பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2012

லண்டன் ஒலிம்பிக் டென்னிசின் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-சானியா மிர்சா ஜோடி, பெலாரஸ் நாட்டின் மேக்ஸ் மிர்னியி-விக்டோரியா அசாரென்கா ஜோடியை எதிர்கொண்டது.


இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 5-7 என பயஸ்-சானியா ஜோடி, பெலாரஸ் ஜோடியிடம் இழந்தது. தொடர்ந்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் பெலாரஸ் ஜோடி 3-2 என முன்னிலையில் இருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.


தொடர்ந்து வெளிச்சமின்மை நிலவியதால் போட்டி இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி பயஸ்-சானியா ஜோடி 5-7, 2-3 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது