பக்கங்கள்

பக்கங்கள்

23 ஆக., 2012


கருணா‌நி‌தி‌யி‌ன் கள‌ங்க‌த்தை துடை‌க்க நடத்திய நாடகமே டெசோ மாநாடு!- பொன்.ராதாகிருஷ்ணன்
தி.மு.க. நடத்திய டெசோ மாநாட்டின் நோக்கம் இலங்கை தமிழர்களின் பாதுகாப்புக்காக அல்ல, கருணாநிதி தன்மீதான களங்கத்தை துடைக்க நடத்திய நாடகம் எ‌ன்று பா.ஜ.க மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கு‌ற்ற‌ம்சா‌ட்டியு‌ள்ளா‌ர்.
சென்னையில் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல்,
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உறுதுணையாக இருந்தது காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசுதான் எ‌ன்றா‌ர்.
மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் நட‌த்த‌ப்பட இரு‌ந்த போராட்டத்தை தி.மு.க. கைவிட்டு இரு‌ப்பது ஒ‌ன்று‌‌ம் ஆச்சரியப்படுவதற்‌கி‌‌ல்லை எ‌ன்றா‌ர்.
தி.மு.க. நடத்திய டெசோ மாநாட்டின் நோக்கம் இலங்கை தமிழர்களின் பாதுகாப்புக்காக அல்ல, கருணாநிதி தன் மீதான களங்கத்தை துடைக்க நடத்திய நாடகம் எ‌ன்று‌ம் பொ‌ன்.ராதா‌கிரு‌ஷ்ண‌ன் கு‌ற்‌ற‌ம்சா‌ட்டினா‌ர்.