பக்கங்கள்

பக்கங்கள்

18 ஆக., 2012


யாழ். கிட்டு சிறுவர் பூங்காவை அழித்து நல்லூரில் பாடகர் உன்னிக் கிருஸ்ணனுக்கு மேடை அமைப்பு
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கிட்டு சிறுவர் பூங்காவினை அழித்து நல்லூரில் தென்னிந்தியப் பாடகர் உன்னிக் கிருஸ்ணனின் இசைக் கச்சேரி இடம்பெறுவதற்கான மேடை அமைக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மீறப்பட்ட மனித உரிமைகள் பற்றி தென்னிந்தியாவில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் இடம்பெற்று இவ் வேளையில், ஈழத்தமிழர்களின் மனதை கலங்கப்படுத்தும் வகையில் இச்செயற்பாடு இடம்பெறுகின்றதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நல்லூர் மாநகர சபைக்கு உட்பட்ட கிட்டு சிறுவர் பூங்கவின் சிறுவர்களுக்குரிய விளையாட்டு உபகரணங்கள் அழிக்கப்பட்டு, இவருக்குரிய மேடை அமைத்து இந்த நிகழ்ச்சி நடப்பது எந்தவொரு உலகத்தமிழர்காளும் தாங்கிக் கொள்ள முடியாத ஈனச்செயலாகும்.