பக்கங்கள்

பக்கங்கள்

7 ஆக., 2012


தமிழ்நாடு அகதிமுகாமிலிருந்து 46 பேர் நாடு திரும்பினர்
இலங்கையில் இடம்பெற்ற யுத்த சூழலின் காரணமாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாகச் சென்று திருச்சியில் தங்கியிருந்த அகதிகளில் 46 பேர் இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், இவர்கள் அனைவரும் தங்களது ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.
15 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள், திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.