சென்னையில் வரும் 12ம் திகதி ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கான மாநாடு கருணாநிதியின் டெசோ அமைப்பால் நடத்தப்படுகின்றது.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள வரும் கட்சித் தொண்டர்கள், திமுகவின் கொடிகளையோ, கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களையோ கண்டிப்பாக கொண்டு வரக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், மாநாட்டில் கட்சிகள் பற்றிய ஒலி முழக்கங்களோ, கோஷங்களையோ எழுப்பக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். |