புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2022

கோட்டாவை சிறையில் அடையுங்கள்!

www.pungudutivuswiss.com


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்

ஜனவரி 25க்குப் பின் ராஜபக்ஷக்களை விரட்டியடிக்க வாய்ப்பு

www.pungudutivuswiss.com


ஜனவரி 25ஆம் திகதிக்குப் பின்னர், ராஜபக்ஷக்களை விரட்டியடிப்பதற்கான வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கும் என புதிய சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்தார்.
அதுவரையில் அவசரப்படாமல் மெதுவாகச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஜனவரி 25ஆம் திகதிக்குப் பின்னர், ராஜபக்ஷக்களை விரட்டியடிப்பதற்கான வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கும் என புதிய சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்தார். அதுவரையில் அவசரப்படாமல் மெதுவாகச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

போர்க்குற்ற ஆதாரங்களைச் சேகரிக்கும் சர்வதேச முயற்சிகளுக்கு எதிர்ப்பு

www.pungudutivuswiss.com


ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இரண்டு வாரங்களில் சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அதன்மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இரண்டு வாரங்களில் சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அதன்மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என்றும் தெரிவித்தார்

3 செப்., 2022

www.pungudutivuswiss.comRESULT
ஆசிய கிண்ண இன்று சூப்பர் போர் போட்டியில் அபாரமாக    ஸ்ரீலங்கா ஆப்கானிஸ்தானை 4 விக்கட்டுக்களினால்  வீழ்த்தி ற்றுள்ளது .நிதானமாக  நம்பிக்கையோடு எல்லா வீரர்களும்  துடுப்பாடி நாட்டுக்கு இந்த பெருமையை  சேர்த்தனர்  

2 செப்., 2022

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ள கோட்டாபய

www.pungudutivuswiss.com
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இன்று இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் முழுவிவரம்

www.pungudutivuswiss.com 
 அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி தீர்ப்பு ரத்து ; சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு முழுவிவரம். வருமாறு சென்னை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு

புலிகளுடன் தொடர்புடைய இலங்கையர்களின் சொத்து முடக்கம்

www.pungudutivuswiss.com
பணமோசடி வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கை பிரஜைகளின் 337 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக இந்திய அமலாக்கத்துறை முடக்கியதாக நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பசில் வெளிநாடு செல்ல 4 மாதங்களுக்கு அனுமதி!

www.pungudutivuswiss.com
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியும் என உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

புதிய பிரேரணை - வரவேற்கிறார் சம்பந்தன்!

www.pungudutivuswiss.com


ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கை தனி இராச்சியமாக்க அமெரிக்க தூதுவர் சதி!

www.pungudutivuswiss.com


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனி இராச்சியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் நோக்கம் என கடுமையாக குற்றஞ்சாட்டிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, அமெரிக்க தூதுவர் மீதான தமது கடுமையான கண்டனத்தை பாராளுமன்றில் தெரிவிப்பதாகவும் சபையில் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனி இராச்சியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் நோக்கம் என கடுமையாக குற்றஞ்சாட்டிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, அமெரிக்க தூதுவர் மீதான தமது கடுமையான கண்டனத்தை பாராளுமன்றில் தெரிவிப்பதாகவும் சபையில் தெரிவித்தார்.

மெண்டிஸ், ஷானக, அசிதவின் அற்புதங்களுடன் திரில் வெற்றிபெற்ற இலங்கை

www.pungudutivuswiss.com
ஆசியக்கிண்ணத் தொடரில் இன்று (01) நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்று, சுபர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

வங்கதேசத்தை வீட்டுக்கு அனுப்பிய இலங்கை -ஆசியக் கிண்ணத்தில் super 4 ல் இலங்கை…!

www.pungudutivuswiss.com

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்க்கமான ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த வருட ஆசிய கிண்ணத்தின் சுப்பர் 4 சுற்றில் தனது இடத்தை உறுதிப்படுத்தியது.

மேலும் ஆசியகிண்ண டி20 போட்டியில் இலங்கை சேஷிங்கில் பெற்ற அதிகபட்ச ஸ்கோரும் சாதனையாக இருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தார்.

அதன்படி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ண

31 ஆக., 2022

www.pungudutivuswiss.com

சீன ட்ரோன்களை எச்சரிக்க தைவான் துப்பாக்கி சூடு - அரிதான எதிர்வினை

  • பிரான்சஸ் மாவோ
  • பிபிசி நியூஸ்
தைவான் தீவுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கின்மென் என்பது சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீவுக்கூட்டங்களில் ஒரு பகுதி.

சீனாவுக்கு அருகில் உள்ள தமது தீவுகளுக்கு மேலே பறந்து சென்ற சீன ட்ரோன்களை எச்சரிக்கும் விதமாக தைவான் முதல் முறையாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

இந்த நடவடிக்கைக்குப் பிறகு மூன்று ட்ரோன்களும் மீண்டும் சீன நிலப்பகுதியை நோக்கி திரும்பிப் பறந்ததை பார்க்க முடிந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய வாரங்களாகவே சீன ட்ரோன்கள் சீன நிலப்பகுதிக்கு அருகே உள்ள தமது தீவுக் கூட்டங்களுக்கு மேலே பறந்து வருவதாக தைவான் புகார் கூறி வந்தது.

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க அரசியல் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது முதல் சீன, தைவான் நீரிணை பகுதிகளில் பதற்றம் அதிகமாக உள்ளது.

பெலோசியின் வருகைக்குப் பிறகு, தைவானை ஒட்டிய கடல் பகுதிகளில் தமது படை பலத்தை பெருக்கிய சீனா மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சியிலும் ஈடுபட்டது. இதன் பின்பாக தைவான் கடல் பகுதியில் சீனா ட்ரோன்களை பறக்க விடுவதாக தைவான் கூறியது.

தைவான் தலைவர் சாய் யிங்-வென், "சில ட்ரோன்கள் ராணுவ புறக்காவல் சாவடிகளுக்கு மேல் பறந்தது - ஒரு வகை போர் நடவடிக்கை என்று அழைத்தார்.

சீன நகரமான ஜியாமெனில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூன்று கின்மென் தீவுகளான தாடன், எர்டான், ஷியு ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை மூன்று சிவிலியன் ட்ரோன்கள் காணப்பட்டதாக கின்மென் பாதுகாப்பு கட்டளை மையம் கூறியது.

இதையடுத்து ஆளில்லா விமானத்தை நேரடியாகச் சுடுவதற்கு முன், எச்சரிக்கும் விதமாக தீப்பொறிகளை பறக்கும் குண்டுகளை வானை நோக்கிச் சுட்டதாக தைவான் கூறியது. இதன் பிறகு அந்த ட்ரோன்கள் ஜியாமென்னை நோக்கித் திரும்பின

சோனியா காந்தியின் தாயார் காலமானார்

www.pungudutivuswiss.com
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். புதுடெல்லி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின்

கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மாணவர்கள் (

www.pungudutivuswiss.com 

இந்தநிலையில், உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் அகில இலங்கையில் முதல் இடம்பெற்ற மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் த.துவாரகேஸ்சையும், பாடசாலையில் உயர்தரத்தில் சாதனை

பெரமுனவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியில் அமர்ந்தனர்

www.pungudutivuswiss.com

29 ஆக., 2022

தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! - தமிழ் தெரு விழாவில் சாணக்கியன்.

www.pungudutivuswiss.com


இலங்கையினை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையினை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்

ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியில் இலங்கைக்கு 102 ஆவது இடம்!

www.pungudutivuswiss.com


ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) நிறுவனத்தின் மிக சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியின் (2021ஆம் வருடத்தின்) அடிப்படையில் இலங்கையானது 102ஆவது இடத்தில் காணப்படுகிறது.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) நிறுவனத்தின் மிக சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியின் (2021ஆம் வருடத்தின்) அடிப்படையில் இலங்கையானது 102ஆவது இடத்தில் காணப்படுகிறது.

அடுத்த மாதம் பலாலிக்கு சேவையைத் தொடங்குகிறது எயர் இந்தியா!

www.pungudutivuswiss.com


பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, வியாழன் அன்று நடைபெற்ற கூட்டத்தில், எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு இரண்டு முறை பலாலிக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, வியாழன் அன்று நடைபெற்ற கூட்டத்தில், எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு இரண்டு முறை பலாலிக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்

ad

ad