பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2012

ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கை சமர்பித்தது இலங்கைமனித உரிமை நிலைமை 

குறித்த அறிக்கையை இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சமர்பித்துள்ளது.ஜெனீவாவில் அடுத்த மாதம் அகில கால மீளாய்வு அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை இந்த அறிக்கையை ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்துள்ளது.
மனித உரிமையை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
உறுப்பு நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவையும் அகில கால மீளாய்வு அமர்வுகளின் போது கவனம் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
(அத தெரண – தமிழ்)