பக்கங்கள்

பக்கங்கள்

5 ஆக., 2012

புனர்வாழ்வு பெற்று இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களில் 1250 பேருக்கு அரசால் வாழ்வாதார கடனுதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
அலரி மாளிகையில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட சம்பிரதாயபூர்வ வைபவத்தில் வைத்து கடனுதவிகளை இப்பயனாளிகளுக்கு வழங்கினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ.
இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு புனர்வாழ்வு நிலையங்களில் வைத்து ஒரு வருட காலம் வாழ்வதார தொழில் துறை பயிற்சிகள் வழங்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் சிறுகைத்தொழில்கள், விவசாய உற்பத்திகள், வாழ்வாதாரத்துக்கு பயன்பட கூடிய ஏனைய சுய தொழில்கள் போன்றவற்றில் ஈடுபடுகின்றமைக்காக இக்கடனுதவிகள் வழங்கப்பட்டன. அதிக பட்ச கடன் தொகையாக ரூபாய் 250,000 ஐ பெற முடிந்தது.
இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி ஆகியன இத்திட்டத்தின் அமுலாக்கத்துக்கு பேருதவி செய்கின்றன. இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கின்றமைக்காக மொத்தம் 300 மில்லியன் ரூபாய் இவ்வங்கிகளுக்கு ஒதுக்கிக் கொடுக்கப்பட உள்ளது.