பக்கங்கள்

பக்கங்கள்

23 ஆக., 2012


இலங்கையைத் தட்டிக் கழிக்கும் ஐ.நா!
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த ஐந்தாவது பாதீட்டுக் குழுவிற்கான நியமனம் ஜெர்மனிக்கு இப்போது வழங்கப்பட்டுள்ளதாக இன்னர் சிட்டி பிரஸ் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதம் இந்த குழுவில் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன நியமிக்கப்படவிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும், தற்போது இந்த குழுவின் நியமனம் ஜெர்மனி நாட்டின் ஒரு பிரதிநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது சபை குழுக்களால் முதலாவது பாதீட்டு குழு இந்த முறை ஆசிய நாடொன்றுக்கு ஒதுக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்த குழுவும் இலங்கைக்கு வழங்கப்படாது, இந்தோனேசியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குழுக்களின் நியமன மாற்றங்கள் தொடர்பில் எந்தவித காரணங்களும் இதுவரை வெளியாகவில்லை.