பக்கங்கள்

பக்கங்கள்

14 ஆக., 2012


என்னுடைய கனவுகள் நிறைவேறும் வரை உங்களை அரவணைத்துபோராடுவேன் :டெசோ மாநாட்டில் கலைஞர் பேச்சு
சென்னையில் டெசோ அமைப்பின் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. திமுக பிரமுக ர்கள், வெளிநாட்டுப்பிரதிநிதிகள், ஈழ ஆதரவாளர்கள் இம்மாநாட்டில்
பங்கேற்று உரையாற்றினர்.    திமுக தலைவர் கலைஞர் இம்மாநாட்டில் நிறைவுரையாற்றினார்.

அவர் தனது உரையில்,  ‘’இலங்கையிலே அந்த அபலைகளுக்கு, அனாதைகளாக விடப்பட்டவர் களுக்கு, கற்பிழந்தவர்களாக, ஏழ்மையால் எலும்புக்கூடுகளாக தெருவோரத்திலே கிடக்கின்ற   தமிழர் களுக்கு நாம் உதவ வேண்டும்.  அந்த  தமிழர்களுக்கு ஒரு சகோதரன் சகோதரிக்கு உதவுவது போல, ஒரு தாய் தன் பிள்ளைக்கு செய்வது போல, உதவுவதற்கு  தயாராக இருக்கிறோம் என்பதை காட்டுவதற்கு தான் டெசோ மாநாடு நடத்தப்படுகிறது. பல தடைகள் நீங்கிய பின்னர் மாநாடு நடைபெறுகிறது.
 மாநாடு முடிந்த பின்னர் 10 நாட்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, டெசோ தலைவர்கள், இலங்கை மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் குறித்து பேசி, தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுத்தர வேண்டும்.


அந்நிய நாடான இலங்கையில் அமைதி நிலவுவதற்கு பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. மத்திய அரசு, இலங்கையில் நிகழ்வுகளை கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்பதை மாநாடு சுட்டி காட்டுகிறது.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தங்கள் விரும்பும் அரசியல் தீர்வுகளை தாங்களே முடிவு செய்து கொள் ளும் வகையில் அவர்களுக்கு அதிகாரம் தர ஐ.நா.,வில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தீர்மானம் தான்.

டெசோ மாநாடு மூலம் இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். உதவி செய்து கொண்டிருக்கிறோம். என்னுடைய கனவுகள் நிறைவேறும் வரை உங்களை அரவணைத்துபோராடுவேன்’’ என்று குறிப்பிட்டார்.