பக்கங்கள்

பக்கங்கள்

5 ஆக., 2012

திருகோணமலையில் இந்திய வர்த்தக வலயம்
திருகோணமலையில் இந்திய வர்த்தக வலயமொன்று அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையில் விசேட இந்திய வர்த்தக வலயமொன்றை அமைப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வலயத்தில் இந்திய கைத்தொழில் உற்பத்தி நிறுவனங்கள் நிறுவப்பட உள்ளன.
இந்த வர்த்தக வலயத்தை அமைப்பது தொடர்பான யோசனைத் திட்டங்களை முன்வைப்பதற்காக இரு நாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்குள் இந்தக் குழு பரிந்துரைகளை முன்வைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும், இலங்கை அரச தரப்பினருக்கும் இடையில் இந்த விசேட வர்த்தக வலயம் அமைக்கும் திட்டம் குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது.