பக்கங்கள்

பக்கங்கள்

8 ஆக., 2012

சென்னையில் திமுக சார்பில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி தமிழகத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி சென்னையில் டெசோ மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அவ் அமைப்பினரால் நிறைவுறுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அம் மாநாட்டை

எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெசோ மாநாட்டால் சட்ட ஒழுங்கு சீர்குலையும் வாய்ப்பு உள்ளதாகவும், எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் தனது  மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மாநாடு நடத்துபவர்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் மனுவில் பாலசுப்ரமணியன் குறிப்பிட்டுள்ளார்.