பக்கங்கள்

பக்கங்கள்

25 ஆக., 2012

கணவருக்கு மாணவியை பரிமாறிய ஆசிரியை கைது
 
கணவருக்கு 17 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பரிமாறிய ஆசிரியர் ஒருவர் பற்றி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வீட்டில் தங்கியிருந்த 17 வயது பாடசாலை மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்த தமது கணவருக்கு குறித்த ஆசிரியை உதவி செய்துள்ளார்.
குறித்த ஆசிரியையும், அவரது கணவரையும் எதிர்வரும் 3ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ பிரதான நீதவான் நிரோஸா பெர்னாண்டோ உத்தரவிட்டுள்ளார்.
இரத்மலானைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.பி. நிலந்த ரத்நாயக்க மற்றும் எம்.எம்.ஜீ. ஜீவனி பிரியதர்சிக்கா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கிராந்துருகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.