பக்கங்கள்

பக்கங்கள்

7 ஆக., 2012


புகையிரத மலசலகூடத்தில் பெண் மீது துஷ்பிரயோகம்! மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம் ஒன்றின் மலசலகூடத்தில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் கீழ் மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிக்கையில்,
குறித்த புகையிரதத்தின் மலசலகூடத்தில் இருந்த ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மூன்று ஆண்களும் இராணுவச் சிப்பாய்கள் எனவும் அவர்கள் தியத்தலாவை இராணுவ முகாமிற்கு பயிற்சிக்காக சென்றவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பவம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது, குறித்த பெண் விருப்பத்துடன் ஆண்கள் மூவருடன் மலசலகூடத்தில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.