பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2012


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை முஸ்லிம் சமூகத்தை விற்க தலைமை முயல்கிறது: பைஸர் முஸ்தபா
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை மறந்து இன்றைய தலைமை பணத்திற்காகவும் பதவிக்காகவும் முஸ்லிம் சமூகத்தை விற்பதற்கு தயாராகி விட்டது என பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்த பெருந்தலைவர் அஸ்ரப் எனது தந்தையுடன் மிகவும் நெருக்கமானவர். அவர் கட்சியை ஆரம்பித்து சமூகத்தின் கல்வி வளர்ச்சி, தொழில் வளங்கள், உட்கட்டமைப்பு, அபிவிருத்தியென்று பல அபிவிருத்திகளை செய்தார்.
ஆனால் இன்றையத் தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் கட்சியில் இருந்த சமூக சிந்தனையாளர்களை வெளியேற்றினார். அது இன்றும் தொடர்கின்றது.
சமூகத்தை விற்று அரசியல் செய்வது தவறாகும். சமூகத்தின் நலனுக்காகவும் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் வேண்டித்தான் அரசியல் செய்ய வேண்டுமே தவிர சமூகத்தை விற்று நம்மை வளர்ப்பதற்காக அரசியல் செய்வது தவறாகும் என்று தெரிவித்தார்.