பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2012


கலைஞர் கருணாநிதியால் நடத்தப்படும் டெசோ மாநாட்டுக்கு செல்வது இல்லையென த.தே.கூட்டமைப்பு தீர்மானம்
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகம் நடாத்தும் டெசோ மாநாட்டில் கலந்து கொள்வது இல்லையென த.தே.கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
இன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தலைமையில் நடைபெற்ற த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு இணைந்த அலகில் சுயநிர்ணய உரிமை நோக்கிய முன்னெடுப்புக்களை த.தே.கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் நிலையில் மற்றும் 2009ல் முள்ளிவாய்க்கால் போரில் தமிழர்கள் வகை தொகையின்றி கொல்லப்பட்ட சூழலில் தி.மு.க அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் போன்றவற்றையும் கவனத்திற் கொண்டு த.தே.கூட்டமைப்பால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
தமிழர்களின் கொலைகளின் பின்னணியில் இலங்கை அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிய காங்கிரஸ் கூட்டணியில்தான் தி.மு.க இப்போதும் இருந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.