பக்கங்கள்

பக்கங்கள்

28 ஆக., 2012


புலிகளின் தலைவரின் இருப்பிடத்தை பார்வையிட ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் சிங்கள மக்கள
புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இருப்பிடம் என கூறப்படும் இடத்தினை பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் நாள்தோறும் படையெடுத்து வருகின்றனர்.
நீண்ட வரிசையில் காத்து நின்று இதனை பார்வையிடும் சிங்கள மக்கள் பலரும் இதுவரை இப்படியான ஒரு இடத்தினை இதுவரை பார்வையிட்டது இல்லை எனவும், ஒரு விடுதலை போராட்டத் தலைவர் ஒருவரது இருப்பிடம் இவ்வாறுதான் அமைந்திருக்கும் என்பதை தற்போது தான் நேரில் பார்த்து கண்டதாகவும். பிரபாகரனின் வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு காவலரன்களை பார்த்து தாம் வியப்படைந்தாக தெரிவித்தனர்.
வடபகுதிக்கு விஜயம் செய்வதற்கு முக்கிய காரணம் விடுதலைப் புலிகளின் தலைவரின் இருப்பிடத்தை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசையில் வந்ததாகவும் தற்போது நிறைவேறியுள்ளதாகவும் கூறிச் செல்கின்றனர்.