புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2021

பலாலிக்கான விமான சேவை அடுத்த மாதம் ஆரம்பம்!

www.pungudutivuswiss.com


கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு - யாழ்ப்பாணத்துக்கு இடையிலான உள்நாட்டு விமான சேவை, நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று, சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு - யாழ்ப்பாணத்துக்கு இடையிலான உள்நாட்டு விமான சேவை, நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று, சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது

வடக்கின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப் பிரமாணம்! Top News

www.pungudutivuswiss.com


வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், புதிய ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து நியமனக் கடிதத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், புதிய ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து நியமனக் கடிதத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

காகிதங்களின் இறக்குமதிக்கும் தடை?- பத்திரிகைகள் முடங்கும் ஆபத்து.

www.pungudutivuswiss.com


பத்திரிகைகள் உள்ளிட்ட அச்சு தொழிற்துறைக்கு அவசியமான காகிதங்களை இறக்குமதி செய்வதற்கு  கடும் இறக்குமதி கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  காகித இறக்குமதியை அத்தியாவசியமற்ற பொருட்கள் பட்டியலில் சேர்த்து இவ்வாறு கடும் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் நிதி அமைச்சு கலந்துரையாடி வருவதாக நம்பகரமாக அறிய முடிகிறது.

பத்திரிகைகள் உள்ளிட்ட அச்சு தொழிற்துறைக்கு அவசியமான காகிதங்களை இறக்குமதி செய்வதற்கு கடும் இறக்குமதி கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காகித இறக்குமதியை அத்தியாவசியமற்ற பொருட்கள் பட்டியலில் சேர்த்து இவ்வாறு கடும் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் நிதி அமைச்சு கலந்துரையாடி வருவதாக நம்பகரமாக அறிய முடிகிறது.

விரைவில் புதிய அரசியலமைப்பு , புதிய தேர்தல் முறைமை! [Monday 2021-10-11 07:00]

www.pungudutivuswiss.com



நாட்டுக்குள் மீண்டும் பயங்கரவாதமோ அல்லது மதத் தீவிரவாதச் செயற்பாடுகளோ ஏற்படாத வகையில் நாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாதுகாப்பு படையினர் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டுக்குள் மீண்டும் பயங்கரவாதமோ அல்லது மதத் தீவிரவாதச் செயற்பாடுகளோ ஏற்படாத வகையில் நாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாதுகாப்பு படையினர் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

லண்டனில் உள்ள நிரூபமாவை இன்டர் போல் மூலம் அழைத்து வர நடவடிக்கை! [Monday 2021-10-11 07:00]

www.pungudutivuswiss.com



பண்டோரா ஆவண சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்சவுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும்,   லண்டன் சென்றுள்ள அவர் விசாரணைக்கு வருகை தராவிட்டால் சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பண்டோரா ஆவண சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்சவுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும், லண்டன் சென்றுள்ள அவர் விசாரணைக்கு வருகை தராவிட்டால் சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

9 அக்., 2021

அவரது சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் இருவர் தப்பித்து ஓடிய நிலையில்கேபி மீது சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு

www.pungudutivuswiss.com
கோத்தபாயவின் பாதுகாப்பிலுள்ள கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் மீது சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள்

லண்டனில் £2,000 பவுண்டுகளால் அதிகரித்துள்ள GAS BILL: மின்சார BILL : எங்கே கொண்டு போய் விடப் போகிறது என்று தெரியவில்லை ?

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் 1ம் திகதி அக்டோபர் மாதத்தோடு, வீட்டில் பாவிக்கும் கேஸ் மற்றும் மின்சாரத்தின் விலை சுமார் 20% விகிதத்தால்

இணுவில் ஆயுதமுனை கொள்ளை - மேலும் மூவர் கைது

www.pungudutivuswiss.com



இணுவில்  பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து கைக்கோடாரிகளைக் காண்பித்து அச்சுறுத்தி 21 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணுவில் பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து கைக்கோடாரிகளைக் காண்பித்து அச்சுறுத்தி 21 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

பெலாரஸ் எல்லையில் இலங்கையரின் சடலம்!

www.pungudutivuswiss.com

பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் 29 வயதான இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை நபரின் உடல் வித்துவேனியாவின் எல்லையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புதர்களுக்கு மத்தியில்  கடந்த 5 ஆம் திகதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் 29 வயதான இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை நபரின் உடல் வித்துவேனியாவின் எல்லையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புதர்களுக்கு மத்தியில் கடந்த 5 ஆம் திகதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது

அடுத்த வருட தொடக்கத்தில் தேர்தலை நடத்த இணக்கம்!

www.pungudutivuswiss.com



மாகாணசபைத் தேர்தலை  விகிதாசார முறைப்படி நடத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்  முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேர்தல் முறை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்ற அமைச்சர் பசில் ராஜபக்ச இதனைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைத் தேர்தலை விகிதாசார முறைப்படி நடத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேர்தல் முறை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்ற அமைச்சர் பசில் ராஜபக்ச இதனைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்

ஒன்றாரியோ சட்ட மன்ற தீர்மானம்- கனேடிய தூதுவரிடம் பீரிஸ் தீவிர கரிசனை!

www.pungudutivuswiss.com


ஒன்றாரியோ சட்ட மன்ற தீர்மானம் தொடர்பாக, இலங்கை தீவிர கரிசனை கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்  இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனிடம் தெரிவித்துள்ளார்.

ஒன்றாரியோ சட்ட மன்ற தீர்மானம் தொடர்பாக, இலங்கை தீவிர கரிசனை கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனிடம் தெரிவித்துள்ளார்

திருக்குமரன் நடேசன் மூலம் மகிந்தவுக்கு பணத்தை கொடுத்த சீன நிறுவனங்கள்!

www.pungudutivuswiss.com


சீன நிறுவனங்கள் திருக்குமரன் நடேசனின் கணக்குகளின் ஊடாக இலங்கையின் முக்கிய தேர்தல்களுக்கு செலவிட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சீன நிறுவனங்கள் திருக்குமரன் நடேசனின் கணக்குகளின் ஊடாக இலங்கையின் முக்கிய தேர்தல்களுக்கு செலவிட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றில் உரையாற்றிய போது ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்

7 அக்., 2021

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு -வெளியானது அறிவிப்பு

www.pungudutivuswiss.com
க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

நிருபமா எங்களுடன் இல்லை

www.pungudutivuswiss.com


எந்த சொந்தமாக இருந்தாலும் உறவுமுறை, அரசியல் இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எந்த சொந்தமாக இருந்தாலும் உறவுமுறை, அரசியல் இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பல உலக தலைவர்களின் இரகசியங்களை வெளிக்கொண்டு வந்துள்ள, பண்டோரா ஆவணங்களில் நிரூபமா ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ நிரூபமா ராஜபக்ச எனது சகோதரியாக உள்ளார். எனினும் அரசியல் ரீதியாக அவர் எம்முடன் இல்லை. அவர் கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் தலைவர் சிறிசேனவுடன் இருந்தார்.

அதனால் உறவு வேறு அரசியல் வேறு. அதே நேரத்தில் அவர் நடேசனை மணந்துள்ளார். திருமணத்தால் கிடைப்பவை தொடர்பில் நம்மால் என்ன செய்ய முடியும்?

1990 - 1998 வரை இவர்கள் பணம் சம்பாதித்து வியாபாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அரசாங்கத்தில் யார் இருந்தார்கள் என்பதை ரணசிங்க பிரேமதாச மற்றும் சந்திரிக்கா ஆகியோரிடம் கேட்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

6 அக்., 2021

9 மாவட்டங்களில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தோ்தல் அறிவிக்கப்பட்டது.

பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தமைக்கு ஒரே காரணம் இது தான்!

www.pungudutivuswiss.com

விடுதலைப் புலிகளின் தலைவர்  பிரபாகரனின் இளைய மகன் என்கிற ஒற்றைக் காரணத்தினாலேயே 12 வயதுடைய பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் என்கிற ஒற்றைக் காரணத்தினாலேயே 12 வயதுடைய பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம்சாட்டியுள்ளார்

யாழ். நகரில் அதிக மழை வீழ்ச்சி!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாண நகரப் பகுதியில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்

திட்டமிட்டு பழிவாங்கிய பிரான்ஸ்: பேராபத்தில் பிரித்தானியா

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவுக்கு வரவேண்டிய கிட்டத்தட்ட 5 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை ஃபிரான்ஸ் அரசு தடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய அரசாங்க ஆதாரங்களின்படி, ஐரோப்பிய நாடான ஹொலாந்தில் உள்ள ஹாலிக்ஸ் தளத்திலிருந்து பிரித்தானியாவுக்கு வந்து சேரவேண்டுய தடுப்பூசிகளை பிரான்ஸ் தடுத்தது.

பிரித்தானியாவுக்கு வரவேண்டிய கிட்டத்தட்ட 5 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை ஃபிரான்ஸ் அரசு தடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய அரசாங்க ஆதாரங்களின்படி, ஐரோப்பிய நாடான ஹொலாந்தில் உள்ள ஹாலிக்ஸ் தளத்திலிருந்து பிரித்தானியாவுக்கு வந்து சேரவேண்டுய தடுப்பூசிகளை பிரான்ஸ் தடுத்தது

ஒன்ராறியோவில் பலரை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய துயர சம்பவம்!

www.pungudutivuswiss.com

ஒன்ராறியோவின் லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியில் இருந்து குழந்தை ஒன்று தவறி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் லைல் தெரு மற்றும் கிங் தெரு பகுதியில் இருந்து 911 இலக்கத்தை தொடர்பு கொண்டு குழந்தை தவறி விழுந்தது தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒன்ராறியோவின் லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியில் இருந்து குழந்தை ஒன்று தவறி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் லைல் தெரு மற்றும் கிங் தெரு பகுதியில் இருந்து 911 இலக்கத்தை தொடர்பு கொண்டு குழந்தை தவறி விழுந்தது தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்

பிரித்தானியாவில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட எரிபொருள் விலை!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவில் பெட்ரோலின் தற்போதைய விலை லிட்டருக்கு 1.36 பவுண்டை எட்டியுள்ளதால், இது கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச விலை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதால், அங்கு லொறி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பெட்ரோலின் தற்போதைய விலை லிட்டருக்கு 1.36 பவுண்டை எட்டியுள்ளதால், இது கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச விலை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதால், அங்கு லொறி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

ad

ad