பக்கங்கள்

பக்கங்கள்

20 ஆக., 2012


முதல்வர் பிள்ளையானின் நாட்கள் எண்ணப்படுகின்றன: கருணா எச்சரிக்கை
கிழக்கு மாகாணத்தில் தனது சகோதரியை முதல்வராக்குவதற்கு கடும் பிரசாரத்தில் இறங்கியுள்ள பிரதியமைச்சர் முரளிதரனுக்கும், தற்போதைய முதல்வர் சந்திரகாந்தனுக்குமிடையே அரசியல் போட்டி அதிகரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கில் தற்போதைய முதல்வர் பிள்ளையானின் நாட்கள் எண்ணப்படுகின்றன. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ருத்ரமலர் பாஸ்கரன் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றால் அவர்தான் அடுத்த முதல்வர் என பிரதி அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய முதல்வர் இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் அல்ல. ருத்ரமலர் மட்டுமே ஒரு பெண் வேட்பாளராக உள்ளார். சகோதரியை அடுத்த முதல்வராக்குவதற்கு கடுமையான பிரசாரங்களைச் செய்யவேண்டும்.
சுதந்திர முன்னணியின் ஆதரவுடன் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வாக்குகள் இந்த நேரத்தில் மிகவும் அவசியமாக உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இதுவரை ஐந்து நிகழ்வுகளில் தேர்தல் வன்முறை தெரிவிக்கப்பட்டுள்ளன. எனினும், எல்லாம் நல்லபடியாக நடக்கின்றன என தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.