புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2021

கனடாவில் 39 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு

www.pungudutivuswiss.com


பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது.  புதிய அமைச்சரவை பட்டியலில் பிரதமர் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில்  பல புதிய முகங்களும் இடம்பெற்றுள்ள  புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு-

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை பட்டியலில் பிரதமர் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பல புதிய முகங்களும் இடம்பெற்றுள்ள புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு

20 உலக கோப்பை: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

www.pungudutivuswiss.com
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.

நிருபமாவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைப்பு!

www.pungudutivuswiss.com


முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ச இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். பண்டோரா ஆவண சர்ச்சையில் அவரும் அவரது கணவரான தொழிலதிபர் திருக்குமார் நடேசனும் சிக்கியுள்ளனர்.தொழிலதிபர் திருக்குமார் நடேசனிடம் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே நிருபமா ராஜபக்சவுக்கும் ஆணைக்குழு விசாரணைக்கான அழைப்பை விடுத்திருப்பதாக தெரியவருகிறது. விசாரணைத் திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ச இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். பண்டோரா ஆவண சர்ச்சையில் அவரும் அவரது கணவரான தொழிலதிபர் திருக்குமார் நடேசனும் சிக்கியுள்ளனர்.தொழிலதிபர் திருக்குமார் நடேசனிடம் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே நிருபமா ராஜபக்சவுக்கும் ஆணைக்குழு விசாரணைக்கான அழைப்பை விடுத்திருப்பதாக தெரியவருகிறது. விசாரணைத் திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை

கொடும்பாவி எரித்து சுமந்திரனுக்கு எதிர்ப்பு! Top News [Tuesday 2021-10-26 17:00]

www.pungudutivuswiss.com

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக யாழ்- குருநகர் மீனவர்கள் இன்று கறுப்பு கொடிகட்டி ஹர்த்தால் அனுஸ்டித்ததுடன் கொடும்பாவியையும்   எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக யாழ்- குருநகர் மீனவர்கள் இன்று கறுப்பு கொடிகட்டி ஹர்த்தால் அனுஸ்டித்ததுடன் கொடும்பாவியையும் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதிய அமைச்சரவையை இன்று அறிவிக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ

www.pungudutivuswiss.com


பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது புதிய அமைச்சரவையில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் தொடர்பாக இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது புதிய அமைச்சரவையில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் தொடர்பாக இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

25 அக்., 2021

"நீதிபதியின் கருத்துகள் என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியது" - விஜய் வேதனை!

www.pungudutivuswiss.com

இறக்குமதி கார் விவகாரத்தில் தனிநீதிபதியின் கருத்துகள் என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது

நாகவிகாரையின் நாட்டாண்மையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!

www.pungudutivuswiss.com



ஆரியகுளத்தின் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரையின் நாட்டாண்மையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது காட்டமான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

ஆரியகுளத்தின் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரையின் நாட்டாண்மையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது காட்டமான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்

விசேட விமானத்தில் வந்திறங்கிய அதானி! - ஜனாதிபதியை சந்திக்கிறார். [Monday 2021-10-25 18:00]

www.pungudutivuswiss.com



தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு ‘அதானி’ குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, இலங்கை வந்துள்ளார்.
இந்தியாவில் இருந்து நேற்று இரவு விசேட விமானம் மூலம் இவர், இலங்கை வந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கௌதம் அதானி, இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட அரச உயர்மட்ட தரப்பினரை சந்திக்கவுள்ளார்.

தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு ‘அதானி’ குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, இலங்கை வந்துள்ளார். இந்தியாவில் இருந்து நேற்று இரவு விசேட விமானம் மூலம் இவர், இலங்கை வந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கௌதம் அதானி, இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட அரச உயர்மட்ட தரப்பினரை சந்திக்கவுள்ளார்

நடு கடலில் தத்தளித்த 39 அகதிகள் மீட்பு

www.pungudutivuswiss.com
நடுக்கடலில் தத்தளித்த 39 அகதிகளை பிரெஞ்சு கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

டி-20 உலகக்கோப்பை: வங்காளதேசத்திற்கு எதிராக இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

www.pungudutivuswiss.com
வங்காளதேச அணிக்கு எதிரான ‘சூப்பர் 12’ ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலக கோப்பை; பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

www.pungudutivuswiss.com
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது

23 அக்., 2021

புளொட் கொலைகளையறிந்த சாட்சியம் மரணம்!

www.pungudutivuswiss.com

 


புலிகள் என கூட்டமைப்பு எம்.பிக்களை நோக்கி கூச்சல்

www.pungudutivuswiss.com


வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு துறைசார் மேற்பார்வை ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை ‘புலிகள், பயங்கரவாதிகள்” என ஆளுந்தரப்பு உறுப்பினர்களினால்  விமர்சிக்கப்பட்டதை அடுத்து,  தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி. க்கள்   கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு துறைசார் மேற்பார்வை ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை ‘புலிகள், பயங்கரவாதிகள்” என ஆளுந்தரப்பு உறுப்பினர்களினால் விமர்சிக்கப்பட்டதை அடுத்து, தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி. க்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

இலங்கை–கனடா நட்புறவு சங்கத் தலைவராக சுரேன் - பொருளாளராக சிறிதரன்!

www.pungudutivuswiss.com

இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டார்.ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – கனடா பாராளுமன்ற சங்கத்தின் மறுசீரமைப்பு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டார்.ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – கனடா பாராளுமன்ற சங்கத்தின் மறுசீரமைப்பு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்

ஜனநாயகம், மனித உரிமைகளுக்கு குரல் எழுப்ப பின்னிற்க போவதில்லை

www.pungudutivuswiss.com


ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பலமான சமூகம் என்பன தொடர்பாகத் தாம் குரல் எழுப்ப பின்னிற்க போவதில்லையென இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஜுலி ச்சுங்  தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உதவி செயலாளராக இருந்த அவர், இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பலமான சமூகம் என்பன தொடர்பாகத் தாம் குரல் எழுப்ப பின்னிற்க போவதில்லையென இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஜுலி ச்சுங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உதவி செயலாளராக இருந்த அவர், இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

22 அக்., 2021

8 அரசியல் கைதிகளையும் வடக்கு கிழக்கு சிறைகளுக்கு மாற்ற உத்தரவு!

www.pungudutivuswiss.com


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டக் கோவையின் கீழ், சட்ட மா அதிபரின் ஆலோசனையையும் பெற்றுக்கொண்டு உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டக் கோவையின் கீழ், சட்ட மா அதிபரின் ஆலோசனையையும் பெற்றுக்கொண்டு உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

20 அக்., 2021

புலனாய்வாளர்களைக் கொண்டு ஆசிரியர்களை அச்சுறுத்தும் அரசு!

www.pungudutivuswiss.com


அதிபர்கள், ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்தைப் புலனாய்வாளர்களைக் கொண்டு அரசு அச்சுறுத்துவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த மோசமான செயலை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்  என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அதிபர்கள், ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்தைப் புலனாய்வாளர்களைக் கொண்டு அரசு அச்சுறுத்துவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த மோசமான செயலை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

முதலமைச்சர் வேட்பாளராக சமிந்திராணி கிரியெல்ல?

www.pungudutivuswiss.com


மத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் சமிந்திராணி கிரியெல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் சமிந்திராணி கிரியெல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

19 அக்., 2021

16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடக்கம்

www.pungudutivuswiss.com
இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.

18 அக்., 2021

நிசாந்தனை விசாரணைக்கு அழைக்கிறது ரிஐடி!

www.pungudutivuswiss.com

தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சுவீகரன் நிசாந்தனை விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைத்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி விசாரணை ஒன்றிற்கான வாக்குமூலத்தை வழங்க கொழும்புக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக சுவீகரன் நிசாந்தன் கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சுவீகரன் நிசாந்தனை விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைத்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி விசாரணை ஒன்றிற்கான வாக்குமூலத்தை வழங்க கொழும்புக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக சுவீகரன் நிசாந்தன் கூறியுள்ளார்.

ad

ad