பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2012


இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற யாழ் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் விபத்தில்!- 13 பேர் படுகாயம்
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த 13 பேர் விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜோன் (வயது 28), மட்டகளப்பு பகுதியை சேர்ந்த குமுதா(45), நேசலட்சுமி (43) மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ், லண்டன் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இவர்களின் உறவினர்கள் ஆண்டனி இருதயராஜ் (32), அஞ்சலின்(22), அகிலன் (20), அருள்தாஸ் (32), அரசன் (3) உட்பட 17 பேர் தமிழகத்தை சுற்றிப்பார்க்க கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளனர்.
இவர்கள் சென்னையில் சுற்றுலா வான் ஒன்றை வாடகைக்கு எடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்தனர். வானை சென்னையை சேர்ந்த லாசர் (25) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
நேற்று இறுதியாக கொடைக்கானலை சுற்றிப்பார்த்து விட்டு சென்னைக்கு திரும்பி கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் அந்த வான் உளுந்தூர்பேட்டை அருகே ஷேக்உசேன் பேட்டை என்ற இடத்தில் வந்த போது வான் டிரைவர் தூங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வான் நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்து போது, வான் டிரைவர் மற்றும் சுற்றுலா பயணிகள் 13 பேர் உள்பட 18 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் எடைக்கல் பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயசீலி, மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த அனைவரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.