பக்கங்கள்

பக்கங்கள்

15 ஆக., 2012

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞர் ராஜினாமா
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.



இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடி வந்த வழக்குறைஞர் ஆச்சார்யா. இவர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். மன உளைச்சல் காரணமாக தான் பணியை ராஜினாமா செய்வதாக கர்நாடக மாநில உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் ஆச்சார்யா குறிப்பிட்டுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளது, அரசியல் மற்றும் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.