பக்கங்கள்

பக்கங்கள்

25 ஆக., 2012


யாழ்.வந்த அகாஷி சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான குழுவிடம் தற்போதய நிலவரம் தொடர்பில் கேட்டறிந்தார்
ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான குழுவினருக்கும் இடையில் சந்திப்பொன்று யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
 
இன்றைய தினம் யாழிற்கு விஜயத்தினை மேற்கொண்ட அகாஷி குழுவினரை யாழ். ஆயர் காலை 11.30 மணிக்கு ஆயர் இல்லத்தில்  வரவேற்றார்.
 
அதனையடுத்து யுத்தத்திற்குப் பின்னரான யாழ். நிலவரம் தொடர்பில் பேசப்பட்டது. மதத்தலைவர்கள் மற்றும் சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான குழுவினரும் இன்றைய யாழ். நிலவரம்  தொடர்பிலும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து  தமிழர்களுக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தர ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். 
 
இதன் போது யசூசி  அகாசியுடன் இலங்கையின் ஜப்பானுக்கான தூதுவர், ஜப்பானிய தூதரக பிரதிநிதிகள், உட்பட மதத்தலைவர்களான நல்லை ஆதீனக்குரு முதல்வர் சோமசுந்தர தேசிய ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, யாழ். நாகவிகாராதிபதி மீஜய யந்துரே சிறி விமலதேரர் மற்றும் மௌலவி சுபியான் ஆகியோரும் , வணிகர் கழகத் தலைவர் ஜெயசேகரம் ஆகியோர் எனப் பலர் கலந்து கொண்டனர்