பக்கங்கள்

பக்கங்கள்

7 ஆக., 2012


வல்வெட்டித்துறையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டைச் சுற்றியிருந்த இராணுவத்தினர் வெளியேற்றம்
வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டின் அருகில் இராணுவத்தினர் அமைத்திருந்த இராணுவ முகாமைவிட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
வல்வெட்டித்துறையில் முன்னர் பிரபாகரனின் வீடு அமைத்திருந்த இடத்தில் வீட்டைச் சுற்றி இராணுவத்தினர் முகாம்களை அமைத்திருந்தனர்.
இந்நிலையில் அவ்வீட்டினை சிங்கள மக்கள் தொடர்ச்சியாக வந்து பார்வையிட்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபாகரனின் வீட்டினை இராணுவத்தினர் முற்றாக இடித்ததோடு இடித்தவற்றையும் அள்ளிச் சென்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரபாகரனின் வீட்டை இராணுவத்தினர் கடுமையாக கண்காணித்தும் வந்தனர். இந்நிலையிலேயே பிரபாகரனின் வீட்டைச் சுற்றி இராணுவத்தினர் அமைத்திருந்த முகாம்களை விட்டு இன்று வெளியேறிச் சென்றுள்ளனர்.