பக்கங்கள்

பக்கங்கள்

15 ஆக., 2012

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கை சந்திக்க தயார் என்றும், வழக்கில் பல உண்மைகள் வெளியே வரும் என்றும், திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார். 
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தில் எந்தவொரு முதலமைச்சராவது பதவியில் இருக்கும்போதே, இரண்டுமாத காலத்திற்கு ஓய்வு என்று ஏதோ ஒரு ஊரில் தங்கியது உண்டா
என்ற கேள்விக்கு தாம் அளித்த பதிலை குறிப்பிட்டுள்ளார். இதே கேள்வியைத்தான் பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டிருப்பதாகவும், அந்த அளவிற்கு அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும் அதைப் பற்றிய கவலை அவருக்கு வாக்களித்தவர்களுக்கு அல்லவா ஏற்பட வேண்டும் என்றும் தாம் பதிலளித்ததை கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தப் பதிலில் முதலமைச்சர் ஜெயலலிதாவை களங்கப்படுத்துவது போல ஏதாவது உள்ளதா என்பதைத் தமிழ்நாட்டு மக்கள், நடுநிலையாளர்கள்தான் கூறவேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை உண்டு, எழுத்துரிமை உண்டு. ஆனால் என் மீது வழ:ககு, மு.க.ஸ்டா-ன் மீது வழக்கு, டாக்டர் ராமதாஸ் மீது வழக்கு, பத்திரிகைகள் மீதெல்லாம் வழக்கு என எத்தனை வழக்குகள்? என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?
திமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த என்னைப் பற்றியும், திருமதி சோனியா காந்தி, வாஜ்பாய், அத்வானி, நரசிம்மராஜ் ஆகியோரை தரக்குறைவாக ஜெயலலிதா பேசினார். மூப்பனார், சென்னரெட்டி, ஜானகி எம்.ஜி.ஆர் ஆகியோர் மீது பழி சுமத்தினார். 

இப்படியெல்லாம் பேசிய அகில உலகப் புகழ் பெற்றவர்தான், தாம் எழுதியதால் களங்கம் ஏற்பட்டு விட்டதாக வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை சந்திக்க தயார். வழக்கு வரட்டும் அப்போது இந்த உலகத்திற்கு சொல்லப்பட வேண்டிய பல செய்திகள் வெளியே வரும். முதலமைச்சரே சென்று மாதக்கணக்கில் தங்கும் கொடநாடு எஸ்டேட் யாருடையது. அது எப்படி வாங்கப்பட்டது. என்ன விலை. முதலமைச்சர் தங்கும்போது அதிகாரிகள் செல்வதற்கான செலவு யாருடைய பணம். இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைக்காண்பதற்காக, வழக்கை எதிர்நோக்க தயார்.