பக்கங்கள்

பக்கங்கள்

26 ஆக., 2012

பிரித்தானியாவை ஏனைய நாடுகளும் பின்பற்றலாம் என்று இலங்கை அச்சம்
 
இலங்கைக்கு செல்லும் தமது சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானியா வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை ஏனைய நாடுகளும் பின்பற்றலாம் என்று இலங்கை அரசாங்கம் நேற்று அச்சம் வெளியிட்டுள்ளது.
இது நாட்டுக்கு பாதிப்பை தரும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் விரைவில் நாட்டின் உண்மையான நிலவரம் குறித்து இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது பாதுகாப்பான சூழல் காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் எந்த இடங்களுக்கும் செல்லலாம் என்று கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான சுற்றுலா அறிவுறுத்தலை பிரித்தானிய கடந்த 14 ஆம் திகதி வெளியிட்டது. இதன் பின்னர் அதனை அந்த நாடு கடந்த 23 ஆம் திகதி திருத்தி வெளியிட்டது