புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2022

தடைகளை நீக்குவதற்கு முன் புலம்பெயர் அமைப்புடன் உரையாடிய பசில்! ஆபத்தாகும் சூழல்”

www.pungudutivuswiss.com

தடைகளை நீக்குவஇலங்கைக்கான நிதிகளை உள்வாங்கும் நோக்கம், ஜெனிவா மனித உரிமை சபையை கையாளுகின்ற உத்தி மற்றும் சர்வதேச ரீதியில் தமிழ் மக்களால் முன்வைக்கப்படும் இன அழிப்பு தொடர்பான கோரிக்கைகளை உள்ளக பொறிமுறையாக மாற்றக்கூடிய ஒரு ஏற்பாடாகவே புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் காணப்படுகின்றது என மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் குத்தாட்டம் போட்டு எல்லோர் மத்தியிலும் விமர்சனத்துக்குள்ளான பின்லாந்து பிரதமர்

www.pungudutivuswiss.com

மதுபோதையில் தனது நண்பர்களுடன் பின்லாந்தின் பெண் பிரதமர் சன்னா மரீன் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியானதால், அவர் மீது கடும் விமர்சனம்

கோட்டா நாடு திரும்புவது குறித்து எதுவும் தெரியாது

www.pungudutivuswiss.com


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச  இலங்கை திரும்பவுள்ளமை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
ரணில் விக்கிரமசிங்க எனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச இலங்கை திரும்பவுள்ளமை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க எனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்

நிபந்தனைகளுடனேயே உதவிகளை வழங்க வேண்டும்

www.pungudutivuswiss.com

ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி நேர்மை மற்றும் மனித உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதற்காக சர்வதேச சமூகம் இலங்கைக்கான உதவிகளை நிபந்தனைகளுடன் வழங்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி நேர்மை மற்றும் மனித உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதற்காக சர்வதேச சமூகம் இலங்கைக்கான உதவிகளை நிபந்தனைகளுடன் வழங்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்

WelcomeWelcome ஜனாதிபதி ரணிலுடன் ஐ.நா பிரதிநிதிகள் சந்திப்பு!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை  ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள்  நேற்று பிற்பகல் சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் சந்தித்துள்ளனர்

யாழ்ப்பாணத்தில் ஐ.நா உயர் அதிகாரி!

www.pungudutivuswiss.com

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் இன்று வெள்ளிக்கிழமை  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்

பொதுமன்னிப்புக்கு இலஞ்சம்? - சிஐடி விசாரணை ஆரம்பம்.

www.pungudutivuswiss.com
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த, ரோயல் பார்க் படுகொலை குற்றவாளி, ஜூட் ஷிரமந்த அன்டனி  ஜயமஹவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய, ஜனாதிபதி பொதுமன்னிப்பின் போது, இலஞ்சமாக பணம் பறிமாற்றப்பட்டதா என சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த, ரோயல் பார்க் படுகொலை குற்றவாளி, ஜூட் ஷிரமந்த அன்டனி ஜயமஹவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய, ஜனாதிபதி பொதுமன்னிப்பின் போது, இலஞ்சமாக பணம் பறிமாற்றப்பட்டதா என சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

கோடிக் கணக்கில் நஷ்டஈடு! - மைத்திரி விசனம். [Friday 2022-08-19 06:00]

www.pungudutivuswiss.com

நல்லாட்சி காலத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டு, சில தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு கோடிக் கணக்கில் நஷ்ட ஈடு செலுத்துவதற்கு அரசாங்கம் தயாராகிக் கொண்டிருக்கின்றமையை சுதந்திர கட்சி கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது.

நல்லாட்சி காலத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டு, சில தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு கோடிக் கணக்கில் நஷ்ட ஈடு செலுத்துவதற்கு அரசாங்கம் தயாராகிக் கொண்டிருக்கின்றமையை சுதந்திர கட்சி கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது

பெப்ரவரிக்குள் உள்ளூராட்சித் தேர்தல்!

www.pungudutivuswiss.com


உள்ளுராட்சிமன்ற தேர்தல் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில் அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில் அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்

17 ஆக., 2022

மொட்டு- யானை இடையே பனிப்போர்!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில், பனிப்போர் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிக்கும் விடயத்திலேயே இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில், பனிப்போர் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிக்கும் விடயத்திலேயே இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது

புதனன்று நாடு திரும்புகிறார் கோட்டா!

www.pungudutivuswiss.com


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, எதிர்வரும் புதன்கிழமை நாட்டுக்குத் திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, எதிர்வரும் புதன்கிழமை நாட்டுக்குத் திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்

11 ந்தேதி பொதுக்குழு செல்லாது;ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும்- சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

www.pungudutivuswiss.com 
11 ந்தேதி பொதுக்குழு செல்லாது ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது சென்னை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக

16 ஆக., 2022

புங்குடுதீவில் நாயை வெட்டிக் கொன்றவர் சரண்!

www.pungudutivuswiss.com


புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்றைய தினம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்றைய தினம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்

சீனக் கப்பலை வரவேற்கச் சென்ற எம்.பிக்கள்! - சாடுகிறார் சரித்த ஹேரத்.

www.pungudutivuswiss.com


யுவான் வாங் 5 அம்பாந்தோட்டைக்கு வந்து சேர்ந்ததை குறிக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டதை நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் கடுமையாக சாடியுள்ளார்.

யுவான் வாங் 5 அம்பாந்தோட்டைக்கு வந்து சேர்ந்ததை குறிக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டதை நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் கடுமையாக சாடியுள்ளார்.

சீனக் கப்பல் அம்பாந்தோட்டை வந்தது! Top News [Tuesday 2022-08-16 17:00]

www.pungudutivuswiss.com

 சர்ச்சையை ஏற்படுத்திய சீனாவின் யுவான் வோங் – 5 கண்காணிப்பு கப்பல் இன்று  காலை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்திய சீனாவின் யுவான் வோங் – 5 கண்காணிப்பு கப்பல் இன்று காலை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்

தடை நீக்கத்துக்கு கூட்டமைப்பு வரவேற்பு!

www.pungudutivuswiss.com


புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீதும் மற்றும் தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசு நீக்கியமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்புத் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீதும் மற்றும் தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசு நீக்கியமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்புத் தெரிவித்துள்ளது

அமெரிக்காவின் நடவடிக்கையால் கடும் கோபத்திற்கு ஆளான சீனா

www.pungudutivuswiss.com

அமெரிக்காவின் சட்டமியற்றுபவர்கள் குழு தீவு நாடான தைவானுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டதை அடுத்து சீனா தனது போர் பயிற்சியை தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் தொடங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, அமெரிக்காவின் சென்ட்டர் எட் மார்கி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் தைவான் தலைநகர் தைபேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி சாய் இங்-வெனைச் சந்தித்தனர்.

அமெரிக்காவின் சட்டமியற்றுபவர்கள் குழு தீவு நாடான தைவானுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டதை அடுத்து சீனா தனது போர் பயிற்சியை தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் தொடங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, அமெரிக்காவின் சென்ட்டர் எட் மார்கி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் தைவான் தலைநகர் தைபேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி சாய் இங்-வெனைச் சந்தித்தனர்

15 ஆக., 2022

டோர்னியர் -228' விமானத்தை இலங்கையிடம் வழங்கியது இந்தியா

www.pungudutivuswiss.com

இலங்கை கடற்படைக்கு இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட டோர்னியர் -228 என்ற கடல்சார் கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சென்றடைந்தது. இந்தியாவின் சுதந்திர தினமான இன்று அந்த விமானம், இலங்கையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ள இந்திய கடற்படையின் துணைத்தலைவர் வைஸ் அட்மிரல் எஸ்.என்.கோர்மேட், கொழும்பில் உள்ள இந்திய தூதர் கோபால் பாக்லேயுடன் இணைந்து, கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார்.

இலங்கை கடற்படைக்கு இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட டோர்னியர் -228 என்ற கடல்சார் கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சென்றடைந்தது. இந்தியாவின் சுதந்திர தினமான இன்று அந்த விமானம், இலங்கையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ள இந்திய கடற்படையின் துணைத்தலைவர் வைஸ் அட்மிரல் எஸ்.என்.கோர்மேட், கொழும்பில் உள்ள இந்திய தூதர் கோபால் பாக்லேயுடன் இணைந்து, கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார்

ரஷ்யாவின் கொடூர திட்டம்: நூற்றுக்கணக்கானோர் தப்பியோட்டம்!

www.pungudutivuswiss.com

உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கானோர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை நகர மேயர் டிமிட்ரோ ஓர்லோவ் உறுதி செய்துள்ளதுடன், ரஷ்யர்கள் கொடூர திட்டத்துடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்ளூர் மக்கள் வெளியிட்ட தகவலில், ரஷ்ய தரப்பு மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கானோர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை நகர மேயர் டிமிட்ரோ ஓர்லோவ் உறுதி செய்துள்ளதுடன், ரஷ்யர்கள் கொடூர திட்டத்துடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்ளூர் மக்கள் வெளியிட்ட தகவலில், ரஷ்ய தரப்பு மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்

ad

ad