பக்கங்கள்

பக்கங்கள்

25 ஆக., 2012

கொழும்பு - யாழ். பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!- ஒருவர் பலி! 11 பேர் படுகாயம்
 
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி வந்த அரச பேருந்து ஒன்றும், வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் - அனுராதபுரம் வீதியிலுள்ள 5ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை 1.45 மணியளவி் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.