பக்கங்கள்

பக்கங்கள்

21 ஆக., 2012


யாழில் அமெரிக்கா தூதுவராலயக் குழுவினர், த.தே.கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்களை சந்திப்பு
அமெரிக்கா தூதுவராலயத்தின் மூவர் அடங்கிய குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்களுக்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு இன்று பி.ப.5.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் நில ஆக்கிரமிப்பு, தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலை அமைத்தல், மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.