஒரு நாளின் இரவு உணவினை பொதுஜன பெரமுன கட்சியினரும் வழங்கினர் மற்றும் புங்குடுதீவு இறுபிட்டி அபிருத்தி சங்கம், இரு நாள்களுக்கன அதாவது இன்றும், நாளைக்குமான இரவு உணவினை வழங்குகின்றனர்.
குடிநீர் வசதிகளை புங்குடுதீவு சர்வோதயமும், வேலணை பிரதேச சபையும் செய்து கொடுக்கிறார்கள்.
மேலும் இக்காலத்தில் உயர்தர பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டதினால் புங்குடுதீவில் இருந்து இப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை வேலணை மத்திய கல்லூரிக்கு கூட்டிச்சென்று மீண்டும் புங்குடுதீவுக்கு கூட்டிவரும் பொறுப்பை புங்குடுதீவு நலன்புரி சங்கம் பொறுப்பாக செய்வது பாராட்டத்தக்கது. இவற்றுக்கான போக்குவரத்து செலவையும் புங்குடுதீவு நலன்புரி சங்கமே செய்து வருகிறது. மேலும் இம் மாணவர்களுக்கான சிற்றுண்டி, மதிய போசனம் இதற்கான செலவை பிரதேச செயலகம் பொறுப்பேற்ரிருக்கின்றது.
இன்நாட்களில் மக்களோடு நின்று பணியாற்றுவது என்பது முக்கியமானது அந்த வகையில் எமது புங்குடுதீவு பிரதேசத்தின் சுகாதார உத்தியோகத்தரும், புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் தலைவராகவும் இருந்து செயற்படுகின்ற திரு.அபராஜ் மற்றும் மேலே குறிப்பிட்ட கிராம பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்கள், நலன்புரி சங்கத்தின் அங்கத்தவர்கள், கடற்படையினர், பொலிசார் இவர்களை பாராட்டுவதோடு வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.
குறிப்பாக இவர்களில் சுகாதார உத்தியோத்தர் தன்னுடைய சுகாதார நிலையத்திலும் சில கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்கள் நலன்புரி சங்கத்தின் கட்டிடத்திலும் தங்கியிருந்து தங்கள் வீடுகளுக்கும் செல்லாது பணியாற்றுவது அவர்களின் அர்ப்பணிப்பை எடுத்துகாட்டுகிறது.
மேலும் உணவு வகைகள், பொதிகள், நீர், போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கின்றவர்களையும் பாராட்டி கொள்கின்றேன்.
இறை ஆசீர் உங்களுடன் என்றும் இருப்பதாக.
பங்குத்தந்தை
புனித சவேரியார் ஆலயம்
புங்குடுதீவு

ரிஷாத்தின் மனைவியிடம் விசாரணை

Jaffna Editor
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவியிடம் நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள

நாளை மீண்டும் கூடுகின்றன தமிழ்க் கட்சிகள்

Jaffna Editor
தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் யாழ்ப்பாணத்தில் நாளை காலை நடைபெறவிருக்கிறது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனாதிராஜா இதற்கான அழைப்பை விடுத்திருக்கிறார்.

ad

ad