பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2012


பிரபாகரனின் போர் மையத்தை கேபியும் 22 புலம்பெயர் தமிழர்களும் பார்வையிட்டனர்!
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் போர் மையமான புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு, கே.பி. என்ற குமரன் பத்மநாதனும் அவருடைய புலம்பெயர் நண்பர்களான 22 பேரும் சென்று பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப்புலிகளின் பிரதான ஆயுத விநியோகஸ்தராக கேபி இருந்த போதிலும்,  புதுக்குடியிருப்பில் உள்ள பிரபாகரனின் இந்த போர் மையத்திற்கு இப்போதே முதல் தடவையாக சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த இடத்தை பார்வையிடுவதற்காக கே.பியுடன் பாதுகாப்புச் செயலாளரை சந்திப்பை மேற்கொண்ட 22 புலம்பெயர் தமிழர்களும் சென்றிருந்தனர்.
இந்த பயணத்தை பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.