பக்கங்கள்

பக்கங்கள்

26 ஆக., 2012

டெசே தீர்மானங்களை தி.மு.க. ஐ.நா.வுக்கு எடுத்துச்சென்றால் மத்திய அரசு ஆதரவளிக்கும்! மத்திய அமைச்சர் நாராயணசாமி
 
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா சபைக்கு ௭டுத்து செல்வோம் ௭ன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதற்கு, மத்திய அரசும் உறுதுணையாக இருக்கும். இதை நாங்கள் பிரதமரிடமும் காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துவோம். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி.
நேற்றுக் காலை அவர் டில்லியில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியிலேயே இதனைத் தெரி வித்துள்ளார்.
தமிழக மீனவர்கள், இலங்கை இராணுவத்தால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது கவலையளிக்கிறது. இது சம்பந்தமாக இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தால் இலங்கை அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு, இரு நாட்டு மீனவர் சங்கங்களும் இந்தியாவிலோ இலங்கையிலோ ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும். தங்களுக்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு தங்களது கடல் ௭ல்லைகளையும் வரையறுத்து கொள்ள வேண்டும். இப்படி செய்தால்தான் நிரந்தர தீர்வு ஏற்படும் ௭னவும் அவர் தெரிவித்துள்ளார்