பக்கங்கள்

பக்கங்கள்

15 ஆக., 2012


சுன்னாகம் நகரப் பகுதியில் தீ விபத்து - பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்
சுன்னாகம் நகரப் பகுதியில் இன்றிரவு  தீடீரென ஏற்பட்ட தீயினால் மின்சார உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை தீக்கிரையானதுடன், பல இலட்சம் பெறுமதியான பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது. 
இரவு 8.45 கடையை பூட்டிவிட்டு உரிமையாளர் சென்றுள்ளார். இதன் பின்னராக கடையினுள் இருந்து புகை வருவதைக் கண்ட அயல் கடைக்காரர் உடனடியாக கடையின் உரிமையாளருக்கு தொலைபெசி மூலம் தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து வந்த உரிமையாளர் கடையை திறந்த போது கடையின் உட்புறத்தில் தீ பற்றியெறிவதைக் கண்டு உடனடியாக அயல் கடைக்காரர்கள் மற்றும் அப்பகுதயில் உள்ள இளைஞர்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.
துரிதமாக செயற்பட்டமையால் அருகில் உள்ள பல கடைகள் காப்பற்றப்பட்டதுடன், மேலும் தீ பரவாமலும் தடுக்கப்பட்டது.
காங்கேசன்துறை வீதியில் உள்ள கடையே தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.
இதற்க்கான காரணம் தெரிய வராத போதிலும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உரிமையாளரினால் முறையிடப்பட்டுள்ளது.