பக்கங்கள்

பக்கங்கள்

15 ஆக., 2012


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு நீதிமன்றம் தடை
உள்ளூராட்சி சபைகளில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அந்தக் கட்சியின் தலைமைக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நுவரெலிய பிரதேச சபையின் உறுப்பினரான அமிர்தீன் அப்துல் ஹபீஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவின் மீதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தம்மை கட்சியில் இருந்து விலக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறியே மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரணை செய்த கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இத்தடையினை விதித்துள்ளது.