பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2012


செங்கல்பட்டு அகதி முகாம் முற்றுகைப் போராட்டம்: திருமாவளவன் உட்பட 500 பேர் கைது
பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமையும், செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமையும் மூடக்கோரி திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட இன்று காலை குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 500 இற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
அவர்கள் அகதிகள் சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாவட்ட செயலாளர் பாலசிங்கம், விடுதலை செழியன், செய்தி தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கரையான்சாவடியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமை முற்றுகையிட சென்றனர்.
குமணன்சாவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். திருமாவளவன் மற்றும் 500 பேரையும் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.