பக்கங்கள்

பக்கங்கள்

8 ஆக., 2012


மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப குழு அமைக்கும் கலந்துரையாடல் நாளை யாழில் ஆரம்பம்
நாளை காலை 9 மணிக்கு யாழ். கிறீன்கிறாஸ் விடுதியில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் ஏற்பாட்டில் பிராந்திய சிவில் உப குழுவை அமைப்பது தொடர்பான சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் பிராந்திய உப குழ ஒன்று அமைப்பது தொடர்பாகவும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த அழைக்கப்பட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.