பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2012

ஒலிம்பிக்கில் இன்று (சனிக்கிழமை) இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் ஆட்டங்கள் (இந்திய நேரப்படி) விவரம் வருமாறு:-

பேட்மிண்டன்:
பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டம், சாய்னா (இந்தியா)-வாங் ஜின் (சீனா), நேரம்: மாலை 6.30 மணி.

குத்துச்சண்டை: ஆண்கள் லைட் பிளே வெயிட் பிரிவில் (49 கிலோ) கால் இறுதிக்கு முந்தைய சுற்று, தேவேந்திரோசிங் (இந்தியா)-செர்தம்பா புரேவ்டோர் (மங்கோலியா), மாலை 6.45 மணி,
ஆண்கள் லைட் வெல்டர் பிரிவில் (64 கிலோ) கால் இறுதிக்கு முந்தைய சுற்று, மனோஜ்குமார் (இந்தியா)-தாமஸ் ஸ்டால்கர் (இங்கிலாந்து), நள்ளிரவு 2 மணி.

துப்பாக்கி சுடுதல்:
பெண்கள் டிராப் பந்தயம், ஷாகன் சவுத்ரி, தகுதி சுற்று பகல் 1.30 மணி, இறுதிப்போட்டி இரவு 7.30 மணி.

தடகளம்:
பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் தகுதி சுற்று, சுதாசிங், மாலை 4.05 மணி, ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடைபந்தயம் இறுதிப்போட்டி, குர்மீத்சிங், பல்ஜிந்தர்சிங், இர்பான் கோலோத்தும் தோடி, இரவு 9.30 மணி.