பக்கங்கள்

பக்கங்கள்

9 ஆக., 2012


கோச்சடையான் – விஸ்வரூபம் ரீலீஸ் குறித்து ரஜினி – கமல் ஒப்பந்தம்

இந்த ஆண்டின் மெகா படங்களான கோச்சடையான் மற்றும் விஸ்வரூபம் ஆகியவற்றின் ரிலீஸ் குறித்து ரஜினியும் கமலும் ரகசிய ஒப்பந்தம் போட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரஜினியும் கமலும் சந்தித்ததாகவும், அப்போது கோச்சடையான் – விஸ்வரூபம் படங்களை ஒரே நேரத்தில் வெளியிடக் கூடாது என ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் சில பத்திரிகை மற்றும் இணைய தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
இதுகுறித்து கமல் தரப்பில் விசாரித்த போது, அவரது மீடியா தொடர்பாளர் இதனை உறுதியாக மறுத்தார்.
“ரஜினி சாரும் கமல் சாரும் சந்திக்க ஆயிரம் விஷயங்கள் உள்ளன. அது வேறு. ஆனால் தங்கள் படங்களின் வெளியீடு குறித்து ரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள் என்பதில் இம்மியளவும் உண்மையில்லை.
காரணம், கோச்சடையான ரஜினி சாரின் பிறந்த நாளான 12.12.12-ல் வெளியிட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். விஸ்வரூபமோ செப்டம்பர் அல்லது அக்டோபர் ஆரம்பத்தில் வெளியாகிவிடும். இதுதான் உண்மை. இதில் ரீலீஸ் தேதி குறித்து அவர்கள் ஏன் ஒப்பந்தம் போடப் போகிறார்கள்”, என்றார்.